சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

சென்னையில், செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரின் உரிமத்தை மாற்றுவது எப்படி என்பது பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

நாட்டின் மிகப்பெரிய கார் சந்தைகளில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையும் ஒன்றாகும். குறிப்பாக, தெற்கு பகுதியின் மிகப்பெரிய வாகன சந்தைகளில் ஒன்றாக சென்னை விளங்குகின்றது. இங்கு புதிய கார்களுக்கு கிடைப்பதைப் போலவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) கார்களுக்கும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் புதிய கார்களைக் காட்டிலும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வரவேற்பு சற்று கூடுதல் அதிகம் என்கின்றனர். விலை குறைவாக கிடைப்பதன் காரணத்தினாலும், ரிஸ்க் குறைவு என்கிற காரணத்தினாலும் மக்கள் பயன்படுத்திய கார்களை அதிகம் நாடுகின்றனர்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

ஆனால், பிறரிடத்தில் வாங்கப்படும் இந்த கார்களை நம்முடைய பெயருக்கு மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. இதற்கான நடைமுறைகள் பலருக்கு அறிந்திராத விஷயமாக இருக்கலாம்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

இதனால்தான் பலர் இடைத்தரகர்களை நாடுகின்றனர். இவர்மூலம் பயன்படுத்திய கார்களை வாங்கும்போது மிக சுலபமாக காரின் உரிமையாளர மாற்றிக் கொள்ள முடியும். இருப்பினும், இந்த பதிவில் நாமாக எப்படி வாகன உரிமையாளர் மாற்றுவது என்பது பற்றிய தகவலையேப் பார்க்க இருக்கின்றோம்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

செகண்ட் ஹேண்ட் வாகனத்தை வாங்கிய 30 நாட்களுக்குள் பெயர் மாற்றிவிட வேண்டும் என்பது ஆர்டிஓ விதி. இதேபோன்று, நீங்கள் வாங்கிய வாகனம் சென்னை அல்லாத பிற ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்டிருந்தால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆர்டிஓ-விற்கு சென்று அங்கு ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டும். இதை பெற்றாலே உங்களால் உரிமையாளர் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

எப்படி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது?.. படிபடியான தகவல்.

ஸ்டெப் 1

என்ஓசி சான்று பெறுவது. இதனைப் பெற படிவம் 28 நீங்கள் முதலில் சமர்பிக்க வேண்டும். இதன் வாயிலாக என்ஓசி வழங்கப்படும். வேறு மாநிலம் அல்லது சென்னை அல்லாத ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பெயரை மாற்ற இது கட்டாயம் ஆகும்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

அதேசமயம், படிவும் 28 ஆனது வேறு மாநில பதிவு கொண்ட வாகனங்களுக்கான படிவும். உள்மாநிலத்தில் சென்னை அல்லாத ஆர்டிஓ-வில் பதிவு செய்யப்பட்டிருக்குமானால் நீங்கள் படிவும் 29 பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். இணையத்தில் இப்படிவங்கள் தற்போது கிடைக்கின்றன.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

ஸ்டெப் 2 - உரிய ஆவணங்களுடன் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும்.

என்ஓசி சான்று கிடைத்த பின்னர் அதை வைத்துக் கொண்டு ஆர்டிஓ அலுவலகம் செல்ல தயாராகிவிட வேண்டும். இத்துடன், படிவம் 28, பதிவு சான்றிதழின் நகல், சாலை வரி கட்டியதற்கான சான்று, தகுதியான காப்பீட்டு பாலிசி, அண்மையில் எடுக்கப்பட்ட உமிழ்வு தர சான்று, காவல்நிலையத்தில் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனை இல்லா சான்று, என்சிஆர்பி-இன் தடையில்லா சான்று, வங்கியில் இருந்து பெறப்பட்ட தடையில்லா சான்று ஆகியவற்றையும் ஆர்டிஓ-விற்கு எடுத்து செல்ல வேண்டும்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

இவற்றைக் காண்பிக்கும்போது ஆர்டிஓ-வில் ஓர் படிவம் தரப்படும். அதனை மிக கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். சிறு தவறு ஏற்பட்டாலும், அது ஆர்சி சான்றில் பிழையை ஏற்படுத்தும்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

ஸ்டெப் 3 - விண்ணப்பத்தை சமர்பித்தல்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். வாகனத்திற்கு ஏற்றவாறு அங்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ஆர்சி சான்று ஸ்மார்டு கார்டாக வழங்கப்படுவதால், கூடுதலாக ரூ. 200 ஸ்மார்ட் அட்டைக்காக வசூலிக்கப்படுகின்றது.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

ஸ்டெப் 4 - வேறொரு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாகனம்

வேற்று மாநில பதிவெண் கொண்ட வாகனமாக இருந்தால் அசர் ஆர்சி சான்று, படிவம் 20, முந்தைய ஆர்டிஓ-வின் என்ஓசி, படிவும் 27, படிவம் 33, முகவரி சான்று நகல், ஓட்டுநர் உரிமம் நகல், மாசு உமிழ்வு தர சான்று, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், வாகனம் கடனில் இருந்தால் வங்கியில் இருந்து பெறப்பட்ட என்ஓசி ஆகியவற்றைச் சமர்பிக்க வேண்டும்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

ஸ்டெப் 5 - சாலை வரி

நீங்கள் வாங்கியிருக்கும் வாகனம் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தது என்றால் அந்த வாகனத்தை உள்மாநிலத்தில் பதிவு செய்ய மீண்டும் மாநிலத்திற்கான சாலை வரியை செலுத்த வேண்டும். வாகனத்தின் விலைக்கு ஏற்ப வரி வசூலிக்கப்படும். இதனை டிடி வாயிலாக பழைய காரின் புதிய உரிமையாளர் செலுத்த வேண்டும். முக்கியமாக, பழைய மாநிலத்தில் செலுத்தப்பட்ட வரியை நம்மால் இங்கு திரும்ப பெற முடியும் என்பதை கவனத்தில் கொண்ட வேண்டும்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

இதற்கான வழிமுறைகள்

  • சாலை வரியை திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம்.
  • புதுப்பிக்கப்பட்ட மற்றும் கையொப்பம் இட்ட படிவம் 16.
  • மறு பதிவு செய்யப்பட்ட சான்று.
  • பழைய பதிவு சான்று.
  • காப்பீட்டு பாலிசி சான்று
  • முகவரி சான்று
  • அடையாள அட்டை
சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

ஆகிய ஆவணங்களை இதற்காக சமர்பிக்க வேண்டும். இவற்றை சமர்பித்த பின்னர் உரிய மாநிலத்தின் ஆர்டிஓ விண்ணப்பத்தைச் சரிபார்த்து ஏற்கனவே செலுத்தப்பட்ட சாலை வரியை மீண்டும் வழங்கும். வாகனத்தின் வயதை பொருத்து பணம் திரும்பி வழங்கப்படும்.

சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...

vஇவையே பழைய வாகனத்தின் உரிமையாளர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகள் ஆகும். இது தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கான வழிமுறைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Most Read Articles

English summary
How to Apply for Transfer Of Vehicle Ownership in Chennai: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X