இது யாருக்குமே தெரியாத ரகசியம்.. தீபாவளிக்கு ஊருக்குப் போக ஈஸியா ரயிலில் டிக்கெட் புக் பண்ணலாம்
தீபாவளிக்கு டிக்கெட் புக் செய்ய பலர் தவித்து வருகின்றனர். ரயிலில் தட்கல் டிக்கெட்டை பெறுவது எப்படி என பலருக்கும் தெரியாது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவது தீபாவளி தான். இந்தாண்டு தீபாவளி நெருங்கிவிட்டது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் வேலை பார்க்கும் பலருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தீபாவளிக்கு எப்படி ஊருக்குச் செல்வது என்பது தான். இந்தாண்டு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் பலர் வெள்ளிக்கிழமை இரவே ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் புக் செய்துவிட்டனர். இன்றுவரை டிக்கெட் புக் செய்யாமல் இருப்பவர்களுக்கு பெரும் தலைவலி தான். தீபாவளிக்கு ஊருக்கு செல்ல எப்படி டிக்கெட் புக் செய்து எனப் பலர் குழப்பத்தில் இருப்பார்கள்.

இன்று தீபாவளியை ஒட்டி ஊருக்குச் செல்லவும் திரும்ப வரவும், கிட்டத்தட்ட ரயில் டிக்கெட்கள் எல்லாம் ஃபுல்லாகிவிட்டன. பஸ்களும் பெரும்பாலும் டிக்கெட்கள் புக் செய்யப்பட்டு விட்ட நிலையில் ஒரு சில பஸ்களில் மட்டுமே இடம் இருக்கிறது. அதிலும் டிக்கெட் விலை 3-4 மடங்கு வரை அதிகமாக இருக்கிறது. இவ்வளவு அதிகமாகப் பணம் கொண்டு பயணிக்கவும் முடியாது என என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். அவர்களுக்குத் தீபாவளிக்கு டிக்கெட் புக் செய்ய ஒரு டிப்ஸ்களை தான் இந்த பதிவில் சொல்லவிருக்கிறோம்.

இந்த செய்தியை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது தீபாவளியையொட்டி தமிழகத்தில் ஓடும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் காலியாகி காத்திருப்பு பட்டியலும் நீண்டு விட்டன. தற்போது ரயில்களில் புக் செய்ய வேண்டும் என்றால் காத்திருப்பு பட்டியலில் புக்கிங் செய்யலாம். ஆனால் அந்த டிக்கெட்கள் கன்ஃபார்ம் ஆவது கடினம். ஆனால் ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட்களை உறுதி செய்ய மற்றுமொரு வழி இருக்கிறது. இது தான் தட்கல் முறை.

இந்த முறை தான் எங்களுக்குத் தெரியுமே, ஆனால் தட்கல் டிக்கெட்கள் ஒப்பன் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே எல்லாம் நிரம்பி விடும். அப்பொழுது எப்படி அதில் டிக்கெட் எடுக்க முடியும் என நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறோம். இந்த பதிவில் நாம் எப்படி கன்ஃபார்ம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டை பெறுவது என்று தான் இந்த பதிவில் காணபோகிறோம்.

ஒரு ரயிலுக்கான தட்கல் டிக்கெட் புக்கிங் ரயில் கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கும் 11 மணிக்கு சிலிப்பர் பெட்டிகளுக்கும் புக்கிங் துவங்கும். இன்று ரயில்வே நிர்வாகம் இருக்கும் சூழ்நிலைகளில் பெரும்பாலான சூப்பர்பாஸ்ட் ரயில்களில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதனால் நீங்கள் காசு பற்றி கவலையில்லை டிக்கெட் கிடைத்தால் போதும் என நினைத்தால் நீங்கள் ஏசியில் தாராளமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்யலாம். அங்கு டிக்கெட்கள் அதிகம் இருக்கும். அதனால் கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

அதே போல சிலீப்பர் கிளாஸ் டிக்கெட்டிற்கு 11 மணிக்கு மேல் முயற்சி செய்தால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது எல்லாம் ஓரிரு நிமிடங்களில் தீர்ந்து போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இது ஆன்லனில் இருக்கும் பிரச்சனை தான். இன்று ரயில் டிக்கெட் புக்கிங் எல்லாம் ஆன்லைனிற்கு வந்த பிறகு ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களில் டிக்கெட் புக்கிங் செய்வது குறைந்துவிட்டது. அங்குக் கூட்டம் பெரும்பாலும் இருப்பதில்லை. இந்தியாவில் எந்த ரயில் நிலையத்திலிருந்து வேண்டுமானாலும் எந்த ரயிலுக்காகவும் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.

