எலெக்ட்ரிக் ரயில்கள் பயணம் செய்ய எவ்வளவு கரெண்ட் செலவாகும் தெரியுமா?
இன்று இந்திய ரயில்வே நிர்வாகம் பெரும்பாலும் எலெக்ட்ரிக் இன்ஜினை தான் ரயிலை இழுத்துச் செல்ல பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ரயில்வே தடங்களில் பெரும்பாலான பகுதி மின்மயமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எலெக்ட்ரிக் ரயிலில் பயணம் செய்யும் பலருக்கும் இந்த எலெக்ட்ரிக் ரயில் இயங்குவதால் எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற கேள்வி இருக்கும். பலருக்கு இது குறித்த பதில் தெரியாமல் இருக்கும். இந்த பதிவில் நாம் எலெக்ட்ரிக் ரயில் எவ்வளவு மின்சாரத்தை செலவு செய்து இயங்குகிறது என்ற விவரங்களை தான் காண போகிறோம்.
பிரிட்டிஷ்காரர்கள் ரயிலை கண்டுபிடித்த போது அந்த ரயில் நீர் ஆவி மூலம் இயங்கியது. நீராவியை உருவாக்கி அதிலிருந்து அதிக அழுத்தத்தை உருவாக்கி, அதன் மூலம் ரயில் இயக்கினார்கள். பின்னர் டீசல் மூலம் இயங்கும் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில் தான் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் இந்த ரயிலும் அதிகமான மாசு ஏற்படுத்துவதால் இதையும் நிறுத்திவிட்டு எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் ரயிலை உருவாக்கி பயன்படுத்தி வருகிறோம்.

இந்தியாவில் பெரும்பாலான ரயில் தடங்களில் எலெக்ட்ரிக் ரயில்கள் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இப்படியாக எலெக்ட்ரிக் ரயிலில் பயணம் செய்யும்போது நாம் இந்த ரயில் பயணம் செய்வதற்கு எவ்வளவு எரிபொருளை செலவு செய்யும் என்ற கேள்வி நமக்கு இருக்கும். இதற்கு நேரடியாக பதில் இல்லை என்றாலும் உத்தேசமாக இதை நாம் கணக்கிட முடியும். ஒரு ரயில் எவ்வளவு கரண்டை பயன்படுத்துகிறது என்பது ரயில் எவ்வளவு நீளம் இருக்கிறது? எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது? எவ்வளவு எடை ரயிலுக்குள் இருக்கிறது என்பதை பொறுத்து மாறுபடுகிறது.
இருந்தாலும் உத்தேசமான ஒரு கணக்கை நம்மால் போட முடியும். ஒரு ரயில் நின்று கொண்டு இருக்கும் நிலையில் இருந்து குறிப்பிட்ட வேகம் செல்லும் வரை அதிகமான கரண்டை செலவு செய்ய வேண்டியது இருக்கும். அதே நேரம் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் தொடர்ந்து அந்த ரயில் பயணிக்கும் போது குறைவான கரண்ட் தான் செலவு செய்யும். அதே நேரம் ரயிலின் வேகம் குறையும் போதும் அது பயன்படுத்தும் கரண்ட் அளவில் மாறுபாடு இருக்கும்.

நாம் உத்தேசமாக கணக்கிட்டு பார்க்கும்போது சென்னை போன்ற நகரங்களில் இயங்கும் எலெக்ட்ரிக் லோக்கல் ரயில்கள் ஒரு கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு 1.5 கிலோ வாட் ஹவர் செலவு செய்வதாக தெரிய வருகிறது. இந்த ரயில் குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டது. அதேபோல நீளமும் அதிகமாக இருக்காது. ரயிலுக்குள் இருக்கும் எடையும் குறைவாக இருக்கும்.
அடுத்ததாக பயணிகள் பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு கிலோ மீட்டருக்கு மூன்று முதல் நான்கு கிலோ வாட் ஹவர் கரண்டை பயன்படுத்துகிறது. இந்த பயன்பாடு என்பது ரயிலுக்கு ரயில் மாறுபடும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் மஞ்சள் நிற ஐசிஎஃப் பெட்டிகள் அதிக எடை கொண்ட பெட்டிகளாக இருக்கும் நிலையில், அதுவும் மூன்று முதல் நான்கு கிலோ வாட் ஹவர் கரண்டை தான் செலவு செய்யும். ஆனால் வேகம் குறைவாக இருக்கும்.

அதேநேரம் எடை குறைவான எல்எச்பி பெட்டிகளை பயன்படுத்தும் ரயில்களும் இதே மூன்று முதல் நான்கு கிலோ வாட் ஹவர் பவரை தான் ஒரு கிலோ மீட்டருக்கு செலவு செய்யும். ஆனால் இதன் வேகம் அதிகமாக இருக்கும். இதை கணக்கிட்டு தான் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களுக்கு எல்ஹெச்பி ரக பெட்டிகளையும் மற்ற சாதாரண ரயில்களுக்கு ஐசிஎஃப் பெட்டிகளையும் பொருத்தி ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இரண்டு ரயிலுக்கும் கரண்ட் செலவு ஒரே அளவு தான் இருக்கும்.
அடுத்ததாக சரக்கு ரயில் பொருத்தவரை அதிக எடையை இழுத்துச் செல்லும், அதே நேரம் அதிக பெட்டிகளும் இருக்கும் என்பதால் இதற்கு அதிகமான கரண்ட் செலவாகும். அதே நேரம் சரக்கு ரயில் பயணிகள் ரயில் போல அதிக வேகத்தில் பயணிக்காது குறைவான வேகத்தில் பயணிக்கும் என்பதால் இது ஒரு கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக நான்கு கிலோ வாட் ஹவர் கரண்டை தான் செலவு செய்யும்.
வெறும் ரூபாய் 40 கரெண்ட் செலவில் நூற்றுக்கணக்கான மக்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வைத்து விட முடியும் என்பதால் தான் ரயில் டிக்கெட் தற்போது மற்ற பஸ் அல்லது காருக்கு ஆகும் செலவை விட குறைவாக இருக்கிறது. இது வெறும் கரெண்டுக்கான செலவுதான். அதுவும் நேரடியாக இன்ஜினை இயங்குவதற்காக செலவு செய்யும் கரெண்டுக்கான அளவுதான். ரயிலுக்குள் இருக்கும் லைட், ஃபேன், சார்ஜர் போர்ட்டுகள் ஆகிய இடங்களுக்கு கரெண்ட் செலவு தனியாக கணக்கிடப்பட வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் நாம் கணக்கிட வேண்டியது கிலோ வாட் ஹவர் என்பது நாம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் யூனிட் ஆகும். ஒரு கிலோ ஹவர் என்பது ஒரு யூனிட். அதனால் ரயில்கள் அதிகபட்சமாக ஒரு கிலோமீட்டர் பயணம் செய்ய நான்கு யூனிட்களை மட்டுமே செலவு செய்கிறது என நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் பத்து என வைத்துக் கொண்டாலும் நான்கு யூனிட்டுக்கு 40 ரூபாய் மட்டுமே ரயில்கள் பயணம் செய்ய செலவாகிறது.


Click it and Unblock the Notifications









