ரயில் பயணத்தின் போது செல்போன் தவறிவிழுந்தால் திரும்ப எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? இது இவ்வளவு ஈஸியா?

இந்தியாவிலேயே பயணங்களிலேயே சுகமானது ரயில் பயணம் தான், நீண்ட தூரப் பயணத்திற்குக் குறைவான விலையிலும் சொகுசாகவும் பயணிக்க ஏற்றது ரயில் தான். ஆனால் இந்த ரயில் பயணம் என்பது பல்வேறு சிக்கல்களையும் உள்ளடக்கியது. இதில் ஒரு சில ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது. பலர் இதனால் ரயில் பயணத்தைச் செய்யவே சற்று யோசிக்கின்றனர்.

ரயில் பயணத்தின் போது பலருக்கு இருக்கும் பிரச்சனை ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது ரயிலுக்கு வெளியே ஏதாவது பொருள் தவறி விழுவது தான். ஏதாவது விலை குறைந்த பொருட்கள் விழுந்தால் பரவாயில்லை ஆனால் விலை உயர்வான பொருட்கள் விழுந்தால் என்னவாகும்? பலர் அப்படித் தவற விட்ட விலை உயர்வான பொருள் செல்போன் தான்.

ரயில் பயணத்தின் போது செல்போன் தவறிவிழுந்தால் திரும்ப எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? இது இவ்வளவு ஈஸியா?

பலர் ரயில் பயணத்தின் போது ஜன்னல் அல்லது படியின் அருகே செல்போனை பயன்படுத்தியபடி வருவர், அல்லது இயற்கைக் காட்சியைத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தபடி வருவார்கள். அப்பொழுது தவறி ரயிலுக்கு வெளியே விழுந்துவிடும். இப்படியாக செல்போன் ரயிலுக்கு வெளியே விழுந்தால் அவ்வளவு தான் என நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் உண்மையில் ரயிலுக்கு வெளியே செல்போன் போன்ற அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்கள் விழுந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்த பொருளைத் திரும்ப வாங்கவும் வழி இருக்கிறது. முதலில் எல்லோரும் செல்போன், தங்க மோதிரம், செயின் போன்ற விஷயங்கள் ரயிலில் வெளியே தவறி விழுந்துவிட்டால் ரயிலின் சங்கிலியைப் பிடித்து இழுக்க வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால் ரயிலை நிறுத்துவதற்கான சங்கிலி என்பது அவசர காலகட்டத்தில் பயன்படுத்தக்கூடியதுதான். செல்போன், தங்கப் பொருட்கள் ரயிலிருந்து கீழே விழுந்து அவசரக்காலமாகக் கருத முடியாது அதனால் நீங்கள் அப்படியாகப் பொருட்கள் விழுந்ததும் நீங்கள் ரயிலின் சங்கிலியைப் படித்து இழுத்தால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அப்படியென்றால் பொருட்கள் விழுந்துவிட்டால் அவ்வளவு தானா என நீங்கள் கேட்கலாம்.

அதான் இல்லை, ரயிலில் பயணிக்கும் போது ஏதாவது அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்கள் தவறி விழுந்துவிட்டால் நீங்கள் பதறாமல் விழுந்த இடத்தை நினைவில் வைக்கும் படி அருகில் உள்ள எலெக்ட்ரிக் கம்பத்தில் பதிக்கப்பட்டுள்ள நம்பரை நோட் செய்ய வேண்டும். ஒவ்வொரு கம்பியிலும் ஒவ்வொரு நம்பர் வழங்கப்பட்டிருக்கும்.

இதை நோட் செய்தவுடன் ரயிலில் செயினை படித்து இழுக்காமல் ரயில்வே போலீஸ் கண்ட்ரோல் ரூம் எண் 182 என்ற அவசர உதவி எண்ணிற்கு போன் செய்ய வேண்டும். அவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கும் ரயில், தற்போது எந்த இரு ஸ்டேஷன்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கிறது, ரயிலின் எண்,

ரயிலின் நீங்கள் அமர்ந்திருக்கும் பெட்டி மற்றும் இருக்கை எண், நீங்கள் தவற விட்ட பொருள் குறித்த தகவல்களை எல்லாம் தெரிவித்தால் அவர்கள் உங்களுக்கு உதவும் வகையில் நீங்கள் பொருளைத் தொலைத்த இடத்திற்கு அருகில் உள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்றோ அல்லது அங்கு பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களைத் தொடர்பு கொண்ட பொருட்களைத் தேட ஆரம்பித்துவிடுவார்.

இதற்கிடையில் அந்த பொருளைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலும் உங்களுக்கு அவசர உதவி எண்ணில் பேசும் போதே தெரிவிக்கப்படும். பெரும்பாலும் அடுத்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் உள்ள ஒரு ஸ்டேஷனில் உங்களை இறங்கச் சொல்லி இது குறித்து புகாரைப் பதிவு செய்யச் சொல்லுவார்கள்.

அதற்குள் நீங்கள் சொன்ன பொருளை ரயில்வே போலீசார் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் அதை உங்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள். ஆனால் இது விலை உயர்ந்த பொருட்களுக்கு மட்டுமே நீங்கள் செருப்பைத் தவறவிட்டால் அதற்கெல்லாம் போலீசில் புகார் கொடுக்க முடியாது. குறைந்தது அந்த பொருளின் தற்போதைய மதிப்பு ரூ1000த்திற்கு மேல் இருக்க வேண்டும்.

நீங்கள் பொருளைத் தவிர விடும் இடம் அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தால் எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால் அதிக ஆள் நடமாட்டம் இருந்தால் நீங்கள் தவறிவிட்ட பொருளை வேறு ஒருவர் எடுத்துச்சென்றிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியா ரயில்வே போலீஸ் உதவியை நாடுவது உங்கள் பொருள் திரும்பக் கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அதே போல விழுந்தால் ஏற்பட்ட சேதத்திற்கும் போலீசார் பொறுப்பு கிடையாது.

ஆனால் நிச்சயம் இதை ஒரு முயற்சியாகச் செய்து பார்க்கலாம். பொருள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியாகப் பலர் தாங்கள் ரயில் பயணத்தின் போது தவறவிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இந்த பொருட்களுக்காக ரயிலில் செயினை இழுப்பது குற்றமாகும். இதற்கு ரூ1000 அபராதம் அல்லது ஜெயில் தண்டனை கூட கிடைக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 16:00 [IST]
English summary
How to recover valuable items that fall out from moving train
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+