டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

டூப்ளிகேட் ஆர்சி புக்கை வாங்குவது எப்படி என்கிற தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

நம்ம ஆளுங்க தினமும் பயன்படுத்தக் கூடிய பொருட்களையே அசால்டா தொலைச்சிடுவாங்க. இதுல எப்போவாச்சும் பயன்படக் கூடிய ஆர்சி புக்கை பற்றி சொல்லவா வேணும். எப்போ ஒரு முறை அது பயன்படுவதனால் இந்த ஆவணத்தை பற்றி நம்மில் பலர் பெரியளவில் அக்கறை கொள்வதில்லை. இதுபோன்று நாம் இருப்பதனால் அது தொலைந்து போனதைகூட நாம் கவனிக்காமல் இருப்போம்.

டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரிடத்தில் சிக்கும்போதே, இப்படி ஒரு ஆவணம் நம்மிடத்தில் இருந்ததும், அது தற்போது தொலைந்து போயிருப்பதும் நம்முடைய கவனத்திற்கு தெரிய வரும். இது ஓர் முக்கிய ஆவணம் என்பதால் இது தொலைந்து போனதை அப்படியே விட்டு விடக் கூடாது. சட்டத்திற்கு புறம்பாக அதை சமூக விரோதிகள் பயன்படுத்த நேரிடலாம்.

டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

ஆகையால், ஆவணம் தொலைந்ததுகுறித்து உரிய துறையினர்களிடத்தில் புகார் அளிப்பது சிறந்தது. அதேநேரத்தில், தொலைந்துபோன ஆவணத்தை டூப்ளிகேட் எடுப்பதும் அவசியம். வாகனங்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும். இது இல்லாத வாகனங்கள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கையை எடுப்பர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

சென்னையில் பதிவு சான்றை டூப்ளிகேட் எடுப்பது எப்படி?

நகல் பதிவு சான்றிற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் ஆகிய இரண்டின் வாயிலாகவும் விண்ணப்பிக்க முடியும். இதை எப்படி செய்வது என்பது பற்றிய விபரங்களையே பின்வருமாறு பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

டூப்ளிகேட் ஆர்சி-யை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்களின் பட்டியல்:

  • ஃபார்ம் 26 விண்ணப்பம்
  • ஆர்சி தொலைந்ததற்கான புகார் அளிக்கப்பட்ட சான்று
  • பியூசி
  • இன்சூரன்ஸ் நகல்
  • முகவரி சான்று
  • அபராதம் ஏதும் இல்லாததற்கான ஆவணம்
  • வரி செலுத்திய ஆவணம்
  • அட்டஸ்ட் செய்யப்பட்ட பான் கார்டு அல்லது ஃபார்ம் 60 மற்றும் ஃபார்ம் 61
  • சேஸிஸ் மற்றும் எஞ்ஜின் எண்
  • உரிமையாளரின் கையொப்பம்
  • ஆர்சி புத்தகம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதற்கான ஆவணம்
  • இந்த சான்றுகள் அனைத்தும் டூப்ளிகேட் ஆர்சி-யை பெற அவசியம் ஆகும்.

    டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

    டூப்ளிகேட் ஆர்சி-க்கான கட்டணம்:

    வாகனங்களின் ரகத்தைப் பொருத்து கட்டணம் மாறுபட்டு வசூலிக்கப்படுகின்றது. இதோ அதுகுறித்த விபரம்:

    இன்வேலிட் ரக கேரேஜ்களுக்கு - ரூ. 25 கட்டணம்.

    மோட்டார்சைக்கிள்களுக்கு - ரூ. 150 கட்டணம்.

