ரொம்ப பழசு போல தெரிஞ்சாலும் உடனே புதுசுபோல மாத்திடலாம்... வெது வெதுவெனு தண்ணி, சோப்பு கரைசலே போதும்!

வாகனங்களில் அழகிற்காக வழங்கப்படும் குரோம் பூச்சு அணிகலனை பழையதாவதை தவிர்ப்பது எப்படி என்கிற டிப்ஸையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். மூன்றே வழிகளைக் கடைப்பிடிப்பதனால் இவற்றை மிக பழையதாக இருந்தாலும் புதிது போல் மாற்றிவிட முடியும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை காணலாம், வாங்க.

கார்களில் அழகுக்காக வழங்கப்படும் பன்முக அம்சங்களில் குரோம் பூச்சாலான அணிகலனும் ஒன்று. கார் கை பிடி தொடங்கி கிரில் வரை என பல பகுதிகளில் இதைக் காண முடியும். காரின் கவர்ச்சியான வெளிப்புற தோற்றத்திற்காக முக்கிய பகுதிகளில் அது வழங்கப்படுகின்றது. கார்களில் மட்டுமில்லைங்க இருசக்கர வாகனங்களிலும் டூ-வீலர் உற்பத்தியாளர்கள் அழகுக்காக பயன்படுத்துகின்றனர். உதாரணமாக சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டர் மாடலில் ஹெட்லைட்டைச் சுற்றிலும், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் முன் பக்க ஃபெண்டரிலும் வழங்கப்பட்டிருக்கும்.

குரோம்

மங்கலாக ஆகிடுச்சா?..

அழகுக்காக வழங்கப்படும் இந்த அம்சமே சில நேரங்களில் வாகன உரிமையாளர்களுக்கு தலை வலியை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடுகின்றது. வாகனத்தின் பிற உடல் பகுதியில் படரும் அழக்குகள் மற்றும் தூசிகளை அகற்றுவது மிக சுலபம். ஆனால், குரோம் அணிகலன் மீது படரும் சில பிசுக்குகளை அகற்றுவது என்பது சாவாலானது. சரியாக அவற்றை அகற்றவில்லை எனில் அழகான அந்த அணிகலன், மங்கலாக தெரிய ஆரம்பிக்கும். அது வாகனத்தின் ஒட்டுமொத்த அழகையுமே சீர் குலைக்கும் வகையில் அமைந்துவிடும்.

எனவேதான் வாகன உரிமையாளர்கள் சிலர் குரோம் பூச்சு அணிகலன் கொண்ட வேரியண்டை தவிர்த்துவிடுகின்றனர். அதேவேளையில், இதில் என்ன மாதிரியான சிக்கள் இருந்தாலும் பரவாயில்லை என நினைத்து வாங்குபவர்களும் இருக்கின்றனர். அவ்வாறு அதிகம் குரோம் பூச்சு அணிகலன் கொண்ட வாகனத்தை வைத்திருப்போருக்கு உதவும் விதமாக, அந்த அணிகலனை பராமரிக்கும் சில எளிய டிப்ஸையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

வெது வெதுனு தண்ணி, மைக்ரோஃபைபர், சோப்பு கரைசல்..

வெது வெதுப்பான சோப்பு தண்ணியும், மைக்ரோஃபைபர் துணியே குரோமை சுத்தம் செய்ய போதுமானதாக இருக்கின்றது. குரோம் அணிகலன் ஸ்பெஷல் அம்சம் என்பதால், அதை வழக்கமான பாடி கிளீனிங்கிற்கு உட்படுத்துவதைப் போல் செய்வது நல்ல பலனை வழங்காது. எனவேதான் அதைத் தனியாக கவனிக்க வேண்டும் என்பது எங்களின் பரிந்துரையாக இருக்கின்றது. முதலில் துணியை சோப்பு கலந்த தண்ணீரில் நனைக்க வேண்டும். இதன் பின்னரே அந்த துணியைக் கொண்டு குரோம் அணிகலனைச் சுத்தம் செய்ய வேண்டும்.

டபிள்யூடி 40 ரசாயனம்

ஆரம்பத்தில் துணியை வட்ட வடிவில் குரோம் அணிகலன்மீது தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக அணிகலன் விரைவில் சுத்தமாக தொடங்கும். இந்த செயலில் கரை போகவில்லை என்றால் சற்று சுரசுரப்பான துணியைக் கொண்டு ஸ்கிரப் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் வாயிலாக விடா பிடியான கரைகள்கூட நீங்க தொடங்கும். இதிலும், சில கரைகள் நீங்காமல் இருப்பதை நம்மால் காண முடியும். இதை நீக்க டபிள்யூடி-40 போன்ற ரசாயனத்தை பயன்படுத்தலாம்.

குரோம்

ஸ்பாஞ்சு இருந்தா கூடுதல் சிறப்பு

இதை பயன்படுத்தும்போது மைக்ரோஃபைபர் துணியும் போதுமானது. தேவைப்பட்டால், ஸ்பாஞ்சு போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் பின்னர் பாலிஷைப் பயன்படுத்தலாம். இது கூடுதல் பலபலப்பை குரோம் அணிகலனிற்கு வழங்கும். ஸ்கிராட்ச் போன்றவை கண்ணில் தென்பட்டால், தாராளமாக மெட்டல் பாலிஷை பயன்படுத்தலாம். குறிப்பாக பாலிஷை பன்படுத்தும்போது பிராண்ட் பாலிஷை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பரிந்துரை. இதன் பயன்படுத்துவதன் வாயிலாக நீண்ட நாட்களுக்கு குரோம் புதிதுபோல் தெரியும்.

பளபளப்பாயிடும்

பாலிஷை பயன்படுத்தும்போது இரண்டு மைக்ரோஃபைபரைப் பயன்படுத்தலாம். முதலில் பாலிஷை பயன்படுத்தும்போது ஓர் துணியும், கடைசியில் இரண்டாவது துணியையும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் வாயிலாக நல்ல இறுதி முடிவை பெற முடியும். அதாவது, சூப்பரான பளபளப்பான குரோமை நம்மால் காண முடியும். மெட்டல் பாலிஷைப் போலவே குரோமை புதிதுபோலும், பாதுகாப்பானதாகவும் வைத்திருக்க பாலிஷ் சீலண்டுகள் உள்ளன. இவை குரோமை பாதுகாக்கும் திறன் கொண்டவை.

சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்

குறிப்பாக, துரு, பிசுக்கு போன்றவற்றில் இருந்து இது குரோமை ஓர் காப்பானாக காக்கும். இதை வாங்கி பயன்படுத்தும் எண்ணம் இருந்தால், நீங்கள் பிராண்டட் அம்சத்தை பயன்படுத்துவதே மிக சிறந்தது. இதன் வாயிலாகவே நல்ல ரிசல்டை நம்மால் பெற முடியும். மேலே பார்த்த இந்த அனைத்து ஸ்டெப்புகளையும் நீங்களே உங்கள் வீட்டிலேயே வைத்து செய்ய முடியும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் பணத்தை மட்டுமல்ல நீண்ட நாட்களுக்கு உங்கள் வாகனத்தையும் புதிதுபோல் காண்பிக்க முடியும்.

Most Read Articles

English summary
How to make chrome inserts shine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X