புத்தம் புதிய காரை விலை குறைவா வாங்க இப்படி ஒரு வழி இருக்கா!! இத சொல்லி கொடுத்தவரு 100 வருஷம் நல்லா வாழனும்!

பேரம் பேசுவதில் இந்தியர்கள் முன்னோடிகள் என கூறலாம். எங்கு சென்றாலும், இதை செய்ய அவர்கள் தவறுவதே இல்லை. இந்த மாதிரியானோருக்கு உதவுகின்ற விதமான வீடியோவையே ஓர் நபர் தற்போது பகிர்ந்திருக்கின்றார். அந்த நபர், தான் எப்படி பயன்படுத்திய காரைவிட குறைவான விலையில் புத்தம் புதிய காரை வாங்கினேன் என்பது பற்றிய தகவலையே வெளியிட்டுள்ளார். குறிப்பாக, இதற்காக அவர் என்னென்னவெல்லாம் செய்தார் என்பதையும் இந்த வீடியோ வாயிலாகக் கூறி இருக்கின்றார். வாங்க இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

காரை வாங்கும்போது நம்மில் பலரின் எதிர்பார்ப்பாக தள்ளுபடி இருக்கின்றது. ஆனால், கார் விற்பனையாளர்கள் குறைவான சலுகையை மட்டுமே வழங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிடுவதுண்டு. கொஞ்சம் கூட கூடுதல் தள்ளுபடிக்காக அவர்கள் வேலையே பார்க்க மாட்டார்கள். அப்படி அவர்கள் பார்த்தால் மிகப் பெரிய லாபத்துடன் வாடிக்கையாளர்களால் புத்தம் புதிய காரையே வாங்கிவிட முடியும்.

New skoda slavia bought under used price

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. அப்படி என்னமாதிரியான கூடுதல் வேலை அது என்பதையே இந்த வீடியோவில் அவர் தெரிவித்து இருக்கின்றார். மேலும், அதனை பயன்படுத்தி தான் ஒரு புத்தம் புதிய ஸ்கோடா ஸ்லேவியா காரை வாங்கி விட்டதாகவும் அவர் கூறி இருக்கின்றார். முதலில் டீலரால் டெமோவிற்காக ஷோரூமில் பயன்படுத்தப்பட்ட ஸ்கோடா ஸ்லேவியா 1.5 லிட்டர் டிஎஸ்ஜி மாடலின் விலை விபரங்கள் பற்றியே அவர் ஆராய்ந்திருக்கின்றார்.

இதற்கு ரூ. 17 லட்சம் விலை என கூறப்பட்டு இருக்கின்றது. இதை அடுத்து அவர் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை தளத்தில் அதே ஸ்லேவியாவின் விலையை பார்த்திருக்கின்றார். அதன் விலை அங்கு ரூ. 16.43 லட்சம் வரை என இருந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே இறுதியாக அவர் புத்தம் புதிய அதே ஸ்கோடா ஸ்லேவியா காரை ரூ. 16.14 லட்சத்திற்கு வாங்கி இருக்கின்றார்.

இது பயன்படுத்திய கார் மாடலைக் காட்டிலும் குறைவான விலை ஆகும். புத்திசாலித்தனமான அவர், ஒரு வருட பழைய மாடலைத் தேர்ந்தெடுக்கின்றார். அதாவது, சமீபத்திய 2024 மாடலுக்குப் பதிலாக 2023 பதிப்பைத் தேர்ந்தெடுத்தார். இதுபோன்ற பழைய மாடல்கள் விற்பனையாளர்களிடத்தில் கணிசமான தள்ளுபடியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரை அவர் வாங்கியதனால் அவருக்கு சுமார் ரூ. 4 லட்சம் வரை சேமிக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, சில வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்கள் மாத இறுதியை நல்ல விற்பனை எண்ணிக்கையுடன் முடிக்கும் நோக்கில் தள்ளுபடியை வழங்குவார்கள் இதற்காகவும் அவர் காந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

சில நேரங்களில் கார் டீலர்கள் மாதாந்திர விற்பனை இலக்கை அடைய மிகப் பெரிய தள்ளுபடியை வழங்குவதுண்டு. ஆகையால், பொருத்திருந்து மாதக் கடைசியில் காரை வாங்குவதை பல்வேறு சலுகைகளை பெற வழி வகுக்கும். இது அனைத்து புதிய பொருளை வாங்க செல்வோருக்கும் பொருந்தும்.

மேலும், அவர் பாரத் (BH) பதிவையும் தேர்ந்தெடுத்திருக்கின்றார். இதன் வாயிலாகவும் கணிசமான தொகையை அவர் சேமித்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கு சாலை வரி மற்றும் சில கூடுதல் வரிகள் விதிக்கப்படுவதால், ஃபைனான்ஸின்போது கூடுதல் நன்மைகள் கிடைக்க நேரிடும். அதாவது, அதிக வரியினால் ஏற்படும் சுமையை சமாளிப்பதற்கான பலன்களை நிதி நிறுவனங்கள் வழங்கும்.

ஆனால், இந்த பதிவு அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடியாது. பல மாநிலங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கே இந்த பதிவு வழங்கப்படும். பாரத் பதிவெண்ணைத் தொடர்ந்து அவர் கையாண்ட மற்றுமொரு சூப்பரான யுக்தியாக இன்சூரன்ஸை தேர்வு செய்த செயல் இருக்கின்றது.

இவர் டீலர்களால் வழங்கப்படும் காப்பீட்டு திட்டங்களைத் தவிர்த்துவிட்டு, தாமாக கவர்ஃபாக்ஸ் (Coverfox) மற்றும் ஆக்கோ (Acko) போன்ற ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தி காப்பீட்டைப் பெற்றிருக்கின்றார். இதன் வாயிலாகவும் அவரால் கணிசமான அளவு தொகை சேமிக்க முடிந்திருக்கின்றது. இந்த ஒற்றை நடவடிக்கையால் மட்டுமே ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடியும் என அந்த நபர் தெரிவித்து இருக்கின்றார்.

இதைத்தொடர்ந்து, குறைந்த வட்டியில் கடன்களைப் பெறுவதற்கான வேலைகளையும் அவர் பார்த்திருக்கின்றார். இதற்காக அவர் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிகளை நாடி, தனக்கான மிக சிறந்த வங்கியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். அதாவது, குறைவான வட்டி விகிதத்தில் கார் லோனை வழங்கும் வங்கியையே அவர் தேர்வு செய்திருக்கின்றார்.

இதனாலும், மிகப் பெரிய அளவில் சேமிப்பைப் பெற முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றார். இதுமட்டுமில்லைங்க, டீலர்கள் விஷயத்திலும் மிகப் பெரிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருக்கின்றார். ஒவ்வொரு டீலரும் மற்றவர்களுக்கு அதிகப்படியான போட்டியை வழங்க வேண்டும் என்பதற்காக அதிகபட்ச சலுகைகளை வழங்குவதுண்டு. எனவேதான், யார் பெஸ்ட் சலுகையை வழங்குகின்றார் என்பதை ஆராய வேண்டும் என்கிறார் இந்த இளைஞர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் இந்தியாவில் ஒரு புதிய காரை வாங்க விரும்பினால், மேலே உள்ள யுக்திகளைக் கையாளுவதன் வாயிலாக பல லட்சம் ரூபாய்களைச் சேமிக்க முடியும். குறிப்பாக, காருக்காக உங்கள் பணம் தேவையில்லாமல் விரையமாகுவதையும் இதன் வாயிலாக தவிர்த்துக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 11:04 [IST]
English summary
How to buy new car cheaper than used
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+