ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

பின்னால் வரும் கார் திடீரென மாயமாகி விடுவதால், டிரைவர்கள் குழம்பி போய் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

நீங்கள் நெடுஞ்சாலை ஒன்றில் காரில் பயணம் செய்து கொண்டுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். தற்போது 5 நிமிடங்கள் கடந்து விட்டன. எவ்வளவு முறை நீங்கள் கார் கண்ணாடிகளை பார்த்திருப்பீர்கள்? 10 முறை? 20 முறை? இந்த இரண்டில் ஏதேனும் ஒரு பதிலை நீங்கள் சொன்னால், நீங்கள் பாதுகாப்பான ஓட்டுனர் கிடையாது.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

இன்னும் சொல்லப்போனால், 60 முறைக்கு குறைவாக ஏதேனும் ஒரு பதிலை நீங்கள் கூறினாலும், நீங்கள் கார் கண்ணாடிகளை போதுமான அளவிற்கு பார்ப்பதில்லை என்றுதான் அர்த்தம். ஆம், உண்மைதான். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் ஒரு முறை நீங்கள் உங்கள் கார் கண்ணாடிகளை பார்க்க வேண்டும்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

5 நிமிடங்களுக்கு மொத்தம் 300 வினாடிகள். இதில், ஒவ்வொரு 5 வினாடிகளுக்கு ஒரு முறையும் நீங்கள் உங்கள் கார் கண்ணாடிகளை பார்க்கிறீர்கள் என வைத்து கொண்டால், ஒட்டுமொத்தமாக 5 நிமிடங்களில் குறைந்தபட்சம் 60 முறை கண்ணாடிகளை பார்த்திருப்பீர்கள். இப்படி 5 வினாடிகளுக்கு ஒரு முறை கண்ணாடிகளை பார்த்துதான் கார் ஓட்ட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், 5 வினாடிகளுக்கு ஒரு முறை உங்கள் காரின் உள்ளே இருக்கும் ரியர் வியூ மிரரை பார்த்தால் மட்டும் போதாது. அனைத்து கண்ணாடிகளையும் பார்க்க வேண்டும். அதாவது ரியர் வியூ மிரர், காரின் வெளியே இருக்கும் வலது பக்க சைடு வியூ மிரர், இடது பக்க சைடு வியூ மிரர் என அனைத்து கண்ணாடிகளையும் 5 வினாடிகளுக்கு ஒரு முறை பார்க்க வேண்டும்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

5 வினாடிகளுக்கு ஒரு முறை கண்ணாடிகளை பார்ப்பது என்பது மிகவும் அதிகமாக இருக்கிறதே என உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இதற்கு பின்னால் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் அடங்கியுள்ளது. 5 வினாடிகளுக்கு ஒரு முறை நீங்கள் கண்ணாடிகளை பார்க்க தவறினால், கார் ஓட்டும்போது உங்களை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை கவனிக்க நீங்கள் தவறி விடுவீர்கள்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

எனவே காரில் உள்ள மூன்று கண்ணாடிகளையும் 5 வினாடிகளுக்கு ஒரு முறை பார்த்து கொள்வது நல்லது. இதன் மூலம் உங்களை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்ற விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பீர்கள். வெற்றிகரமான ஓட்டுனராக இருக்க வேண்டுமென்றால், இது மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்று.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

உதாரணத்திற்கு நீங்கள் தற்போது கண்ணாடிகளை பார்க்கிறீர்கள் என வைத்து கொள்வோம். உங்களுக்கு பின்னால் கார் ஒன்று வந்து கொண்டுள்ளது. தற்போது 5 வினாடிகள் கழிந்து விட்டது. அந்த காரும் மாயமாகி விட்டது. அந்த கார் எங்கே போயிருக்கும்? மற்ற கண்ணாடிகளிலும் அந்த காரை பார்க்க முடியாவிட்டால், அது உங்கள் பிளைண்ட் ஸ்பாட்டில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

எனவே பிளைண்ட் ஸ்பாட்டில் மற்றொரு கார் உள்ளது என்ற எச்சரிக்கை உணர்வுடன் நீங்கள் உங்கள் காரை பாதுகாப்பாக ஓட்ட முடியும். இதுவே ஒரு முறை கண்ணாடிகளை பார்த்து விட்டு, அடுத்த 5 வினாடிகளில் நீங்கள் மீண்டும் கண்ணாடிகளை பார்க்க தவறினால், அந்த கார் உங்கள் பிளைண்ட் ஸ்பாட்டில் இருப்பது உங்களுக்கு தெரியாது.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

இது விபத்திற்கு வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரியர் வியூ மிரர் மற்றும் சைடு வியூ மிரர்கள் ஆகியவற்றின் மூலமாக ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகள்தான் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது கார் ஓட்டும்போது ஓட்டுனரின் பார்வைக்கு புலப்படாத பகுதிகளை பிளைண்ட் ஸ்பாட் என்கின்றனர்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