அதனால் தட்கல் டிக்கெட் கிடைக்க ஒரு சுலபமான வழி ஆன்லைன் டிக்கெட்களை நம்பாமல் நேரடியாக டிக்கெட் கவுண்டருக்கு சென்றால் அங்கு நீங்கள் செல்லும் ரயிலுக்கான தட்கல் டிக்கெட் கடைக்க வாய்ப்பு இருக்கிறது. முன்பதிவு வசதி கொண்ட எல்லா ரயில் நிலையங்களிலும் நீங்கள் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். அப்படியாக நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்னரே விண்ணப்பத்தை நிரப்பி அத்துடன் அடையாள அட்டை நகல் மற்றும் டிக்கெட்டிற்கான பணத்துடன் அணுகினால் டிக்கெட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஆன்லைனை விட டிக்கெட் கவுண்டரில் தான் வாய்ப்பு அதிகம். அதே போல நீங்கள் எந்த ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரை அணுகுகிறீர்கள் என்பதும் முக்கியம். சில ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் அப்படி இருந்தாலும் டிக்கெட் கிடைப்பது சிரமமாகிவிடும். இதனால் கூட்டம் குறைவாக உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனிற்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள் இது உங்களுக்கு கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க அதிக வாய்ப்பை ஏற்படுத்தும்.

பலர் சாதாரண டிக்கெட் முன்பதிவில் காத்திருப்பு பட்டியல் நீளமாக இருக்கிறது என்பதால் எப்படியும் கிடைக்காது என்ற எண்ணத்தில் பலர் அதை புக் செய்யாமல் இருப்பர். ஆனால் இப்படியாக ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் புக் செய்த பலர் தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்வார்கள். தட்கல் முறையில் டிக்கெட் கிடைத்துவிட்டால் காத்திருப்பு பட்டியலில் புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்வார்கள்.

இப்படியாக கேன்சல் செய்வதால் காத்திருப்பு பட்டியலில் உள்ள எண்ணிக்கை கடைசி நேரத்தில் வெகுவாக குறையும். இதனால் இந்த மாதிரியான நேரங்களில் காத்திருப்பு பட்டியல் நீளமாக இருந்தாலும் அதையும் புக் செய்து வைத்திருப்பது நல்லது, அதிர்ஷ்டம் இருந்தால் அந்த டிக்கெட்டும் கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பலர் இதற்காகத் தான் காத்திருப்பு பட்டியல் நீளமாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் டிக்கெட்டை புக் செய்து கொண்டே இருக்கின்றனர்.

பேச்சுலராக இருக்கும் சிலர் வேறு சிலபுக்திகளையும் கையாளுகின்றனர். அவர்கள் சாதாரண முன்பதிவு டிக்கெட் காத்திருப்பு பட்டியலிலிருந்தாலும் அந்த டிக்கெட்டை டிக்கெட் கவுண்டரில் சென்று எடுக்கின்றனர். இப்படியாக டிக்கெட் கவுன்டரில் சென்று டிக்கெட் எடுத்தால் அவர்கள் ரயில் கிளம்பும் போது ரயிலில் ஏறி அந்த டிக்கெட்டை காண்பித்து டிக்கெட் பரிசோதகரிடம் அப்பொழுது ஏதாவது சீட் இருந்தால் பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்துச் சிரமப்படத் தேவையில்லை எனக் கருதி இப்படிச் செய்கின்றனர்.

ஆன்லைனில் காத்திருப்பு பட்டியலில் புக் செய்தால், ரயிலுக்கான சார்ட்டிங் நடந்த பின்பும், நீங்கள் புக் செய்த டிக்கெட் காத்திருப்பு பட்டியலிலேயே இருந்தால் அந்த டிக்கெட் தானாக கேன்சல் ஆகி ஆன்லைனில் எந்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டதோ அந்த வங்கிக் கணக்கிற்கே பணம் ரிட்டர்ன் வந்துவிடும். இந்த தீபாவளியை உங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட இப்பொழுதே திட்டமிட்டு டிக்கெட்டை புக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications








