கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

உங்கள் கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு அருகில் சிறியதாக ஒரு அம்புக்குறி வழங்கப்பட்டிருக்கும். அது எதற்காக? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

நாம் அனைவரும் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டும். நாம் ஓட்டி செல்லும் காரில் எரிபொருள் டேங்க் எங்கே உள்ளது? என்பதை சில சமயங்களில் மறந்து விடுகிறோம். அல்லது நண்பர்களிடம் இருந்து வாங்கி வரப்பட்ட கார் என்றால், எரிபொருள் டேங்க் எங்கே அமைந்துள்ளது? என்பது நமக்கு தெரியாமல் போய் விடுகிறது.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

இதன் காரணமாக பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வினியோகம் செய்யும் இயந்திரத்திற்கு தவறான பக்கத்தில் நாம் காரை நிறுத்தி விடுகிறோம். பெட்ரோல் பங்க்குகளில் இந்த தர்மசங்கடமான சூழலை பெரும்பாலானோர் எதிர்கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும் இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

ஏனெனில் நம்மில் பலரும் செய்து வரும் ஒரு தவறுதான் இது. பொதுவாக அனைத்து கார்களிலும் எரிபொருள் டேங்க் மூடி ஒரே இடத்தில் அமைந்திருப்பதில்லை. கார் நிறுவனங்கள் மற்றும் கார்களை பொறுத்து அதன் அமைவிடம் வேறுபடுகிறது. இதன் காரணமாகதான் பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வினியோகம் செய்யும் இயந்திரத்திற்கு சரியான பக்கத்தில் காரை நிறுத்துவதில் குழப்பம் ஏற்படுகிறது.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

எரிபொருள் டேங்க்கின் அமைவிடத்தை கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்று ஒரு சில குடும்பங்களில் நிறைய கார்கள் இருக்கின்றன. எனவே காரை மாற்றி எடுத்து செல்லும்போது, எரிபொருள் டேங்க் மூடி எங்கே உள்ளது? என்பது மறந்து போய் விடுகிறது. ஒரு சில குடும்பங்களில் 4, 5 கார்கள் இருக்கின்றன.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

எனவே பெட்ரோல் பங்க்கிற்கு சென்றவுடன் கடைசி நிமிடத்தில் எரிபொருள் டேங்க் மூடி எங்கே இருக்கிறது? என்பதை நினைவுபடுத்துவது சில சமயங்களில் சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. அத்துடன் நண்பர்கள் காரையோ அல்லது வாடகை காரையோ பெட்ரோல் பங்க்கிற்கு ஓட்டி செல்லும்போது கூட இந்த பிரச்னை ஏற்படுகிறது.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

ஆனால் இந்த பிரச்னைக்கு மிகவும் எளிமையான தீர்வு ஒன்று உள்ளது. காரில் எவ்வளவு எரிபொருள் உள்ளது? என்பதை, ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் உள்ள ஸ்பீடோமீட்டர் கன்சோலில் நம்மால் பார்க்க முடியும். உங்கள் காரை பொறுத்து, இது அனலாக் ஆகவோ அல்லது டிஜிட்டல் ஆகவோ இருக்கலாம். இங்கே உள்ள ஃப்யூயல் லெவல் இன்டிகேட்டரை நன்றாக உற்று நோக்குங்கள்.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

எரிபொருள் வினியோகிக்கும் இயந்திரம் போன்ற ஒரு சிறிய ஐகானை நீங்கள் காண முடியும். இதற்கு அருகே ஒரு அம்புக்குறி வழங்கப்பட்டிருக்கும். இந்த அம்புக்குறிக்கான அர்த்தம் தெரியாமல்தான் பலரும் குழப்பம் அடைந்து விடுகின்றனர். எரிபொருள் டேங்க் மூடி எங்கே அமைந்துள்ளது? என்பதை இந்த அம்புக்குறி உங்களுக்கு சரியாக சொல்லி விடும்.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

உதாரணத்திற்கு நாங்கள் மேலே வழங்கியிருக்கும் படத்தை பாருங்கள். இங்கே அம்புக்குறி இடது பக்கத்தை காட்டுகிறது (சிகப்பு நிறத்தில் வட்டமிடப்பட்டுள்ளது). அப்படியானால் எரிபொருள் டேங்க் மூடி காரின் பின் பகுதியில் இடது பக்கத்தில் அமைந்துள்ளது என அர்த்தம். இதை பொறுத்து பெட்ரோல் பங்க்குகளில் நீங்கள் காரை சரியாக நிறுத்தலாம்.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

ஆனால் அனைத்து கார்களிலும் இந்த அம்புக்குறி இருக்காது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வினியோகம் செய்யும் இயந்திரத்திற்கு தவறான பக்கத்தில் நீங்கள் காரை நிறுத்தி விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் சில பெட்ரோல் பங்க்குகளில் மிக நீளமான பைப்களை பயன்படுத்துகின்றனர்.

கார்களில் பெட்ரோல் பம்ப் ஐகானுக்கு பக்கத்துல ஒரு அம்புக்குறி இருக்கும்... அது எதுக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க

அந்த பைப்களை காரின் மறுபக்கத்திற்கு கொண்டு வந்து எரிபொருள் நிரப்ப முடியும். இருந்தாலும் உங்கள் காரில் அம்புக்குறி இருக்கும்பட்சத்தில், அதனை ஒரு முறை பார்த்து கொள்வது சிறப்பானதாக இருக்கும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How To Find The Location Of The Fuel Tank Lid In Your Car? Use This Simple Technique. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X