உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உங்கள் வாகனத்தின் டயர் எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? என்பதை கண்டுபிடிக்கும் எளிய வழிமுறையை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வாகனத்தின் டயர்களை மாற்றுவதற்கு நாம் தவறி விடுகிறோம். இதன் பின்னால் இருக்கும் பிரச்னைகளை நாம் புரிந்து கொள்வது இல்லை. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை டயர்களை மாற்றாவிட்டால், பயணத்தின்போது நீங்கள் இடையூறுகளை சந்திக்க நேரிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதாவது டயர்களில் திடீரென ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், நெடுஞ்சாலையில் தவிக்க நேரிடலாம். டயர்களுக்கு வயதாகி விட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், இந்த பிரச்னையில் மாட்டி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் டயர்களின் வயதை அறிந்து, அவற்றை உடனடியாக மாற்றாவிட்டால், வாகனம் சிறப்பான மைலேஜை வழங்காது.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகம். இதன் காரணமாக வாகனத்தின் மைலேஜூக்கு பலர் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். அதிக மைலேஜ் கிடைப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை அவர்கள் பின்பற்றவும் செய்கின்றனர். எனினும் டயரின் வயதை அறிந்து அதனை மாற்றாவிட்டால், எந்தவொரு வாகனம் என்றாலும் நல்ல மைலேஜ் கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், சரியான நேரத்தில் டயர்களை மாற்றியாக வேண்டும். அதற்கு டயர்கள் எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? என்பது தெரிய வேண்டும். ஆனால் டயர்கள் எப்போது உற்பத்தி செய்யப்பட்டது என்பதை எப்படி கண்டறிவது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே இந்த விஷயங்களை இந்த செய்தியில் நாங்கள் விளக்குகிறோம்.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதற்கு முன் டயர்களை குறிப்பிட்ட காலத்தில் ஏன் மாற்ற வேண்டும்? ஒரு டயரை எவ்வளவு காலம் வரையில் பயன்படுத்தலாம்? என்பதையும் தெரிந்து வைத்து கொள்வது அவசியம். டயர்களின் வயதை பொறுத்தே வாகனத்தின் செயல்திறன் அமையும். டயருக்கு அதிக வயதாகி விட்டால், வாகனத்தின் செயல்திறனில் பாதிப்புகள் ஏற்படும்.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதிலும் குறிப்பாக மிக அதிக வயதான டயர்களை பயன்படுத்தினால், நாங்கள் ஏற்கனவே கூறியபடி உங்கள் வாகனம் சிறப்பான மைலேஜை வழங்காது. சரி, ஒரு டயரை எவ்வளவு காலத்திற்கு பயன்படுத்தலாம்? என்ற கேள்வி தற்போது உங்களுக்கு வந்திருக்கும். பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை டயர்களை மாற்றி விட வேண்டும் என்கின்றனர்.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் இது அதிகபட்ச காலம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2 முதல் 4 ஆண்டுகளுக்கு உள்ளாக டயரை மாற்றி விடுவது நல்லது. முன்கூட்டியே டயர்களை மாற்றுவதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். பெரும்பாலான டயர் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது டயர்களுக்கு 4 முதல் 5 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்குகின்றன.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் புதிதாக ஒரு டயரை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம். அப்படியானால் 4 முதல் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்தானே? என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். ஆனால் மற்றொரு முக்கியமான விஷயத்தை இங்கே நாம் கவனிக்க வேண்டும். அதாவது 2018ம் ஆண்டில் ஒரு டயரை நீங்கள் வாங்கியிருந்தால், அதனை 2022ம் ஆண்டு மாற்றினால் போதும் என நீங்கள் நினைக்கலாம்.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால் நீங்கள் வாங்கிய டயர் 2018ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருந்தால் மட்டுமே இது நடைமுறைக்கு ஒத்து வரும். அதுவும் கூட 2 முதல் 4 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் டயர்களை மாற்றி விடுவது என்பதை கருத்தில் கொண்டால், 2022ம் ஆண்டிற்கு முன்பே டயர்களை மாற்றுவது அவசியம்.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதுவே நீங்கள் வாங்கிய டயர் 2017ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், அதாவது 2017ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டு அதனை நீங்கள் 2018ம் ஆண்டில் வாங்கியிருந்தால், 2021ம் ஆண்டு வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே டயர் வாங்கும்போது, அது எப்போது உற்பத்தி செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதனை நாம் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். அனைத்து டயர்களின் பக்கவாட்டிலும் 4 இலக்க எண் வழங்கப்பட்டிருக்கும். இதில், முதல் 2 இலக்கங்கள் டயர் உற்பத்தி செய்யப்பட்ட வாரத்தை குறிக்கிறது. அதே சமயம் கடைசி இரண்டு இலக்கங்கள் டயர் உற்பத்தி செய்யப்பட்ட வருடத்தை குறிக்கிறது. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறோம்.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

0918 என்ற நான்கு இலக்க எண்களை இங்கே நாம் உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். இதில், முதல் இரண்டு இலக்கங்களான 09 என்பது டயர் உற்பத்தி செய்யப்பட்ட வாரத்தை குறிக்கிறது. கடைசியில் இருக்கும் இரண்டு இலக்கங்களான 18 என்பது டயர் உற்பத்தி செய்யப்பட்ட வருடத்தை குறிக்கிறது. உங்களுக்கு தற்போது தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

உங்க வண்டி டயரின் வயதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். இந்த டயர் 2018ம் ஆண்டின் 9வது வாரத்தில் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும். 2018ம் ஆண்டின் 9வது வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இந்த டயர் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். இந்த வழிமுறையை பின்பற்றி உங்கள் வாகனத்தின் டயர் எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? என்பதை கண்டறிந்து, சரியான நேரத்தில் மாற்றி விடுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How To Find Manufacturing Date Of Your Vehicle Tyre: Detail Explanation. Read in Tamil
Story first published: Thursday, July 29, 2021, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X