கடைசி நேரத்துல தட்கல் டிக்கெட் கூட கிடைக்கலையா? ஈஸியா டிக்கெட் வாங்க இன்னொரு வழியிருக்குது!
ரயில் பணத்திற்காகக் கடைசி நேரத்தில் பலர் தட்கல் முறையில் டிக்கெட் புக்கிங் செய்வார்கள். ஆனால் அதிலும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் வேறு ஒரு வழியிருக்கிறது. இதை பற்றித்தான் விரிவாகக் காணப்போகிறோம்.
ரயில் டிக்கெட் புக் செய்வது என்றால் அது கயிற்றின் மீது நடக்கும் கதை தான். இந்தியாவில் ரயில் டிக்கெட்களை புக் செய்ய ஐஆர்சிடிசி என்ற ஒரே தளம் தான் இருக்கிறது. இதில் தான் இந்தியாவில் எந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்றாலும் டிக்கெட்டை இதில் தான் புக்கிங் செய்ய வேண்டும். இதில் புக் செய்யும் போது பலர் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடியிருப்பார்கள்.

ரயில் பயணத்திற்கான டிக்கெட் பல மாதங்களுக்கு முன்பே ஓப்பன் செய்யப்படுவதில் பெரும்பாலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விடுகிறது. ஐஆர்சிடிசி கடைசி நேரத்தில் பயணிப்பவர்களுக்காகவே தட்கல் என்ற முறையில் டிக்கெட் புக்கிங்கை நடத்தி வருகிறது. இது ரயில் கிளம்புவதற்கு முந்தைய நாள் டிக்கெட் முன்பதிவு ஒப்பன் செய்யப்படும்.
இதில் ஏசி பெட்டிகளுக்காகக் காலை 10 மணிக்கும், ஏசியில்லாத பெட்டிகளுக்காகக் காலை 11 மணிக்கும் தட்கல் டிக்கெட் புக்கிங் ஒப்பன் செய்யப்படும். கடைசி நேரத்தில் பயணத்திற்காக டிக்கெட் கிடைக்காமல் இருப்பவர்கள் இதில் டிக்கெட்டை புக்கிங் செய்ய முடியும். ஆனால் இது சாதாரண டிக்கெட் புக்கிங்கை விடச் சற்று விலை அதிகம். இது எல்லாம் நமக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் இதிலும் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு மேலும் ஒரு வழியிருக்கிறது.
பலருக்கு இப்படி ஒரு வழியிருப்பதே தெரியாது. தட்கல் டிக்கெட்டிலேயே பிரிமியம் தட்கல் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அது தட்கல் டிக்கெட்டை காட்டிலும் விலை உயர்வாக இருக்கும். குறிப்பாக இந்த முறையில் குறிப்பிட்ட அளவில் தான் விலை இருக்கும் என்றில்லை டிமாண்டிற்கு ஏற்ப அதன் விலை மாறுபடும்படி ஐஆர்சிடிசி அமைத்துள்ளது. பலருக்கு இந்த முறையில் டிக்கெட் புக்கிங் செய்வது பற்றித் தெரியாது.
ஐஆர்சிடிசி தளத்திலேயே பிரிமியம் தட்கல் முறையில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். இந்த பிரிமியம் தட்கல் முறை ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் ஒரு முறை. ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேரடியாகச் சென்று இந்த முறையில் டிக்கெட்களை புக்கிங் செய்ய முடியாது. மேலும் தட்கல் முறையில் டிக்கெட் புக்கிங் செய்யும் அதே முறை தான் இதிலும் இருக்கிறது. இந்த முறையில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டால் அந்த டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வராது.
இந்த டிக்கெட்டை புக் செய்ய ஐஆர்சிடிசி தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு நமக்கான கணக்கு தகவல்களைக் கொடுத்து உள்நுழைய வேண்டும். பின்னர் கிளம்பும் ரயில்வே ஸ்டேஷன், சென்று சேரும் ரயில்வே ஸ்டேஷன் பயண தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு என்ன வகையா கோட்டா என்ற கேள்விக்கு பிரிமியம் தட்கல் என்ற ஆப்ஷனை ஃபில் செய்ய வேண்டும்.
இந்த பிரிமியம் தட்கல் வசதி அனைத்து ரயில்களுக்கும் இருக்காது. குறிப்பிட்ட ரயில்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிரிமியம் தட்கல் என்ற கோட்டாவைத் தேர்வு செய்த பின் அந்த ஆப்ஷன் உள்ள ரயில்கள் மட்டுமே பட்டியலிடப்படும். இந்த தட்கல் முறையும் சாதாரண தட்கல் முறை போல ரயில் கிளம்புவதற்கு முந்தைய நாள் தான் ஒப்பன் செய்யப்படும்.
இந்த டிக்கெட்டை புக் செய்ய வழக்கமாக ரயில் டிக்கெட்டை புக் செய்ய எப்படி அரசு வழங்கிய ஐடி கார்டு முக்கியமோ அதே போல தான் இந்த டிக்கெட்டை ஏதேனும் அடையாள அட்டையை வழங்க வேண்டும். இந்த தகவலை ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் திணறும் பலருக்கான விழிப்புணர்வுக்காகவே வழங்கியுள்ளோம்.
பலர் தட்கலிலும் ரயில் டிக்கெட்டை புக் செய்ய முடியவில்லை என்றால் அப்படியேவிட்டு விட்டு பஸ் அல்லது வேறு வழிகளை யோசிக்கத் துவங்கிவிடுகின்றனர். பலருக்கு பிரிமியம் தட்கல் என்ற ஒரு வசதி இருப்பதே தெரியாது. இனி நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போது குறிப்பாகப் பண்டிகை காலங்களில் தட்கலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் உடனடியாக யோசிக்காமல் பிரிமியம் தட்கல் முறையில் டிக்கெட் கிடைக்குமா என யோசியுங்கள் இது பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








