விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா? ஆச்சரியமா இருக்குதே...

விமானத்தின் கழிவுகளை விமானிகள் நடுவானில் திறந்துவிடுகிறார்களா? இது உண்மை தானா? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

நாம் வாழ்வில் ஒரு நாளாவது விமானத்தில் பயணித்திருப்போம். அல்லது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்போம். விமானத்தில் பறப்பது என்பது ஒரு புது விதமான அனுபவம் தான். நாம் விமானத்தில் பயணிக்கும் போது பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்கள் நமக்குக் குழப்பமாக இருக்கும் பலருக்குப் பல சந்தேகங்கள் ஏற்படும். அப்படி பலருக்கு இருக்கும் சந்தேகம் தான் விமானத்தில் இருக்கும் கழிவறையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் என்னவாகும் என்ற சந்தேகம் இருக்கும்.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

விமானங்கள் நீண்ட நேரம் பயணத்தைக் கொண்டதாலும், விமானம் பறக்கும் போது கழிப்பறைக்கு வழியில்லை என்பதாலும் எல்லா விமானங்களிலும் கழிப்பறை வசதி வழங்கப்பட்டிருக்கும் விமானம் கண்டுபிடிக்கப்பட்டு அது கமர்ஷியல் பயன்பாட்டிற்கு வந்த முதலே இந்த கழிப்பறை என்ற விஷயம் இருக்கிறது. ஆனால் இந்த கழிப்பறையின் டிசைன் மாறுபட்டுக்கொண்டே வருகிறது.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

பலர் விமானங்களில் கழிவுகள் பற்றிச் சொல்லும் போது விமானங்களில் கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுகள் எல்லாம் ஒரு டேங்கில் சேகரிக்கப்பட்டு விமானம் நடுவானில் பறக்கும் போது அந்த கழிவுகள் எல்லாம் வானில் திறந்து விடப்படும் எனச் சொல்லுவார்கள். இதனால் விமானத்தின் எடை குறையும் என்பதால் இதைச் செய்வதாகக் கூறுவார்கள்.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

நாம் கூட விமானிகள் அவசரக் காலத்தில் விமானத்தைத் தரையிறக்கும் முன்பு விமானத்தின் உள்ள எக்ஸ்ட்ரா எரிபொருளை எல்லாம் வானிலேயே திறந்து வீணடிப்பார்கள் எனப் படித்திருப்போம். இதற்கு எடையும் ஒரு காரணம் எனவும் படித்திருப்போம் அதனுடன் ஒப்பிடும் போது இதுவும் சரியாக இருக்கலாம் என நாம் கருதுவோம். ஆனால் அது உண்மையில்லை.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

இப்பொழுது நாம் விமானத்தில் டாய்லெட் சிஸ்டம் எப்படிச் செயல்படுகிறது எனப் பார்க்கலாம். முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு விமானங்களில் இப்படியாகக் கழிவுகள் வானிலிருந்து கடல் பகுதியில் விமானம் பறக்கும் போது கொட்டப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் இப்பொழுது எந்த விமானத்திலும் அந்த வசதியே கிடையாது. இப்பொழுது எல்லாம் விமானத்தில் உள்ள கழிவறை கழிவுகள் எல்லாம் விமானம் தரையிறங்கிய பின்பு தான் விமானத்திலிருந்து தனியாக வெளியேற்றப்படுகிறது. நடுவானில் இப்பொழுது திறந்துவிடப்படுவதில்லை.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

விமானங்களில் உள்ள கழிவறையில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் கழிவறையிலிருந்து சற்று வித்தியாசமான தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாம் பயன்படுத்தும் கழிவறையில் நாம் ப்ளஷ் செய்தவுடன் தண்ணீர் கழிவுகளைச் சுத்தம் செய்து அழுத்தம் ஏற்படுத்தும் அதனால் கழிவுகள் எல்லாம் குழாய் வழியாக வெளியேறும்.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

ஆனால் விமானங்களில் டிசைன் சற்று வேறுபடும். விமானங்களில் ஒருவர் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு ப்ளஷ் பட்டனை அழுத்தியவுடன் கழிவறைக் கீழே உள்ள உள்ள வால்வு திறக்கப்படும். அதில் அதிக பிரஷரில் வேக்கம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அது அதிக பிரஷரில்கழிவுகளை இழுத்து விமானத்தில் பின்புறம் உள்ள கழிவு நீர் டேங்க் உள்ளே நிரப்பிவிடும்.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

இந்த டேங்க் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டிருக்கும். இதை விமானியால் நடுவானில் எல்லாம் திறக்க முடியாது. விமானம் தரையிறங்கிய பின்பு இதற்கான தனி குழுவினர் வந்த இந்த டேங்க்கில் ஒரு பைப்பைபொருத்தி கழிவு நீர்களை வெளியேற்றிவிடுவார்கள். இந்த டேங்க் லீக் ப்ரூப் செய்யப்பட்டிருக்கும்.

விமான டாய்லெட் உள்ள இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? ஆச்சரியமா இருக்குதே . . .

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் டாய்லெட்டில் தண்ணீர் நீர்க்கும் அப்படியாக விமானத்தின் டாய்லெட்டில் தண்ணீர் நின்றால் விமானம் டர்புலன்ஸ், அல்லது டேக் ஆஃப், லேண்டிங்கின் போது அந்த தண்ணீர் வெளியே சிந்தி அசிங்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் தான் வேக்கம் முறையில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How the flight toilet actually works know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X