நடுவானில் விமானங்களை பிரேக் போட்டு நிப்பாட்ட முடியுமா? இதுல இவ்வளவு டெக்னாலஜி இருக்குதா?
விமானம் என்றால் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகப் பயணிக்கும் ஒரு வாகனமாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் ஒரு விமானம் செயல்படுவதற்குப் பின்னால் உள்ள தொழிற்நுட்பங்களை எல்லாம் அறிந்தால் மிகவும் அச்சரியாக இருக்கும். பூமியுடன் தொடர்பே இல்லாமல் பல்லாயிரம் அடிக்கு மேல் விமானம் பறக்கும் போதும் சரி, தரையிறங்கும் போதும் சரி,பறக்க துவங்கும் போதும் சரி ஏராளமான தொழிற்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இப்படியாக நாம் எல்லோரும் விமானங்கள் வானில் பறக்கும் போது அது அதிகபட்ச வேகத்தில் பறக்கும் எனவும் அதனால் தான் விமானங்கள் விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கிறது எனவும் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் இது உண்மையல்ல விமானங்கள் வானில் பறக்கும் போது கூட அதன் வேகம் சில நேரங்களில் குறைக்கப்படுகிறது. விமானம் வானில் எப்பொழுதும் தனது முழு திறனில் இயங்காது.

ஒரு விமானம் விண்ணில் பறக்கும் போது 60-80 சதவீத திறனை மட்டுமே வெளிப்படுத்தும். அது மட்டுமல்ல விமானிகள் அதன் வேகத்தைத் தேவைக்குத் தகுந்தார் போலவும், சூழ்நிலைக்கு ஏற்றார் போலவும் மாறிக்கொண்டே இருப்பார்கள். அது எப்படி விமானம் காற்றில் பறக்கும் போது அதன் வேகத்தைக் குறைக்க பிரேக் பிடிக்கவா முடியும்? என நம்மில் பலர் யோசிப்பார்கள் விமானம் எப்படி நடுவானில் பிரேக் பிடிக்கப்படுகிறது. எனப் பார்க்கலாம் வாருங்கள்.
நடுவானில் பறக்கும் விமானம் தன் வேகத்தைக் குறைக்க ஒரே ஒரு காரணம் தான் இருக்கும் அது தான் பறக்கும் உயரத்தை மாற்றப்போகிறது என்ற ஒரே காரணம் தான். ந வானில் விமானம் பறக்கும் போது தன் வேகத்தைக் குறைத்துத் தான் உயரத்தையும் குறைப்பார்கள். வேகமாக உயரத்தை குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறைக்க முடியாது. அதனால் வேகத்தைக் குறைக்கும் போது மிக வேகமாக உயரத்தைக் குறைக்க முடியும்.
விமானத்தின் வேகத்தைக் குறைக்காமல் அதிகபட்சம் 2 டிகிரி வரை தான் விமானத்தின் உயரத்தைக் குறைக்க முடியும். வேகம் குறைந்துவிட்டால் எதிர்பார்க்கும் தூரத்தில் அதிகமான உயரம் குறைந்துவிடும். பொதுவாக இது வானிலை காரணமா மட்டுமே இந்த உயரம் குறைப்பு நடக்கும். ஒரு விமானம் செல்லும் பாதையில் வானிலை குறிப்பிட்ட உயரத்தில் மோசமாக இருந்தால் உடனடியாக விமானிகளுக்கு விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
அதன்படி அந்த விமான கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் அந்த விமானம் எந்த உயரத்தில் பறந்தால் பாதுகாப்பாக இருக்கும் எனக் கணக்கிட்டு அந்த உயரத்தில் பறக்கும் படி விமானிகளுக்கு உத்தரவிடுவார்கள். இந்த உத்தரவின் பேரில் தான் விமானங்கள் செயல்படவேண்டும். மேலும் விமானத்தின் வேகம் விமானம் நடுவானிலிருக்கும் போது இன் இன்ஜின் பவரை வைத்து மட்டுமே கட்டுப்படுத்த முடியும். வேறு எந்த விஷயத்தையும் வைத்து கட்டுப்படுத்த முடியாது.
விமானத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்த வேறு இரண்டு கருவிகள் உள்ள ஒன்று லேண்டிங் கியர், மற்றொன்று றெக்கைகளில் உள்ள ஃபிளாப்ஸ், இவை இரண்டும் விமானம் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்குக் குறைவாகப் பறக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். இது பொதுவாக விமானம் தரையிறங்கும் போதும், டேக் ஆஃப் ஆகும் போதும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும். இது தான் விமானங்களில் வேகத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் தொழிற்நுட்பம்.


Click it and Unblock the Notifications








