ஒரே நேரத்தில் 100 டிக்கெட் கூட புக் பண்ணலாம்! இப்படி ஒரு ஈஸியான வழி இருப்பது யாருக்குமே தெரியாது!
ரயில் ஒரே நேரத்தில் 50 பேர் அல்லது 100 பேருக்கு டிக்கெட் புக் செய்வது என்றால் எப்படிச் செய்வது? அதை ஆன்லைனிலேயே செய்யலாமா? எளிதாக இதைச் செய்ய என்ன வழி? இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்வது குறித்து எல்லாம் தெரிந்திருக்கும். 2 விதமான முறைகளில் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். ஒன்று நேரடியாக ரயில் நிலையத்தின் கவுண்டர்களுக்குச் சென்று ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அல்லது ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். இது எல்லாம் நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பம் அல்லது சிறிய நண்பர்கள் கூட்டத்துடனோ செல்லும் போது சரி வரும்.

ஆனால் ஒரு பெரிய குழுவாக நீங்கள் பயணிக்க வேண்டும் என்றால் ரயிலில் டிக்கெட்களை எப்படி புக்கிங் செய்வது? ஆன்லைனில் புக் செய்ய வேண்டும் என்றாலும், நேரடியாக ரயில்நிலையத்திற்குச் சென்று டிக்கெட்டை புக் செய்ய வேண்டும் என்றாலும் ஒரு டிக்கெட்டிற்கு அதிகபட்சம் 6 பேர் வரை புக் செய்ய முடிவும் இதனால் 6 பேர் குழுவாகப் பிரித்து புக்கிங் செய்தால் எல்லோருக்கும் ஒரே கோச்சில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்காது.
இப்படியாகக் குழுவாகப் பயணிக்க விரும்புபவர்கள் ரயில்வே நிர்வாகம் ஒரு பிரத்தியேக வசதியை வைத்திருக்கிறது. நேரடியாக ரயில்வே அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி இப்படியான புக்கிங்கை செய்யலாம். ஆனால் இப்படியாகக் குழுவாகப் பயணிக்கும் காரணத்தையும் இதில் குறிப்பிட வேண்டும். இந்த வசதி ஒரு திருமணத்திற்குக் குழுவாகப் பயணிக்கிறார்கள். அல்லது பள்ளி/ கல்லூரிகளில் மாணவர்கள் சுற்றுலா செல்வதற்காகப் பயணிக்கிறார்கள். இப்படியான நேரங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி டிக்கெட்டை புக்கிங் செய்யலாம்.
இப்படியாகக் குழுவாகப் பயணிக்கக் குறைந்த 10 டிக்கெட்டாவது புக்கிங் செய்ய வேண்டும். 10-50 டிக்கெட் வரை புக் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள தலைமை ரிசர்வேசன் கண்காணிப்பாளரிடம் இது குறித்து விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வேலை 50 முதல் -100 டிக்கெட்கள் வரை புக்கிங் செய்ய வேண்டும். என்றால் துணை கமர்ஷியல் மேலாளர் அல்லது கோட்ட கமர்ஷியல் மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
100 டிக்கெட்டிற்கும் அதிகமாக புக்கிங் செய்ய வேண்டும் என்றால் மூத்த டிசிஎம்மிடம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படியாக விண்ணப்பிக்கும் போது தகுந்த ஆதாரங்களுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். உதாரணமாகத் திருமணத்திற்கான பயணம் என்றால் திருமண அழைப்பிதழை அதில் இணைக்க வேண்டும். ஒருவேளை பள்ளி/கல்லூரி சுற்றுலா என்றால் பள்ளி/கல்லூரியின் அனுமதி கடிதத்துடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
இப்படியாக விண்ணப்பிக்கும் போது பயணிக்கும் நபர்களுடைய பெயர், வயது, பாலினம், அவர்கள் பயணிக்க விரும்பும் ரயிலின் எண், பயணிக்கும் தேதி, சென்றடைய வேண்டிய இடம், உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் இந்த குழுவிற்குத் தலைமை யார் என்பதையும் அவரது பெயர், முகவரி, செல்போன் நம்பர் உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பித்ததும். அதற்கான அனுமதி கிடைத்ததும் உரியக் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
இப்படியாக புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டில் ஏதேனும் மாற்றம் இருந்தால் ரயில் கிளம்புவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னர் ரயில்வே அதிகாரிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்திவிட வேண்டும். அவரின் அனுமதி கிடைத்ததும் அதில் மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை திருமணம் அல்லது சுற்றுலா செல்லும் குழுக்கள் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படியாக ஒரு வழி இருப்பது பலருக்குத் தெரியாது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








