சந்திரயான் 3 தரையிறங்குவதை லைவ்வாக பார்ப்பது எப்படி? இஸ்ரோ செய்துள்ள சிறப்பு ஏற்பாடு இது தான்

இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை 6:04 மணிக்கு சந்திரனில் தரையிறங்க போகிறது. சுமார் 15 நிமிடங்கள் இந்த தரையிறங்கும் பணி நடக்கப்போகிறது. இந்த நிகழ்ச்சியை எப்படி பொதுமக்கள் பார்க்க முடியும் என்ற விபரத்தை தான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.

இந்தியாவின் பெரும் கனவு என்று நினைவாக போகிறது என்று சொன்னால் மிகையல்ல. இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இன்று நடத்தி முடிக்க போகிறது. அதன்படி சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று சரியாக இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு சந்திரனில் தரையிறங்க போகிறது.

chandrayaan 3 live telecast

சரியாக மாலை 5:44 மணிக்கு இந்த தரையிறங்கும் பணி துவங்கப்பட்டு அடுத்த 15 நிமிடங்களில் 4 கட்ட பயணங்களை மேற்கொண்டு இந்த சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தன் தடத்தை பதிக்க போகிறது. இந்த தருணத்திற்காக தான் இந்தியாவே காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த வரலாற்று சிறப்பு முக்கிய முக்கியமான நிகழ்வு மக்களும் நேரடியாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். இதற்காக இஸ்ரோ ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இஸ்ரோவின் அதிகாரப்பூர்வமான இணையதளம், பேஸ்புக், யூடியூப், போன்ற பக்கங்களில் இதன் லைவ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

chandrayaan 3 live telecast

இது மட்டுமல்லாமல் தூர்தர்ஷன் தொலைகாட்சியிலும் இதன் நேரடி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். மக்கள் அனைவரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நிகழ்வை கண்டு களிக்கலாம். இந்த வரலாற்று சிறப்பு முக்கியமான முக்கிய நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஆனால் நேரடியாக அல்லாமல் தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால் அங்கிருந்து ஆன்லைன் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடும் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாணவ மாணவிகள் முழுவதும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முக்கிய நிகழ்ச்சியை நேரடியாக கண்டு கழிக்க போகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது.

chandrayaan 3 live telecast

இந்த நேரடி ஒளிபரப்பானது சரியாக மாலை 5:20 மணிக்கு துவங்க உள்ளது. அப்பொழுது பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எல்லாம் கமெண்ட் முறையில் பார்வையாளர்களுக்கு தெரியவிக்கப்படும். அங்கு பல்வேறு முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் அந்த நிகழ்ச்சி அந்த இடத்தில் இருந்து சந்திரனில் சந்திரயான் 3 தரை இறங்கும் முக்கிய நிகழ்வை பார்க்க போகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது தொழில்நுட்ப உதவியுடன் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் சிக்னல்கள் மூலம் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் எந்த நேரத்தில் எப்படி தரை இறங்குகிறது என்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். இது குறித்த பல்வேறு முக்கிய தகவல்களும் வெளியிடப்படும். தரையிறங்கியதற்கு பின்னர் அது நடத்தும் ஆய்வுகள் குறித்த விபரங்கள் அதன் பின்னர் வெளியாகும் என தெரிகிறது.

நேரலையில் இந்த நிகழ்வை காணும் வழிகள்:

• இஸ்ரோ இணையதளம்: https://www.isro.gov.in/
• இஸ்ரோ யூடியூப் சேனல் : https://youtube.com/watch?v=DLA_64yz8Ss
• இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கம்: https://facebook.com/ISRO
• தூர்தர்ஷன் டிவி
• மற்ற டிவி சேனல்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 14:11 [IST]
English summary
How to watch isros chandrayaan 3 moon landing live know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X