இந்த பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் மற்ற வாகனங்கள் இருந்தால் உங்கள் கண்களுக்கு தெரியாது. ஆனால் 5 வினாடிகளுக்கு ஒரு முறை கண்ணாடிகளை பார்த்து கொள்வதன் மூலம், பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வேறு ஏதேனும் வாகனங்கள் இருந்தால் உங்களால் அதனை உணர முடியும். எனவே காரை பாதுகாப்பாக ஓட்டுவீர்கள்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

இதன் காரணமாகதான் 5 வினாடிகளுக்கு ஒரு முறை கண்ணாடிகளை பார்த்து கொண்டே காரை ஓட்ட வேண்டும் என்கின்றனர். இதுதவிர மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. ஒரு சிலர் கார் கண்ணாடியை பார்ப்பார்கள். கண்ணாடி வழியாக என்ன பார்த்தீர்கள்? என்ற கேள்வியை அடுத்த சில வினாடிகளில் அவர்களிடம் கேட்டால், என்ன பார்த்தோம்? என்பதை அவர்கள் மறந்திருப்பார்கள்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

இந்த பிரச்னை உங்களுக்கு இருந்தால், இது விபத்திற்கு வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பின்னாலும், அருகிலும் என்னென்ன வாகனங்கள் வந்து கொண்டுள்ளன? எவ்வளவு வாகனங்கள் வந்து கொண்டுள்ளன? என்பதை மறந்து விட்டு, லேன் மாறுவது, வளைவுகளில் திரும்புவது போன்றவற்றை செய்தால், விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரிக்கும்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

ஆனால் 5 வினாடிகளுக்கு ஒரு முறை நீங்கள் கண்ணாடிகளை பார்த்து கொண்டால், உங்களை சுற்றி என்ன நடக்கிறது? என்பதில் விழிப்புடன் இருப்பீர்கள். எனவே உங்கள் பயணமும் பாதுகாப்பாக அமையும். நடைமுறையில் இது சாத்தியமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சரியான பயிற்சியின் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

அதாவது அடுத்த முறை கார் ஓட்டும்போது ஒன்றில் இருந்து 5 வரை எண்ணுங்கள். உடனே கண்ணாடிகளை பாருங்கள். பின்னர் மீண்டும் 5 வரை எண்ணுங்கள். உடனே கண்ணாடிகளை பாருங்கள். இதனை தொடர்ச்சியாக செய்து கொண்டே இருந்தால், அடுத்த முறை கார் ஓட்டும்போது அது உங்களுக்கு நன்கு பழகி விடும்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

ஆனால் பயிற்சி எடுக்கும்போது காரை கவனமாக ஓட்ட மறந்து விட வேண்டாம். இனி 5 வினாடிகளுக்கு ஒரு முறை கண்ணாடிகளை பார்த்து கொண்டே காரை ஓட்டுவீர்கள் என நம்புகிறோம். இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறோம். இரு சக்கர வாகனங்களில் பலர் ரியர் வியூ மிரர்களை கழற்றி வைத்து விடுகின்றனர்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

அப்போதுதான் இரு சக்கர வாகனம் ஸ்டைலாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர். ஒரு சிலர் ஏதாவது ஒரு ரியர் வியூ மிரரையோ அல்லது இரண்டு ரியர் வியூ மிரர்களையுமோ கழற்றி விடுகின்றனர். இது தவறு. இரு சக்கர வாகனங்களில் இரு பக்கமும் ரியர் வியூ மிரர்கள் இருப்பதுதான் பாதுகாப்பானது. எனவே எக்காரணத்தையும் கொண்டும் ரியர் வியூ மிரர்களை கழற்றி வைக்க வேண்டாம்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

அதையும் மீறி நீங்கள் இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ மிரர்களை கழற்றி வைத்தால், காவல் துறை அதிகாரிகள் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் நீங்கள் விபத்தில் சிக்குவதற்கும் இது ஒரு காரணமாக அமையலாம். எனவே ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டாம்.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

இன்னும் ஒரு சிலர் இரு சக்கர வாகனங்களின் ரியர் வியூ மிரர்களில் ஹெல்மெட்டை மாட்டி வைத்து கொண்டு பயணிக்கின்றனர். இதுவும் தவறான விஷயம் ஆகும். ரியர் வியூ மிரரில் ஹெல்மெட்டை மாட்டியிருந்தால் விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் அந்த சமயத்தில் ஹெல்மெட் அணியாமல் இருப்பதால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஹைவே திகில்... பின்னால் வரும் கார் திடீரென மாயமாகும் மர்மம்... குழம்பி போய் விபத்தில் சிக்கும் டிரைவர்கள்!

எனவே இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, இரு பக்கமும் ரியர் வியூ மிரர்கள் பொருத்தியிருப்பதை உறுதி செய்து கொள்வதுடன், ஹெல்மெட்டும் அணிந்து பயணம் செய்யுங்கள். இந்த இரண்டு விஷயங்களும் உங்களது பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் என்பதை எப்போதும் மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How Often Should You Check Your Car's Rear-View And Side-View Mirrors: Detail Explanation. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X