இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றப்போகும் ஆதித்யா எல்1! சோலார் காரை தயாரிக்க இது எப்படி உதவும் தெரியுமா?
சூரிய சக்தியில் இயங்கும் கார்களின் சகாப்தம் இந்தியாவின் ஆதித்யா எல் 1 திட்டத்தால் கணிசமாக முன்னேற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. பூமியின் காலநிலையில் சூரியனின் தாக்கம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் தொழில்நுட்பம் பற்றிய நுண்ணறிவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஆதித்யா எல்1: இந்தியாவின் முதல் சோலார் மிஷன்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனின் கரோனாவை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 என்ற விண்கலம் தனது முதல் சூரியப் பயணத்தை தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்துள்ளது நாளை காலை 11:05 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் கார்கள்: இந்த ஆதித்யா எல் 1 மூலம் பெறப்பட்ட அறிவியல் தரவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், குறிப்பாக சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோமொபைல்களில் புதுமைக்கான வழிகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சோலார் வாகனங்களில் பெரும் புரட்சி நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
சூரிய கதிர்வீச்சைப் புரிந்துகொள்வது: வாகனங்களில் பயன்படுத்தப்படும் சோலார் பேனல்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் - சூரிய கதிர்வீச்சை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இந்த ஆதித்யா எல் 1 விண்கலத்தின் தகவல்கள் உதவும். இதற்கான ஏற்பாடுகளுடன் தான் ஆதித்யா எல் 1 விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

சூரிய சக்தியை திறம்பட பயன்படுத்துதல்: ஆதித்யா L1 இன் கண்டுபிடிப்புகள், மின்சார வாகனங்களை இயக்குவதற்கு முக்கியமான சூரிய மின்கலங்கள் மற்றும் பேட்டரிகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். இதனால் தற்போது உள்ள பேட்டரி மற்றும் பேனல்களை விட அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் பேனல்களை நம்மால் உருவாக்க முடியும்.
சோலார் வாகனத் தொழிலை மேம்படுத்துதல்: இது இந்தியாவின் வளர்ந்து வரும் சோலார் வாகனத் தொழிலின் வளர்ச்சியை உயர்த்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போக்குவரத்து பிரிவில் மிகப்பெரிய அளவில் புரட்சியை செய்து இந்தியாவை சோலார் வாகன தயாரிப்பில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நாடாக நிலைநிறுத்தலாம்.
கொள்கை விதிமுறைகளில் செல்வாக்கு: அதித்யா எல்1 மிஷன் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் சோலார் வாகனங்கள் உற்பத்தியின் விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் தொடர்பான கொள்கை விதிமுறைகளை மாற்றியமைக்ககூட உதவலாம். இதன் மூலம் இந்தியா சூரியனை மிகவும் துள்ளியமாக புரிந்து கொள்ள முடிவதால் அதிக திறன் கொண்ட சோலார் வாகனங்களை உருவாக்க முடியும்.
மின்சார வாகனங்கள் (EVகள்) Vs சூரிய சக்தியில் இயங்கும் கார்கள்: ஆதித்யா எல்1 மிஷன் செயற்கை நுண்ணறிவு EVகள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் கார்களுக்கு இடையே ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வை வழங்க முடியும், இது அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளும் படியாவும் மற்றும் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் மாற்றியமைத்து நம் பயன்பாட்டை மேம்படுத்த உதவும்.
சோலார் கார்களின் எதிர்காலம்: ஆதித்யா எல் 1 சோலார் கார்களின் எதிர்காலத்தை அவற்றின் திறன், குறைவான செலவில் இயங்குதல் மற்றும் இந்தியாவிற்கு ஏற்ற சூழ்நிலையில் இயங்கும் விதமான தயாரித்தை மற்றும் இதை கணிசமாக மேம்படுத்துவதன் மூலம் சிறப்பாக வடிவமைக்க முடியும். இதனால் ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியே ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆதித்யா எல் 1 விண்களமானது அறிவியல் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் திறன் கொண்டது.; இது இந்தியாவின் சூரிய சக்தியில் இயங்கும் கார்களின் மூலம் எதிர்காலத்தில் புரட்சியை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. சோலார் வாகன கொள்கை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் நுகர்வோர் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவற்றை முடிவு செய்ய இது நிச்சயம் பெரிய அளவில் உதவியை செய்கிறது.


Click it and Unblock the Notifications