நம் பெயரில் போடப்பட்ட இன்சூரன்ஸை வேறொரு நபருக்கு மாற்றிக் கொடுக்க முடியுமா?.. என்ன செய்தால் மாற்ற முடியும்!
நம் பெயரில் உள்ள இன்சூரன்ஸை வேறொருவரின் பெயருக்கு மாற்ற முடியுமா? அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பிதிவிற்குள் போகலாம்.

வாகனங்களுக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் காப்பீடும் ஒன்று. இது இல்லாத வாகனங்களுக்கு உச்சபட்ச அபராதம் விதிக்கப்படுகின்றது. சமீபத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை தமிழக அரசு திருத்தி அமைத்தது. இந்த திருத்தப்பட்ட விதிகிளின்படி இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் தொடங்கி ரூ. 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகின்றது.

முதல் முறை விதிமீறலில் ஈடுபடும்பட்சத்தில் குறைவான தொகையையும், தொடர்ச்சியாக அதே விதிமீறலில் ஈடுபடுகின்ற பட்சத்தில் உச்சபட்ச அபராதத் தொகையும் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவலர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உச்சபட்ச அபராதத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உரிய காப்பீட்டை பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

காப்பீட்டு திட்டங்களினால் உச்சபட்ச அபராதத்தில் இருந்து மட்டுமில்லைங்க விபத்தினால் ஏற்படும் பெரும் இழப்புகளில் இருந்து தப்பிக்கவும் முடியும். விபத்துகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட காப்பீட்டு திட்டங்கள் பெரும் உதவியை வழங்குகின்றன. நமக்கு மட்டுமின்றி, நம்மால் பிறர் சந்திக்கும் இழப்புகளுக்கும் சரியான தீர்வை வழங்க இன்சூரன்ஸ் உதவுகின்றன.

இத்தகைய இன்சூரன்ஸை நம்முடைய பெயரில் இருந்து மற்றொருவருக்கு மாற்ற முடியுமா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு இருந்த வண்ணம் இருக்கின்றது. இந்த கேள்விக்கான பதிலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பலருக்கு காரின் இன்சூரன்ஸை எப்படி வேறு ஒருத்தரோட பேருக்கு மாற்ற முடியும். அப்படி மாத்திக் கொடுத்திட்டா நம்முடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸை என்ன செய்வது என்கிற சந்தேகமும் எழும்பக் கூடும்.

உங்களுக்கு எழும்பியிருக்கும் இந்த சந்தேகம் சரியே. நம்முடைய பெயரில் இருக்கும் இன்சூரன்ஸை வேறு ஒரு நபரின் பெயருக்கு மட்டுமே மாற்ற முடியும். வேறொரு வண்டிக்கு மாற்றிவிட முடியாது. உதாரணமாக TN 01 AA 1234 என்ற வாகனத்தின் உரிமையாளர் முருகன் என வைத்துக் கொள்வோம். இந்த பதிவெண் கொண்ட காரை குறிப்பிட்ட சில காரணங்களுக்காக முருகன் வேறொரு நபருக்கு விற்றுவிடுகின்றார்.

அவ்வாறு காரை விற்கும்பட்சத்தில் காரின் உரிமத்தை விற்கப்பட்ட அந்த நபருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். இதேபோல், வாகனத்திற்கு போடப்பட்டிருக்கும் இன்சூரன்ஸையும் அவரின் பெயருக்கு தாராளமாக மாற்றிக் கொடுக்க முடியும். இதனால் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் இன்சூரன்ஸ் வீணாவதைத் தவிர்க்க முடியும். அத்துடன், கூடுதல் பொறுப்புகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

இன்சூரன்ஸ் பெயரை மாற்ற தேவைப்படும் ஆவணங்கள் எவை?
முதலில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பெயர் மாற்றத்திற்கான கோரிக்கைய விடுக்க வேண்டும். இதற்கு கணிசமான தொகையை நிறுவனம் வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் சில ஆவணங்களையும் செலுத்த வேண்டியிருக்கும்.

அவற்றின் பட்டியல் இதோ:
புதியதாகப் பெறப்பட்ட பதிவு சான்றிதழின் நகல் /படிவம் 29
காரின் பழைய பாலிசி ஆவணங்கள்
முந்தைய பாலிசிதாரரிடம் இருந்து பெறப்பட்ட என்ஓசி சான்று
புதிய விண்ணப்பப் படிவம், உள்ளிட்ட சான்றுகளை வழங்க வேண்டியிருக்கும்.
இவை அனைத்தும் தயாராக இருக்கும்பட்சத்தில் தடையில்லாமல் பழைய உரிமையாளரின் பெயரில் இருந்து நம்முடைய பெயருக்கு இன்சூரன்ஸை மாற்றிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications