ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே பீரோ மாதிரி ஒரு பெட்டி ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா?

இந்திய ரயில்வே உலகின் 4வது மிகப்பெரிய நெட்வோர்க், இந்தியாவிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். சுமார் 4 கோடி பேர் இந்தியாவில் ஒரு நாளுக்கு ரயிலில் மட்டும் பயணம் செய்கின்றனர். இந்தியாவிலேயே சொகுசான அதே நேரத்தில் விலை குறைவான ஒரு போக்குவரத்து வாகனம் என்றால் ரயில் தான்.

ரயில்வே என்ஜினியரிங்கிள் பல அற்புதமான விஷயங்கள் இருக்கிறது. நம் ரயில் பயணத்தின் போது அடிக்கடி கண்ணால் பார்த்தும் கூட இது இந்த வேலையைத் தான் செய்கிறது என்பதை அறியாமல் இருப்போம். அது தெரியவந்தால் இப்படியெல்லாம் கூட கருவிகள் இருக்கிறதா என்று நமக்குத் தோன்றும். அப்படி ஒரு விஷயத்தைத்தான் நம் தற்போது பார்க்கப்போகிறோம்.

ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே பீரோ மாதிரி ஒரு பெட்டி ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா?

நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது ரயில் ஊரை விட்டு வெளியில் ஓட துவங்கும் போது ஆங்காங்கே ரயில்வே பாதைக்கு அருகே நம் வீட்டில் உள்ள குட்டி பீரோ மாதிரியாக அலுமினிய நிறத்தில் ஒரு பெட்டி ஒன்று இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பலர் இது ஏதோ ரயில்வே தண்டவாளங்களுக்கான சாதனைகளை வைக்கும் பெட்டி என நினைத்துக்கொண்டிருப்பார்கள். பலர் இதை யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த பெட்டிதான் ரயில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது தான் நிஜம். இந்த அலுமினிய நிற பெட்டிக்கு ஆக்ஸில் பாக்ஸ் கவுண்டர் என்று பொருள். இந்த ஆக்ஸில் பாக்ஸ்கள் ரயில் பாதையில் ஒவ்வொரு 3 அல்லது 5 கி.மீக்கு ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.

ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே பீரோ மாதிரி ஒரு பெட்டி ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா?

இந்த ஆக்ஸில் பாக்ஸின் வேலை ரயில் பெட்டிகளை எண்ணுவது தான். அதாவது ரயில் நிலையத்திலிருந்த கிளம்பும் போது ஒரு ரயில் 10 பெட்டியுடன் கிளம்புகிறது என வைத்துக்கொள்வோம். இது தொடர்ந்து 10 பெட்டிகளுடன் செல்கிறதா? இடையில் ஏதாவது பெட்டி கழன்று விடுகிறதா என்பதைக் கண்காணிக்கும் கருவிதான் இது.

எது எப்படி ரயில்வே தண்டவாளத்தின் பக்கவாட்டில் இருந்து கொண்டு ரயில் பெட்டிகளை எண்ணுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வருவது இயல்பு தான். இந்த பெட்டி எதை எண்ணுவதில்லை நன்றாகக் கவனித்தீர்கள் என்றால் இந்த பெட்டிலிருந்து ஒரு வயர் ரயில்வே தண்டவாளத்தை நோக்கி வரும். இதற்கென ரயில் தண்டவாளத்தில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

ரயில்வே தண்டவாளத்தில் பொருத்தப்பட்ட கருவி ரயில் அந்த வழியாகச் செல்லும் போது ரயில் சக்கரம் அதில் அழுத்தி அந்த கருவி அமுங்கும். இப்படியாக எத்தனை முறை ரயில் சக்கரங்கள் அந்த கருவியை அழுத்துகிறது என்ற கணக்கை இந்த அலுமினிய நிறத்தில் உள்ள பெட்டி கணக்கெடுக்கும். இதன் மூலம் பெட்டிகளை இந்த கருவி கண்காணிக்கும்.

ரயில் குறிப்பிட்ட பெட்டி இருக்கும் பகுதிக்கு வரும் முன்னரே முந்தைய ஆக்ஸில் கவுண்டர் பெட்டியில் எத்தனை சக்கரங்கள் வந்தது என்ற எண்ணிக்கையை இந்த பெட்டிக்கு அனுப்பி விடும். முந்தைய ஆக்ஸில் கவுண்டர் அனுப்பிய தகவலை விட தற்போது பதிவாகத் தகவல் குறைவாக இருந்தால் இடையில் ஏதோ பெட்டி கழன்றுள்ளது எனப் பொருள்.

உடனடியாக இந்த ஆக்ஸில் கவுண்டர் அருகில் உள்ள சிக்னல் கண்ட்ரோல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கும். அந்த தகவலை வைத்துச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கத் துவங்கிவிடுவார்கள். ஒருவேளை ரயில் விபத்துக்கள் நடந்தாலும் அது குறித்து விசாரணை நடத்த இந்த தகவல்கள் உதவும்,

அதிகபட்சம் 5 கி.மீ ஒரு ஆக்ஸில் கவுண்டர் பெட்டியாவது இருக்கவேண்டும் என்பது ரயில்வே நிர்வாகத்தின் விதி. ரயில்வே இன்ஜினியர்கள் ஒவ்வொரு இடத்தின் தன்மை மற்றும் தேவையைப் பொருத்து இந்த ஆக்ஸில் கவுண்டர் பெட்டியைப் பொருத்தியுள்ளனர். இதுதான் இந்த குட்டி பீரோ போன்ற அலுமினிய நிற பெட்டியாகும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 17, 2023, 12:40 [IST]
English summary
How Indian railway axle counter box works in the track
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+