இந்திய இரயில்களை பார்த்து எல்லா நாடுகளும் வாய் பிளக்க போகுது! இது மட்டும் நடந்துடுச்சுனா நிறைய கஷ்டம் தீரும்!

இந்திய போக்குவரத்தின் முதுக்கெலும்பாக இரயில்வே (Railway) போக்குவரத்தை சொல்லலாம். அந்த அளவிற்கு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கிலான மக்கள் இந்தியன் இரயில்வேயை பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேற்ப, இந்தியன் இரயிவேயின் தரமும் கடந்த 10 ஆண்டுகளில் பல விதங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. வந்தே பாரத் (Vande Bharat) போன்ற அதிவேகமான இரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அதற்கேற்ப இரயில் நிலையங்களின் தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிவிரைவான இரயில்கள் எந்தவொரு தாமதமும் இன்றி செல்வதற்காக ஆங்காங்கே தண்டவாள பாதைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

indian railways changed

இதனால், இரயில் பயணத்தில் குலுக்கல்கள் மற்றும் அதிர்வுகள் முன்பு இருந்ததை காட்டிலும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இரயிலுக்குள் ஆர்டர் செய்த உணவுகள் இருக்கைக்கே வந்து வழங்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இரயிலுக்குள் ஏடிஎம் (ATM) வசதியும் வந்துவிட்டது. இவ்வாறு கடந்த 10 வருடங்களில் இந்திய இரயில் போக்குவரத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை பற்றி தான் இனி விரிவாக பார்க்க போகிறோம்.

இரயிலில் ஏடிஎம்: பயண நேரத்தை விரைவாக்கும் பொருட்டும், தேவையில்லாத அலைச்சல்களை குறைக்கும் பொருட்டும் இரயில்களிலேயே ஏடிஎம் எனப்படும் வங்கி பணத்தை பெறும் வசதியை இந்தியன் இரயில்வே கொண்டு வருகிறது. இந்த திட்டம் தற்போதைக்கு மிகவும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது. தற்போதைக்கு மும்பை- மன்மத் இடையேயான விரைவு இரயிலில் மட்டுமே ஏடிஎம் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏடிஎம்-கள் இல்லாத குறு நகரங்கள் மற்றும் கிராம புற பகுதிகளுக்கு இரயிலில் செல்லும்போது, ஏடிஎம் -ஐ தேடி அலைவதை தவிர்க்க இரயிலுக்குள் ஏடிஎம் திட்டம் அவசியமானதாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலான மக்கள் இரயில் என்கிற குறுகிய இடத்திற்குள் இருப்பதால், அங்கு ஏடிஎம்களை நிறுவுவது வங்கிகளுக்கும் இலாபக்கரமான முடிவாக இருக்கும்.

இருக்கைக்கே தேடி வரும் உணவு: ஒரு காலத்தில் இரயில் பயணம் என்றாலே கட்டுக்கட்டாக உணவுகளை வீட்டில் இருந்தே எடுத்து செல்லும் பழக்கம் இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் அந்த பழக்கம் மக்களிடையே பெரிய அளவில் குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், இரயிலுக்கு உள்ளேயே உணவை தயாரித்து பயணிகளுக்கு வழக்க இரயில்வே நிர்வாகம் ஆரம்பித்தது ஆகும்.

இவ்வாறு, இரயிலுக்கு உள்ளேயே உணவை சமைத்து பயணிகளுக்கு வழங்கி, அதற்கான கட்டணத்தை பெற்றுக் கொள்வதை கடந்த பல வருடங்களாகவே இந்தியன் இரயில்வே மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஆரம்பத்தில் இரயில்வே நிர்வாகத்தின் இந்த சேவையை தவறாக பயன்படுத்தி சிலர் மோசடி செய்ய ஆரம்பித்தனர். இது ஒரு கட்டத்திற்கு மேல் இந்தியன் இரயில்வேக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

ஆனால், எப்போது இணையத்தின் வளர்ச்சி அதிகரித்து அனைவரிடத்திலும் மொபைல் போன் வர ஆரம்பித்ததோ அப்போதே இந்த மோசடிகளும் குறைய ஆரம்பித்துவிட்டன. இதனாலேயே இரயில் பயணத்தின்போது உணவை பெற தங்களது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் அல்லது மொபைல் செயலியை மட்டும் பயன்படுத்துமாறு இந்தியன் இரயில்வே நிர்வாகம் அறிவுறுத்துகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC)இல் இரயில் டிக்கெட் (Ticket) உடன் சேர்த்து உணவையும் ஆர்டர் செய்தால் இருக்கைக்கே வந்து இரயில்வே ஊழியர்கள் உணவை வழங்குகின்றனர். இதற்கு நீங்கள் உங்களது பி.என்.ஆர் (PNR) எண்ணை உள்ளிட வேண்டும். இதற்காக, 'இரயில்ரெஸ்ட்ரோ' (Railrestro), 'இரயில்மித்ரா' (Railmitra) மற்றும் 'டிராவல்கானா' (Travelkhana) போன்ற மொபைல் செயலிகளை இந்தியன் இரயில்வே நடத்தி வருகிறது.

