உங்க பேர்ல புக் பண்ண ரயில் டிக்கெட்டை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றுவது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்ய திட்டமிடும் பலர் கடைசி நேரத்தில் தங்கள் பயணம் ரத்த ஆகியோ அல்லது தங்களுக்கு பதிலாக வேறு நபர் பயணிக்க வேண்டிய சூழ்நிலையோ ஏற்பட்டு பயனட்டிக்கட்டை கேன்சல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இப்படியான நேரங்களில் உங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை வேறொரு பெயருக்கு மாற்றி அவர்களை பயணம் செய்ய வைக்கலாம் இது எப்படி என விரிவாக காணலாம் வாருங்கள்.
உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ரயிலில் செல்ல டிக்கெட்களை பதிவு செய்து கடைசி நேரத்தில் ஏதாவது எமர்ஜென்சி வேலை வந்து அந்த பயணத்தை அவர்கள் செய்ய முடியாமல் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும். இப்படியான நேரங்களில் இந்திய ரயில்வே தற்போது உங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதை குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே மாற்ற முடியும்.

இப்படியாக நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் உங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றால் ரயில் கிளம்புவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பு பெயரை புதிய பயணி பெயருக்கு மாற்ற நீங்கள் விண்ணப்பித்திருக்க வேண்டும் .
இதுவே அரசு ஊழியர் பெயர் மாற்ற வேண்டும் என்றாலோ அல்லது பண்டிகை மற்றும் திருமண பயணிகளுக்காக புக் செய்யப்பட்டு டிக்கெட் என்றாலோ குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்பு இந்த பெயர் மாற்றுவது குறித்த விண்ணப்பத்தை வழங்கி இருக்க வேண்டும். இந்த ஆப்ஷனை என்சிசி கேன்டிடேட்களும் பெற்றுக் கொள்ளலாம்.

இப்படியாக பெயர் மாற்றப்பட்ட நபர் பயணம் செய்யும்போது அவரின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். இவரது பெயருக்கு டிக்கெட்டை மாற்றுவதற்காக முதலில் எடுக்கப்பட்ட டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு ரிசர்வேஷன் மையத்திற்கு செல்ல வேண்டும்.
கூடவே யார் பெயருக்கு மாற்ற வேண்டுமோ அவர்களுடைய ஐடி கார்டு அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது வாக்காளர் ஐடி கார்டு போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தையும் நகலையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்றையும் ரிசர்வேஷன் கவுண்டரில் சமர்ப்பித்து பெயர் மாற்றுவதற்கான விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.

இதை எல்லாம் சரிபார்த்த பின்பு ரிசர்வேஷன் கவுண்டரில் உள்ள ஊழியர் டிக்கெட்டில் உள்ள பெயரை பற்றி கொடுப்பார். அதன்பின்பு பழைய நபர் இனி அந்த டிக்கெட்டில் பயணிக்க முடியாது. புதிய நபர் மட்டுமே அந்த டிக்கெட்டில் பயணிக்க முடியும். இப்படியாக டிக்கெட்டில் பெயர் மாற்ற புதிய நபர் ஏற்கனவே டிக்கெட் உள்ள பெயரில் உள்ள பழைய நபருக்கு ரத்த சொந்தமாக இருக்க வேண்டும்.
இந்திய ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்து பயணிக்கும் பலருக்கும் இப்படி ஒரு வசதி இருக்கிறது என்ற தகவலை தெரியாமல் இருக்கிறது. பலர் இப்படியான தாங்கள் பயணிக்க முடியாமல் வேறு ஒரு குடும்ப உறுப்பினர் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு புதிய டிக்கெட்டை புக் செய்கின்றனர். அல்லது பஸ் போன்ற வேறு ஏதாவது ஒரு வழியாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இனி அப்படி செய்ய வேண்டிய தேவை இல்லை உங்களுக்கு பதிலாக உங்கள் குடும்ப உறுப்பினர் பயணம் செய்ய இந்திய ரயில்வே நிர்வாகமே வசதிகளை வழங்கி உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது 24 மணி நேரத்திற்கு முன்பு உங்கள் டிக்கெட்டையும் உங்கள் அடையாள அட்டையும் உங்களுக்கு பதிலாக பயணிப்பவர்களின் அடையாள அட்டை மற்றும் தகவல்களையும் உரிய ரயில்வே ஸ்டேஷன் ரிசர்வேஷன் சென்டரில் சென்று பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயிலில் பயணிக்கும் பயணிகள் பலர் டிக்கெட்களை முன் பதிவு செய்து பயணிக்கும் பயணிகளாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாது. இனி அவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான் பெயரை மாற்ற முடியும்.


Click it and Unblock the Notifications









