ஒரு லிட்டர் பெட்ரோல்/டீசல் விற்பனை செய்தால் டீலர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது தெரியுமா?
பெட்ரோல் பங்க் வைத்து நடத்துபவர்கள் பெட்ரோல் டீசல்களை விற்பனை செய்வது மூலம் எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறார்கள்? இது குறித்த முழு விபரங்களை காணுங்கள்

இன்று பெட்ரோல் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. இன்று வாகனம் இல்லாத நபர்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவு. தினமும் மக்கள் பெட்ரோலை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இதனால் பெட்ரோல் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. இன்று மெதுவாக மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகரத் துவங்கிவிட்டாலும், இன்னும் விற்பனை ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 10 சதவீதம் கூட தொடவில்லை.

கடந்த 2017ம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு டைனமிக் பிரைசிங் முறையில் மாற்றியது. அதாவது அதற்கு முன்பு வரை அரசு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை பெட்ரோல் விலையை மாற்றி வந்த நிலையில் 2017க்கு பிறகு பெட்ரோல் விலை தினந்தோறும் மாற்றப்பெறும் விஷயமாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல்கள் அனைத்தும் டீலர் முறையில் சில்லறை விநியோகம் செய்யப்படுகிறது.

அதாவது ஒவ்வொரு ஊரில் உள்ள நபர்கள் பெட்ரோல் பங்க்களை அமைக்க ஆயில் மார்கெட்டிங் நிறுவனத்திடம் மலராகச் சேர வேண்டும். அப்படியாக மலராகச் சேருபவர்களுக்கு பெட்ரோல் பங்க் வைக்கத் தேவையான அனைத்து பொருட்களையும் ஆயில் மார்கெட்டிங் நிறுவனமே வழங்கும். அந்நிறுவனமே அந்த பெட்ரோல் பங்க்களுக்கு பெட்ரோலை கொண்டு செல்லும் அங்கு விற்பனையாகும் பெட்ரோல்களுக்கு டீலர்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

டீலர்களுக்கு இதற்காக இடம், விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு, விநியோகம் செய்யும் நபர்களுக்கான சம்பளம், மற்றும் பிற வசதிகளைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு டீலருக்கும் சுமார் 20 ஆயிரம் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் டேங்க்கள் பொருத்தப்படும். இதில் 8 ஆயிரம் லிட்டருக்கும் கீழ் பெட்ரோல் குறையும் போது அவர்கள் அடுத்த லோடுக்கு ஆர்டர் போட வேண்டும்.

அப்பொழுது அவர்களுக்கு 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வழங்கப்படும். இப்படியாக நடைமுறை பின்பற்றப்படும். இப்படியாக பெட்ரோலை விற்பனை செய்யும் டீலர்களுக்கு லாபமாக டில்லியில் உள்ள டீலருக்கு ரூ3.78 மற்றும் டீசலுக்கு ரூ2.57 கமிஷனாக கிடைக்கும் மற்ற பகுதிகளில் பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு ரூ2.90 மற்றும் டீசலுக்கு ரூ1.85 கமிஷனாக கிடைக்கும்.

ெதொகையாகும். பெட்ரோல் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த தொகையில் மாற்றம் இருக்காது. கடந்த 2017ம் ஆண்டு இந்த தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த பணத்தின் மூலமே அவர் தன் பெட்ரோல் பங்கில் பணியாற்றுபவர்களுக்குச் சம்பளம், பராமரிப்பு, கரெண்ட்பில் என அத்தனை செலவுகளும் செய்ய வேண்டும். இதற்கிடையில் இந்த பணத்தில் 40 காசு லைசென்ஸ் கட்டணமாகச் செல்லும். இதற்கிடையில் பெட்ரோல் ஆவியாவதால் ஏற்படும் நஷ்டத்தையும் சமாளிக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு நாளுக்கு ஒரு பெட்ரோல் பங்க்கில் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனையானால் டீலருக்கு ரூ15 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். எவ்வளவு அதிகமாக பெட்ரோல் விற்பனையாகிறதோ அதற்குத் தகுந்தார் போல லாபம் கிடைக்கும். தற்போது டீலர்கள் மத்தியில் 2017ல் நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

5 ஆண்டுகளில் வங்கிக் கடன்கள், வட்டிகள், செலவுகள், சம்பள உயர்வு எனப் பல விஷயங்கள் தங்களுக்கு பாராத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கமிஷன் தொகையைக் கூட்ட வேண்டும் என்றும் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை கட்டணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