www.ecatering.irctc.co.in என்கிற இணையத்தள பக்கத்தின் மூலமாகவும், 1323 என்கிற எண்ணிற்கு மொபைல் போனில் அழைத்தும் இரயில் பயணத்தின்போது கட்டணத்துடன் உணவை பெறலாம். இந்த சேவை ஆனது சென்னை, மும்பை, டெல்லி உள்பட இந்தியாவின் முக்கியமான சுமார் 300 நகரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் இந்தியன் இரயில்வே துவங்கிய இந்த உணவு பரிமாறும் திட்டத்தில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற மாதிரியான உணவு வகைகள் இடம்பெறுள்ளன.

'ஸ்வரைல்' மொபைல் செயலி (Swarail Mobile App): இந்தியன் இரயில்வே சார்பில் IRCTC இரயில் கனெக்ட், யுடிஎஸ் (UTS) என பல்வேறு மொபைல் செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் பெற ஸ்வரைல் என்கிற மொபைல் செயலியை இரயில்வே நிர்வாகம் வழங்குகிறது. சி.ஆர்.ஐ.எஸ் (CRIS) மற்றும் IRCTC இணைந்து உருவாக்கிய இந்த ஸ்வரைல் செயலி மூலமாக டிக்கெட்களையும் பெறலாம்.

முன்பதிவு மற்றும் முன்பதிவு-அல்லாத டிக்கெட்கள் மட்டுமின்றி, பிளாட்ஃபார்ம் டிக்கெட் மற்றும் பார்சல் கொண்டு செல்வதற்கான சேவையையும் கட்டணத்தை செலுத்தி பெறலாம். மேலும், இரயில் & பிஎன்ஆர் குறித்த புகார்களை 'இரயில் மேடட்' (Rail Madad) வாயிலாக ஸ்வரைல் மொபைல் செயலியில் தெரிவித்து, அதற்கான விளக்கங்களை பெறலாம். ஸ்வரைல் மொபைல் செயலி இன்னமும் இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளது.

இரயில் டிரைவர்களாக பெண்கள்: இன்றைய கால இந்தியாவில் பெண்கள் பல துறைகளில் முன்னேறி விட்டனர். கார், பஸ் டிரைவர்கள் மட்டுமின்றி, கனரக லாரியை ஓட்டும் பெண்களை கூட அன்றாட வாழ்வில் பார்க்க முடிகிறது. லாரிக்கு அடுத்து என்ன? இரயில் தான். கடந்த 10 வருடங்களில் மட்டும் பெண் இரயில் லோகோ பைலட்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் வெறும் 371 ஆக இருந்த பெண் லோகோ பைலட்களின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 1,828 ஆக உள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 222 பெண் லோகோ பைலட்கள் உள்ளனர். 2014இல் இந்த எண்ணிக்கை வெறும் 36 ஆகும். தமிழ்நாட்டில் 180 பெண் லோகோ பைலட்கள் தற்சமயம் பணியாற்றுகின்றனர்.

புதிய இரயில்கள்: பசுமையான சுற்றுச்சூழலை கொண்டுவர விரும்பும் மத்திய அரசு, 2030ஆம் ஆண்டிற்குள் உலகின் மிக பெரும் எலக்ட்ரிக் இரயில் சேவையை கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவதை இலக்காக கொண்டுள்ளது. அதேநேரம், பல காலமாக இரயில் சேவை இல்லாமல் இருந்துவந்த வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு இரயில் சேவையை கொண்டுவந்ததுடன், சிங்கிள்-லேன் பாதைகளை சமீப காலத்தில் அதிக இடங்களில் டபுள்-லேன்களாக இந்தியன் இரயில்வே மாற்றியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு ஒவ்வொரு முறை பொது பட்ஜெட்டை அறிவிக்கும் போதும் அதில் இரயில்வேக்கு என பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது. ஆனால், இன்னமும் நம்மால் மிக அதிவிரைவான புல்லட் இரயில்களுக்கு (Bullet Rail) மாற முடியவில்லை. மும்பை- அகமதாபாத் இடையே புல்லட் இரயில் சேவை அமைக்கப்பட்டு வந்தாலும், தற்போதைக்கு இந்தியாவில் புல்லட் இரயில் சேவை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2025, 8:00 [IST]
English summary
How indian railways changed train travel experience in just last 10 years
மேலும்... #indian railways
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+