அந்த பீரியட்ல டிரெயின் டிக்கெட் எடுக்குறது இவ்ளோ கஷ்டமா?.. யார் எல்லாம் அனுபவிச்சு இருக்கீங்க!
செல்போனை எடுத்து சில க்ளிக்குகளை செய்தாலே இப்போது டிரெயின் டிக்கெட்டை புக் செய்துவிடும். உள்ளூர் ரயில் முதல் வெளியூர்களுக்கான ரயில் வரை அனைத்திற்குமான டிக்கெட்டை புக் செய்வது கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது மிக மிக எளிமையாக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு காலகட்டத்தில் ரயில்களுக்கு டிக்கெட் எடுப்பது என்பது மிக மிக கஷ்டமான ஒன்றாக காணப்பட்டது.
திருப்பதி கோயிலில் ஏழுமலையானை தரிசிக்க காத்திருப்பதை போல வெகு நீண்ட வரிசையில் நின்று ரயிலுக்கான டிக்கெட்டை புக் செய்ய வேண்டும். ஆனால், இப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் ரயிலுக்கான டிக்கெட்டை செய்து கொள்ள முடியும். வீடு, அலுவலகம், தெரு என எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட்டை புக் செய்து விட முடியும்.

இணையம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அனைத்தையும் சுலபமாக்கிவிட்டது. இந்த வளர்ச்சியை பயன்படுத்தி நம்முடைய மிகப் போக்குவரத்துத் துறையான இந்தியன் ரயில்வேஸும் பல்வேறு வளர்ச்சிகளைப் படிகளைக் கண்டிருக்கின்றன. அந்தவரிசையில் ரயில் டிக்கெட் புக் செய்யும் முறை கண்டிருக்கும் பரிணாம வளர்ச்சி அளப்பறியாதது.
இந்திய ரயில்வே துறை 170 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. இத்தனை ஆண்டுகளில் நம்ப முடியாத பல்வேறு மேம்பாடுகளை அது கண்டிருக்கின்றது. ரயில் பெட்டிகளில் படுக்கை வசதி, கழிவறை, ஏசி பெட்டி என எக்கசக்க வசதிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, 37 வருடங்களுக்கு முன்பு, ரயில் டிக்கெட் புக் செய்வதில் புரட்சிகரமான மாற்றத்தை இந்தியன் ரயில்வேஸ் அறிமுகப்படுத்தியது.

இந்த புரட்சிக்கு பின்னரே ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் காத்திருப்பது குறையத் தொடங்கியது. 1985இல் முதல் முறையாக ரயில்வே டிக்கெட்டுகள் கணினி மயமாக்கப்பட்டன. 1986 இல் நாடு முழுவதும் இது விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு பின்னரே டிக்கெட் முன்பதிவு நிலையங்களில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைய தொடங்கியது.
முதன் முதலில் தலைநகர் டெல்லியிலேயே ரயில் டிக்கெட்டுகள் கணினி மயமாக்கப்பட்டன. அதற்கு முன்னர் வரை மேனுவலாகவே டிக்கெட் பிரிண்ட் செய்யப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இது நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய செயலாக இருந்தது. மேலும், ரயில்களில் இருக்கும் காலியான இருக்கைகளின் எண்ணிக்கையை பொருத்தே டிக்கெட் வழங்குநர் டிக்கெட்டை வழங்குவார்.

இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் புக் செய்யப்படும் டிக்கெட் சில நேரங்களில் கன்ஃபார்மாகல் போகக்கூடும். ஓர் சிறிய அட்டையிலேயே புறப்படும் இடம் மற்றும் இறங்கும் இடம் ஆகியவை பிரிண்ட் செய்து வழங்கப்பட்டன. அதேவேளையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் தற்போது வழங்கப்படுவதைப் போலவே நவீன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
கடந்த காலங்களில் ரயில் டிக்கெட்டுகள் வீடு தேடியே அனுப்பி வைக்கப்பட்டன. ஆம், நமக்கான டிக்கெட்டை புக் செய்த உடன் அன்றைய கால கட்டத்தில் உடனே டிக்கெட் வழங்கப்படமாட்டாது. நிச்சயமான டிக்கெட் இருந்தால் மட்டுமே நமக்கான டிக்கெட் கிடைக்கும். அதுவும் அந்த டிக்கெட் நம் வீட்டை தேடி வரும்.

அஞ்சல் வாயிலாகவே டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டன. 2005-க்கு பின்னரே இந்த நிலை மாறியது. முதல் முறையாக இன்டர்நெட் டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய தினமே கன்ஃபார்ம் டிக்கெட் இருக்கிறதா?, இல்லையா?, என்கிற தகவலும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் வரை ஐ-டிக்கெட்டிங் முறையே செயல்பாட்டில் இருந்தது.
இந்த முன்பதிவு முறை 2002-ல் தொடங்கப்பட்டது. இந்த ஐ-டிக்கெட் காலகட்டத்திலும் புக் செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகள் வீடு தேடிய அனுப்பப்பட்டன. இத்தகைய அவலமான சூழலையே தற்போது இந்தியன் ரயில்வேஸ் முழுமையாக ஒழித்துக் கட்டியிருக்கின்றது. இருப்பினும், இப்போதும் பலர் ரயில் நிலையங்களை நாடி தங்களுக்கான ரயில் பயண டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர். குழப்பம் மற்றும் தடையில்லா பயணத்தை பெற இவ்வாறு ரயில் பயன்பாட்டாளர்கள் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
கடந்த காலத்தில் இருந்ததைப்போல இப்பவும் டிக்கெட்டிங் முறை இப்போவும் இருந்திருந்தால், நம்மில் பலர் ரயில் பயணத்தையே வெறுத்திருப்போம். ஏன், இந்தியன் ரயில்வேஸே இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது. பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதமாக இந்தியன் ரயில்வேஸ் தன்னை தொடர்ச்சியாக அப்கிரேட் செய்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில், விரைவில் ரேபிட் மற்றும் புல்லட் ரயில்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
