சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!

விமான போக்குவரத்து முன்பை தற்போது பலமடங்கு மிக சுலபமானதாக மாறிவிட்டது. நம்ம ஆட்கள் பலர் ஏற்கனவே பக்கத்து மாவட்டத்திற்கு செல்வதற்குகூட டவுண் பஸ்களைப் போல விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இந்த அளவிற்கு மிக எளிமையானதாக விமானம் பயணம் மாறி இருக்கின்ற இந்த சூழலிலேயே விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவர் ஓர் ரகசிய தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.

அதாவது, சாதாரண வகுப்பிற்கான பயண சீட்டை எடுத்துவிட்டு முதல் வகுப்பில் பயணிக்க என்ன மாதிரியான தந்திரங்களைச் செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களையே அந்த விமான பணி பெண் கூறி இருக்கின்றார். அதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Tips to upgrade first class

விமானத்தின் கடைசி வரிசை இருக்கையில் அமரவும்: கடைசி வரிசையில் அமர்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அங்கு அமர்ந்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு இயற்கையாகவே கிடைக்கக் கூடிய ஓர் நன்மையாகும். கடைசி இருக்கையில் அமர்வதனால் பல்வேறு நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும்.

விமானம் தரையிறங்கிய பின்னர் முதல் ஆளாக விமானத்தில் இருந்து வெளியேறிக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க, கடைசி இருக்கையில் அமரும்போதே ஃபர்ஸ்ட் கிளாஸ் இருக்கையில் அமர்வதற்கான வாய்ப்பும் சில நேரங்களில் கிடைக்க நேரிடுகின்றது. விமானங்களின் எடை பறக்கும்போதும், தரையிறங்கும் போதும் சம நிலையாக இருக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்த காரணத்திற்காகவே, அதாவது, விமானத்தின் எடையை சமநிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் கடைசி வரிசையில் இருக்கும் பயணிகளை முன்னால் உள்ள ஃபர்ஸ்ட் கிளாஸ் இடத்திற்கு மாற்றப்பட நேரிடலாம். ஆனால், விமானத்தில் மிகக் குறைவாக பயணிகள் பயணிக்கும்போதே இந்த மாதிரியான ஜாக்பாட் சூழல் அரங்கேறும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இருக்கையை சரண்டர் (ஒப்படைக்கலாம்) செய்யலாம்: இது மிகவும் தந்திரமான செயல் முறையாகும். விடுமுறை காலங்களில் சென்னை மற்றும் புறநகர் பேருந்துகளைப் போலவே விமானங்களும் அதிக பிசியாக இருக்கும். அந்தவகையில், நீங்கள் புக் செய்திருக்கும் விமானமும் ஃபுல்லாகிவிட்டது அல்லது ஓவர் புக் செய்யப்பட்டு இருக்கின்றது என்றால் அந்த விமான பயணத்தை நீங்கள் தாராளமாக ரத்து செய்ய முன் வரலாம்.

அந்த பயணம் அவசியமற்றது என கருதினால் மட்டும் இதைச் செய்யலாம். விமான போக்குவரத்து நிறுவனங்கள் கேன்சலஷேனால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக குறிப்பிடப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக புக்கிங்கை ஏற்றுக் கொள்ளும். ஆமாங்க, இருக்கும் இருக்கையைவிட அதிக பேரின் பயணத்திற்கான புக்கிங்கை ஏற்றுக் கொள்ளும்.

இந்த மாதிரியான சூழலிலேயே நீங்கள் பயணிக்க புக் செய்திருக்கும் விமானமும் இருக்கிறது என்றால், அந்த டிக்கெட்டை கேன்செல் செய்து அதற்கு பதிலாக வேறொரு நாளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை தருமாறு விமான சேவை நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளலாம். அதேவேளையில், உங்களின் பிரீமியம் டிக்கெட்டை விட்டுக் கொடுப்பதனால் வேறொரு நாளுக்கு மாற்றப்படும் அந்த பயணத்திற்கான டிக்கெட்டை முதல் வகுப்பானதாக தரவும் அவர்களிடம் கேட்கலாம்.

இதைக் கட்டாயம் தவிர்க்காமல் அந்த நிறுவனம் செய்துக் கொடுக்கும். சில நேரங்களில் கூப்பனாக அவர்கள் வழங்குவார்கள். அதைப் பயன்படுத்தி வேறொரு நாளுக்கு மாற்றப்பட்டு இருக்கும் உங்களுடைய பயணத்தை ஃபர்ஸ்ட் கிளாஸில் டிக்கெட்டைப் பயணித்துக் கொள்ள முடியும். இது 99.9 சதவீதம் சாத்தியம் என விமான பணிப் பெண் கூறி இருக்கின்றார்.

அவசரத்தில் உதவ கூடியவர்களாக நீங்க?, அப்படியானவர்கள் நீங்கள் எனில் விமானங்களின் முன் வரிசை இருக்கையில் நிச்சயம் உங்களுக்கு இடம் கிடைக்கும். அவசர காலத்தின்போது இதுமாதிரியானோரின் உதவியே பெருமளவில் தேவைப்படும் என்பதால் விமான பணிப் பெண்கள் முதல் வரிசை இருக்கையில் அமர அனுமதிப்பார்கள். ஆனால், நீங்கள் மருத்துவர், செவிலியர் அல்லது தீயணைப்பு வீரர் போன்றவராக இருத்தல் வேண்டும். இவ்வாறாக இருப்பின் நீங்கள் உங்கள் இருக்கையை அப்கிரேட் செய்ய கோரிக்கை வைக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானத்தில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கான டிப்ஸ்களையே இந்த பதிவில் பார்த்தோம். நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துவிட்டு காஸ்ட்லியான விலைக் கொண்ட ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில் பயணிக்க வேண்டும் என நினைத்தால் மேலே உள்ள ஏதேனும் ஓர் தந்திரத்தைக் கையாளலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 5:00 [IST]
English summary
How to upgrade regular class to first class here is tips and tricks
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+