செலவை யோசிக்காம மாத்துங்க, கூட்டி கழிச்சி பாத்தா லாபம் தான்... உடனே உங்க காரு சிஎன்ஜி ஃபிட் பண்ணுங்க...
பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றுவது எப்படி? இப்படி மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும்? இது குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
இன்று பெட்ரோல்விற்கும் விலையில் காருக்கு பெட்ரோல் போட்டு போவது எல்லாம் கட்டுப்படி ஆகாது. இதனால் அதே பெட்ரோல் காரில் குறைவான விலையில் நல்ல மைலேஜ் கிடைக்க வேண்டும் என்றால் பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றுவது நல்ல சாய் தான்.

இன்று கார் தயாரிப்பு நிறுவனங்கே நேரடியாக சிஎன்ஜி கார்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இது போக நல்ல மைலேஜ் கிடைக்க இன்று ஸ்டிராங்க் மற்றும் மைல்டு ஹைபிரிட் கார்கள் வந்துவிட்டன. ஆனால் ஏற்கனவே பெட்ரோல் காராக இருக்கும் காரில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்த ஒரே வழி அதை சிஎன்ஜி காராக மாற்றுவது தான்.
கார் தான் என்று இல்லை. பெட்ரோலில் இயங்கும் கமர்ஷியல் வாகனங்கள்,ஆட்டோக்கள் ஆகியவற்றையும் சிஎன்ஜி வாகனமாக மாற்ற முடியும். இன்று மார்கெட்டில் பெட்ரோல் காரை சிஎன்ஜினகாராக மாற்றுவது எப்படி எனக் காணலாம் வாருங்கள்.
இன்று வெளி மார்கெட்டில் பல நிறுவனங்கள் இப்படியாக பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றித் தருகின்றன. இதை நீங்கள் தேர்வு செய்யும் போது அந்நிறுவனம் ஆர்டிஓவால் லைசென்ஸ் பெற்ற நிறுவனமாக இருக்கிறதா என்பதை பார்த்துவிடுங்கள். ஆர்டிஓ சான்று பெற்ற நிறுவனங்களிடம் மட்டுமே இந்த வேலையைச் செய்ய வேண்டும்.
ஒரே நாளில் உங்கள் கார் பெட்ரோல் காரிலிருந்து சிஎன்ஜி காராக மாறிவிடும். ஆனால் இது மட்டும் செய்தால் போதாது. இப்படியாக சிஎன்ஜி காராக மாற்றியவுடன் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வாகனத்தின் ஆர்சியை மற்றவது தான். ஆர்சியில் குறிப்பிட்ட கார் பெட்ரோல்காராகவே இருக்கும் அதை ஆர்டிஓ அலுவவலகத்தில் விண்ணப்பித்து சிஎன்ஜி மாற்றப்பட்ட காராக பதிவு செய்து கொள்ள முடியும்.
இப்படியாக பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றுவதற்கு அதிக செலவு சிஎன்ஜி கிட்களை வாங்குவது தான். மார்கெட்டில் இந்தியத் தயாரிப்பு சிஎன்ஜி கிட் மற்றும் வெளிநாட்டுத் தயாரிப்பு சிஎன்ஜி கிட்கள் உள்ளன. இதில் வெளிநாட்டுத் தயாரிப்பு கிட்கள் அதிக விலையிலும், இந்தியத் தயாரிப்பு கிட்கள் குறைந்த விலையிலும் மார்கெட்டில் இருக்கிறது. இரண்டில் எதை வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம்.
இப்படியாக பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றுவதற்கு ரூ45-60 ஆயிரம் வரை செலவாகும். இதுவே உங்கள் கார் பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட காராக இருந்தால் உங்களுக்கு ரூ25 ஆயிரம் கேஸ் கார்டு இப்படியாக பெட்ரோலில் இருந்து சிஎன்ஜியாக மாற்றியதற்கு மானியமாகக் கிடைக்கும்.
பெட்ரோலில் இருந்து சிஎன்ஜியாக மாற்றிய பின் அந்த வாகனத்தை நீங்கள் ஆர்சியில் மாற்றிவிட்டால் கெயில் கார்டு வழங்கப்படும். அதில் ரூ25 ஆயிரம் பணம் இருக்கும் அந்த பணத்திற்கு நீங்கள் தினம் ரூ500 விதம் 6 மாதத்திற்குச் செலவு செய்து கொள்ளலாம்.
இப்படி பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றினால் அந்த கார் அதன் பிறகு ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 15-20 கி.மீ மைலேஜை சிட்டி டிரைவிங்கிலும், 25-30 கி.மீ மைலேஜை ஹைவே டிரைவிங்கிலும் கிடைக்க வைக்கும். உங்கள் காரை சிஎன்ஜி காராக மாற்றுவது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








