விமானம் விபத்தில் சிக்க போகுது எனில் இந்த விஷயங்களை செய்ய பாருங்க!! முற்றிலும் அறிவியல்பூர்வமானவை!
விமானத்தில் பயணிப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அத்தனை அடி உயரத்தில் பறக்க போகிறோமே என்பது மறுப்பக்கம் அடி வயிற்றில் புளியை கரைக்கும். ஆனால் உண்மையில் சாலையில் நடைபெறும் வாகன விபத்துகளை காட்டிலும் விமான விபத்துகள் மிகவும் குறைவாகவே நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் அல்லவா. ஆகையால், விமானம் விபத்தில் சிக்கும் சமயத்தில், முடிந்தவரையில் உயிர் தப்பிப்பது எவ்வாறு? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை பற்றி இனி தொடர்ந்து இந்த செய்தியில் விவாதிக்கலாம்.

உடைமைகளை பற்றி யோசிக்காதீர்கள்
விமானத்தில் ஏதேனும் கோளாறு என உங்களுக்கு லைஃப் ஜாக்கெட் கொடுக்கப்படும்போது கொண்டுவந்த உடமைகளை பற்றி எந்த கவலையும் படாமல், உடனடியாக அதனை உடுத்திக்கொண்டு தகுந்த வழிக்காட்டுதல்களின்படி விமானத்தில் இருந்து வெளியேற பாருங்கள்.

ஏனெனில், உடமைகள் விமானத்தில் இருந்து கீழே குதிக்கும்போது இடையூறுகளாக இருக்கும் என்பது ஒரு காரணம் என்றாலும், இதனை காட்டிலும் முக்கியமான காரணம் அதனை அலமாரியில் இருந்து வெளியே எடுத்து, பேக் செய்து கொண்டு வெளியேற கூடுதல் நேரமெடுக்கும். உங்களுக்கு நேரம் சரியில்லையெனில், இந்த கூடுதல் நேரமே உங்களது உயிரை இழக்க காரணமாகிவிடலாம்.

அமரும் இருக்கை
பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று மேற்கொண்ட ஆய்வில், விமானத்தின் இறக்கைக்கு பின்னால் இருக்கும் இருக்கைகளில் அமரும் பயணிகள்விபத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 69% உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதுவே விமானிகளுக்கு பின்னால் முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 100இல் 49% மட்டுமே. வெளியேறும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்திருந்தால் எந்தவொரு காயமும் இன்றி லைஃப் ஜாக்கெட்டின் உதவியுடன் தப்பிப்பதற்கு எளிதாக இருக்கும்.

அமரும் விதம்
விமானத்தில் சீட்பெல்ட் அணிந்து, பிரேஸ் பொசிஷனில் அமர்ந்து பயணம் செய்வோர் விபத்தின்போது உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக பிரபலமான போயிங் நிறுவனம் கடந்த 2015இல் கண்டறிந்து கூறியிருந்தது. பிரேஸ் பொசிஷன் என்பது இருக்கையில் அமர்ந்தப்படி, கால் பாதங்களை நன்கு தரையில் அழுத்தியவாறு, தலையை கால்களுக்கு நடுவில் புதைத்து வைத்தவாறு மடங்கி அமர்ந்திருப்பதாகும்.

இத்தகைய பொசிஷனில் விமானத்தில் எந்தவொரு இருக்கையில் அமர்ந்திருந்தாலும் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இவ்வாறு அமர்வதினால் தலைக்கு வரும் மோதல்களை பெருமளவு தவிர்த்துவிடலாம். விமானம் மட்டுமின்றி மற்ற சாலை வாகன விபத்துகளின்போதும் பிரேஸ் பொசிஷனில் அமர்வது சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆக்ஸிஜன் மாஸ்க்கை உபயோகியுங்கள்
விமானம் கட்டுப்பாட்டு இழப்பதினால் தான் பெரும்பாலும் விபத்திற்குள்ளாகிறது. ஆனால் கட்டுப்பாட்டை இழந்த உடனே முதலாவதாக கேபினிற்குள் காற்றின் அளவு குறையும். காற்று அளவு குறைய, குறைய உங்களால் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவீர்கள். இதே நிலை அடுத்து 20 வினாடிகளுக்கு தொடர்ந்தால், நீங்கள் சுய நினைவை இழப்பீர்கள்.

இதனாலேயே விமானம் கட்டுப்பாட்டை இழக்கும் சமயத்தில் உடனடியாக ஆக்ஸிஜன் மாஸ்க் சரியாக பயணிகளின் தலைக்கு மேல் இருந்து வழங்கப்படுகிறது. இப்போதைக்கு நமக்கு ஆக்ஸிஜன் நன்றாக தானே கிடைக்கிறது என தவிர்க்காமல், ஆகிஸிஜன் மாஸ்க் கீழே விழுந்த அடுத்த நொடியே அதனை எடுத்து மாட்டிக்கொள்ள வேண்டும்.

அணிந்திருக்கும் உடை
பெரும்பாலான விமான விபத்துகளில், விமானம் தரையில் மோதுவதினால் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும், மோதலுக்கு பின் உருவாகும் தீப்பிளம்பினால் தான் கிட்டத்தட்ட 68% உயிரிழப்புகள் நடப்பதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவிக்கிறது.

ஆதலால் விமான பயணங்களை மேற்கொள்ள உள்ளீர்கள் எனில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பாலிஸ்டர், நைலான் ஆடைகளை அணியாமல் முழுவதும் கைகளை மறைத்தப்படியான கம்பளி ஆடை அணிந்து செல்லுங்கள். கால்களுக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தால் சிறந்தது.

சவுகரியமான ஷீ
விமான விபத்துகள் தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் பெருமளவு தவிர்க்கப்பட்டுவிட்டன. இருப்பினும் விமான பயணங்களில் எது வேண்டுமாயினும் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், அதற்கேற்ப நம்மை தயார்படுத்தி கொண்டு பயணிப்பது நல்லது.

இதை ஏன் மறுப்படியும் கூறுகிறேன் என்றால், விமானங்களில் எளிமையாக நடக்க/ஓட ஏற்ற ஷூ-வை அணிந்து பயணம் செய்ய முயற்சியுங்கள். அதேபோல் இறுக்கமான ஷூ-வாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் எப்போதும் வேண்டுமானாலும் கழன்றக்கூடிய அளவில் பெரிய ஷூ-ஐ அணியாதீர்கள். ஏனெனில் இது அவசரகாலத்தில் வெளியேற்றத்தின்போது பிரச்சனையாக அமையக்கூடும்.


Click it and Unblock the Notifications