உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

ஐட்லிங்கில் இருக்கும்போது கார் எவ்வளவு எரிபொருளை நுகரும்? என்பது தொடர்பாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களில் எரிபொருள் சிக்கனம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக காரை வாங்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்வதில், மைலேஜ் மிக முக்கியமான காரணியாக உள்ளது. ஆனால் இந்திய சாலைகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலால், கார்கள் குறைவான மைலேஜையே வழங்குகின்றன.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

அதாவது போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருப்பதால், நகர சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலைதான் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும்போது, கார் நீண்ட நேரம் ஐட்லிங்கில் (Idling) இருக்க வேண்டிய நிலை உள்ளது. காரின் மைலேஜ் குறைவதற்கு இது ஒரு காரணமாகவும் இருக்கிறது.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

அதிலும் கோடை காலங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டால், கார் ஐட்லிங்கில் இருக்கும்போது ஏசி-யையும் பயன்படுத்தியாக வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் நம்மால் காருக்குள் அமரவே முடியாது. பொதுவாக வெளியில் இருக்கும் வெப்ப நிலையை விட காருக்கும் அதிக வெப்ப நிலை நிலவும். எனவே கோடை காலங்களில் ஏசி இல்லாமல் காருக்குள் அமர்வது கடினம்.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

ஆனால் ஏசி ஆன் செய்து வைக்கப்பட்டிருக்கும்போது கார் ஐட்லிங்கில் இருந்தால், எவ்வளவு எரிபொருளை நுகரும் என என்றாவது ஒரு நாள் நீங்கள் யோசித்து பார்த்துள்ளீர்களா? இந்த கேள்விக்கு விடை சொல்லும் விதமாக யூ-டியூப்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியை, அருண் பன்வார் என்பவர் அவரது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

எதை செயல்படுத்த ஆசைப்படுகிறோம்? என்ற மொத்த திட்டத்தையும் நமக்கு விளக்கும் காட்சிகளுடன் இந்த காணொளி தொடங்குகிறது. இதன்படி இந்த காணொளியில் தோன்றும் நபர் ஒரு எரிபொருள் நிலையத்திற்கு சென்று காரின் எரிபொருள் டேங்க்கை நிரப்பி கொள்கிறார். அதன்பின் அவர் காரில் தனது வீட்டிற்கு செல்கிறார்.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

வீட்டிற்கு சென்றவுடன் ஏசி-யை ஆன் செய்து விட்டு, காரை ஐட்லிங்கில் விட்டு விடுகிறார். அத்துடன் டைமரும் ஆன் செய்யப்படுகிறது. சோதனை செய்யப்படும் நேரத்தில், கார் எவ்வளவு எரிபொருளை நுகரும் என்பதை கண்டறிவதுதான் இந்த காணொளியின் நோக்கம். முதலில் ஒரு மணி நேரம் காரை ஐட்லிங்கில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

ஆனால் அதன்பின்பு மேலும் 20 நிமிடங்கள் கூடுதலாக ஐட்லிங்கில் விடப்பட்டது. மொத்தத்தில் 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு கார் ஐட்லிங்கில் விடப்பட்டது. ஐட்லிங்கில் இருந்த இந்த நேரம் முழுமைக்கும் ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தது. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார்தான், இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

இந்த காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த சோதனை முடிவடைந்தவுடன், அந்த நபர் காரை மீண்டும் அதே எரிபொருள் நிலையத்திற்கு ஓட்டி சென்றார்.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

எரிபொருள் டேங்க்கை மீண்டும் முழுமையாக நிரப்பினால், கடந்த 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஐட்லிங்கில் இருந்தபோது கார் எவ்வளவு எரிபொருளை நுகர்ந்தது? என்பதை கண்டுபிடித்து விட முடியும். எனவே அதே எரிபொருள் நிலையத்திற்கு சென்று, அவர் காரின் டேங்க்கை மீண்டும் நிரப்பினார். அப்போது 1.66 லிட்டர் பெட்ரோலை கார் பிடித்தது. அதாவது சுமார் 130 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல்.

உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

எனவே ஏசி ஆன் செய்யப்பட்டிருக்கும்போது கார் ஒரு மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் சுமார் 100 ரூபாய் மதிப்புள்ள எரிபொருளை நுகரும். ஆனால் இந்த எரிபொருளில் சிறு பகுதி, சோதனைக்கு முன்பும், பின்பும் எரிபொருள் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வரவும், மீண்டும் வீட்டில் இருந்து எரிபொருள் நிலையத்திற்கு செல்லவும் செலவாகியிருக்கும்.

இந்த நபரின் வீட்டில் இருந்து எரிபொருள் நிலையம் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன்படி பார்த்தால், காரின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பிய பின் 8 கிலோ மீட்டர்கள் வரையில் கார் ஓட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இது ஒரு நல்ல சோதனையாகும். கார் நீண்ட நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு எரிபொருளை நுகரும் என்பதை இது நமக்கு காட்டியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How Much Petrol Does Your Car Consume While Idling For 1 Hour 20 Minutes With The AC On? Test Result. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X