    நான் டிரான்ஸ்போர்ட் ரக மூன்று சக்கர வாகனம், குவாட்ரிசைக்கிள், இலகு ரக எடைக் கொண்ட வாகனங்களுக்கு - ரூ. 300

    டிரான்ஸ்போர்ட் ரக மூன்று சக்கர வாகனம், குவாட்ரிசைக்கிள், இலகு ரக எடைக் கொண்ட வாகனங்களுக்கு - ரூ. 500

    மீடியம் கூட்ஸ் வாகனங்கள் மற்றும் மீடியம் பாசஞ்ஜர் மோட்டார் வாகனங்களுக்கு - ரூ. 500

    ஹெவி கூட்ஸ் மற்றும் ஹெவி பாசஞ்ஜர் வாகனங்களுக்கு - ரூ. 750

    இம்போர்டட் மோட்டார் வாகனங்களுக்கு - ரூ. 2500

    இம்போர்டட் மோட்டார்சைக்கிள்களுக்கு - ரூ. 1250

    மேலே குறிப்பிடப்படாத பிற ரக வாகனங்களுக்கு - ரூ. 1500 என கட்டணம் வெவ்வேறாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

    மேலே பார்த்த ஆவணங்கள் மற்றும் கட்டண தொகை உங்களிடத்தில் தயார்நிலையில் இருக்கும் நீங்கள் எந்த தடையும் இன்றி உங்களுடைய வாகனங்களுக்கான டூப்ளிகேட் சான்றை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்தும் தயார் நிலையில் இருக்கும்நிலையில், அரசின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான பாரிவாஹன் (https://parivahan.gov.in) உள்நுழைய வேண்டும்.

    டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

    இந்த தளத்தில் உள்நுழைந்த பின்னர் முகப்பு பகுதியில் பல்வேறு டேப்கள் வழங்கப்பட்டிருக்கும். அதில், ஆன்லைன் சர்வீஸ் எனும் பக்கத்திற்குள் உள்நுழைய வேண்டும். அதற்குள் நுழையும்பட்சத்தில் நம்முடைய மாநிலம் மற்றும் ஆர்டிஓ பற்றிய விபரம் அங்கு கேட்கும். இவற்றை உள்ளிட்ட பின்னர் அந்த தளம் அடுத்தகட்ட நடவடிக்கை நம்மை எடுத்து செல்லும். அந்த பக்கத்திலேயே ஓனர்ஷிப்பை மாற்றுவது, முகவரி மாற்றம் செய்வதற்கான ஆப்ஷன்கள் இடம் பெற்றிருக்கும்.

    டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

    அதாவது பே-டேக்ஸ் எனும் பட்டனுக்கு அடுத்த பட்டனிலேயே இந்த ஆப்ஷன்கள் இடம் பெற்றிருக்கும். அதில், டூப்ளிகேட் பதிவு சான்றை பெறுவதற்கான ஆப்ஷனில் உள்நுழைய வேண்டும். அதில் நுழையும்பட்சத்தில் வாகனத்தின் பதிவெண், சேஸிஸ் நம்பர் உள்ளிட்டவை கேட்கப்படும். அவற்றை பதிவிடும்பட்சத்தில் அடுத்தடுத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை அந்த தளம் கேட்கும்.

    டூப்ளிகேட் ஆர்சி புக்கை பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?.. ப்ரோக்கர் உதவி இல்லாம நாமே வாங்கிடலாம்!

    அனைத்தையும் நிரப்பிய பின்னர் கடைசியாக டூப்ளிகேட் சான்றிற்கான கட்டணத்தை செலுத்துமாறு தளம் கேட்கும். அதை செலுத்திய பின்னர் உங்களுக்கான ஆவணத்தை வழங்கும் பணிகள் தொடங்கப்படும். இதுபோலவே, ஓனர்ஷிப்பை பரிமாற்றம் செய்வது, முகவரி மாற்றம் செய்வது போன்றவற்றை ஆன்லைனில் மிக சுலபமாக செய்து கொள்ள முடியும்.

Article Published On: Thursday, November 3, 2022, 12:22 [IST]
English summary
How to get duplicate registration certificate online in chennai
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+