இந்தியாவையே மிரளவிட்ட தமிழக அரசு! கார், பைக் மட்டும் கிடையாது இது கப்பலையும் தயாரிக்க போறாங்க!
தமிழக அரசு 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழகத்திற்கான கடல்வழிப் போக்குவரத்து தயாரிப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இனி கப்பல் படகு போன்ற கடல் வழி போக்குவரத்து வாகனங்களை கட்டமைக்க வழிகளையும் ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் இனி கப்பல் கட்டுமானம் செய்யும் கம்பெனிகள் அதிகம் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த கொள்கைகள் தமிழகத்திற்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அந்த நாட்டில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். உற்பத்தி அதிகமானால் தான் ஒரு நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை வாகன உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. தமிழகத்தில் கார், பைக் போன்ற வாகனங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் நடக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாகன உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு கடல் வழி போக்குவரத்து தயாரிப்புக் கொள்கையை இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இனி கப்பல் கட்டுமானம், படகு கட்டுமானம், கப்பல் இன்ஜின் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான கடல் வழி போக்குவரத்து கட்டுமானங்களை தமிழகத்திலேயே தயாரிக்க வழி கிடைத்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கிழக்கு பகுதி பெரும்பாலும் கடல் பகுதியாக இருப்பதால் பல மாவட்டங்கள் நேரடியாக கடல் மூலம் பலன் அடைந்து வருகிறது. இதனால் படகு கப்பல் போன்ற போக்குவரத்துக்கள் கடல் வழியாக அதிகமாக தமிழகத்தில் நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் தூத்துக்குடியில் மிகப்பெரிய துறைமுகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே கடல் வழி போக்குவரத்தை சிறப்பானதாக மாற்ற தமிழக அரசு புதிய கொள்கையை அறிவித்துள்ளது.

இந்த கொள்கையின் படி வெளிநாட்டில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் கப்பல் கட்டுமான ஆலையே அமைத்து கடலூர் மாவட்டங்களில் கப்பலை கட்டுமானம் செய்து கடலுக்கு கொண்டுவர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கடலூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் இந்த திட்டத்தால் மிகப்பெரிய அளவில் பலன் அடைய உள்ளன.
இந்த கொள்கையின்படி கப்பலின் பாடி காட்டுமானம் மட்டுமல்லாமல் கப்பலின் இன்ஜினை தயாரிப்பதற்கான ஆலை அமைக்கவும் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே மிகப்பெரிய கப்பல் கட்டுமான தளம் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறுவதற்கான வாய்ப்புகளை இந்த கொள்கைகள் ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கப்பல் கட்டுமான தளம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும் இந்தியாவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கப்பல் கட்டுமான கம்பெனியை விரிவாக்கம் செய்யும் திட்டம் தமிழகத்திற்கு கொண்டு வரவும் இந்த கொள்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் கப்பல் கட்டுமானம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தின் வளர்ச்சி என்பது தமிழகத்தில் நடக்கும் உற்பத்தியை வைத்து தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கப்பல் கட்டுமான நிறுவனங்கள் வந்தால் அதன் மூலம் பல துணை நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் பலனடையும். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே வாகன துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வரும் தமிழகம் கப்பல் கட்டுமான துறையிலும் மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








