மழை வெள்ளத்துல வாகனம் முழ்கிடுச்சா... பதற்றத்துல இதை மட்டும் பண்ணிடாதீங்க...
பெங்களூருவில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பாதுகாப்பது எப்படி என காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெரு நகரங்களில் மழை பெய்தால் ஊர் முழுவதும் மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிப்பது என்பது மிகவும் சாதாரண விஷயமாகிவிட்டது மழை காலங்களில் மக்கள் எல்லோரும் தற்போது வெள்ளத்தை சந்திக்க தயாராகிவிட்டனர். இப்படியாக வெள்ளம் தேங்கும் நகரங்களில் தற்போது பெங்களூருவும் இணைந்துள்ளது.

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால் அந்நகரின் மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், ஒயிட் ஃபீல்டு ஆகிய பகுதிகளில் வெள்ளி நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியாளிக்கிறது. இப்பகுதி ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதியாகும்.

இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஏராளாமானோர் கார், பைக் என ஏதாவது ஒரு வாகனத்தை வைத்திருக்கின்றனர். இந்த வாகனங்கள் எல்லாம் தற்போது வெள்ள நீரில் முழ்கியுள்ளது. இந்த பதிவில் நாம் இப்படியாக வெள்ளத்தில் முழ்கிய வாகனங்களை எந்த சேதாரமும் இல்லாமல் எப்படி மீட்பது எப்படி காப்பாற்றுவது என்று காணப்போகிறோம்.

முதலில் வெள்ள நீர் சூழ்வதற்கு முன்பு காரை எப்படி பாதுகாக்க வேண்டும் என பார்க்கலாம். முதலில் நீங்கள் இருக்கும் இடத்தில் வெள்ள வர வாய்ப்பு இருப்பதாக அறிந்தால் முதலில் உங்கள் வாகனத்தை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி உயரமான எளிதில் தண்ணீர் வர முடியாத இடத்திற்கு எடுத்து சென்றுவிடுங்கள்.

வாகனம் தண்ணீரில் முழ்கிவிட்டால் சில நாட்களுக்கு நீங்கள் வாகனத்தை பயன்படுத்த முடியாது. அது போக மெக்கானிக் செலவும் அதிகமாகும். அதனால் வாகனத்தை தண்ணீரில் முழ்காதபடி வைப்பதே முதல் நடவடிக்கையாக இருக்கவேண்டும். அப்படி நிறுத்தினால் மட்டும் போதாது அடுத்து தண்ணீர் நீங்கள் நிறுத்தியிருக்கும் பகுதிக்கும் வர வாய்ப்பு இருக்கிறது.

அதனால் அப்படி தண்ணீர் வரும்பட்சத்திலிருந்து வாகனத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் வாகனத்தின் பேட்டரியை வாகனத்திலிருந்து கழட்டிவிடுங்கள் இதனால் வாகனம் தண்ணீரில் முழ்கினாலும் பேட்டரி பாழாவதை தடுக்க முடியும். கார் வைத்திருந்தீர்கள் என்றால் காரின் ஜன்னல் கண்ணாடிகளை முழுவதுமாக சிறுது கூட இடைவெளியில்லாமல் ஏற்றி விட்டுக்கொள்ளுங்கள்.

இதனால் தண்ணீர் வந்தாலும் தண்ணீர் காருக்குள் செல்வதை தடுக்கலாம். இது தான் உங்களால் செய்ய முடிந்தது. அடுத்ததாக ஒருவேளை உங்கள் வாகனம் தண்ணீரில் முழ்கிவிட்டாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவிட்டால் நீங்கள் ஒன்றும் பெரியதாக கவலைப்படதேவையில்லை. மீண்டும் உங்கள் காரை புதுப்பித்துவிடலாம். அதனால் பதற்றத்தை தவிருங்கள்.

வெள்ள தண்ணீர் இறங்கிய பின்பு முதலில் நீங்கள் செய்யக்கூடாத காரியம் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பது தான். எக்காரணத்தைக் கொண்டு அதை செய்துவிடாதீர்கள். உங்கள் கார் வீணாகிவிடும். அதன்பின்பு உங்கள் கார் எந்த அளவிற்கு முழ்கியது என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கார் முழுவதுமாக முழ்கயதா? அல்லது டயர் மட்டும் முழ்கியதா? பானட் வரை மூழ்கியதா என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுக்கு தெரிந்த மெக்கானிக்கை அழைத்து அவரிடம் கார் எவ்வளவு தூரம் தண்ணீரில் முழ்கியது என்பதை தெரியப்படுத்துங்கள் அவர் அதற்கு தகுந்தார் போல வாகனத்தின் எந்தெந்த பாகங்களுக்குள் தண்ணீர் சென்றிருக்கும் என்பதை அறிந்து அதை மட்டும் தனியாக கழட்டி தண்ணீரை முழுவதுமாக நீக்கி பொருத்திவிட்டால் போதும்.

இதில் வாகனத்தின் எலெக்ட்ரானிக் பாகங்களில் தண்ணீர் புகுந்துவிட்டால் அது வீணாகி போக வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் பேட்டரியை கழட்டி விடவேண்டும் என முன்னரே சொல்லியிருந்தோம். பேட்டரியை கழட்டிவிட்டால் பெரிய அளவில் பிரச்சனை இருக்காது.

காரின் பானட்டிற்குள் தண்ணீர் புகுந்திருந்தால் நீங்கள் காரில் உள்ள எல்லா விதமான விக்யூட்களையும் மாற்றிவிடுவது தான் நல்லது, அதாவது இன்ஜின் ஆயில், ஏசியின் கூலண்ட் கேஸ், ஆகியவற்றை மாற்ற வேண்டும். மேலும் உங்கள் வாகனம் டிஸ்க் பிரேக்காக இருந்தால் அதையும் சுத்தம் செய்து பின்னர் அது சரியாக வேலை செய்கிறதா என பார்த்த பின்பு தான் அதை பயன்படுத்த வேண்டும்.

தற்போது தென்னிந்தியா முழுவதும் மழைக்காலம் தான் அதனால் நீங்கள் உங்கள் வாகனங்களை வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது அவசியம். வெள்ள நீரில் முழ்கினாலும் பதறி போய் காரை வேகமாக ஸ்டார்ட் செய்து மொத்தமாக வீணாக்கி விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications