சரக்கு கப்பல் அடிப்படையில் உருவாகும் உலகின் பிரம்மாண்ட உல்லாச படகு!

Written By:

சரக்கு கப்பல் அடிப்படையில் உலகின் பிரம்மாண்ட உல்லாச படகு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இது உல்லாச படகாக மட்டுமல்லாமல், சாகச பயணங்களுக்கு பயன்படும் சிறப்பம்சங்களை கொண்டதாக இருக்கும்.

இந்த பிரம்மாண்ட உல்லாச படகின் வடிவமைப்பு, இன்டீரியர் டிசைன் உள்ளிட்டவற்றில் உலகின் பிரபலமான வடிவமைப்பாளர்கள் மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த சொகுசு படகு குறித்த சிறப்பு தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு நிறுவனம்

வடிவமைப்பு நிறுவனம்

ஷாக்லிடன் சூப்பர்யாட்ஸ், இன்டர்நேஷனல் ஷிப்பில்டர்ஸ் மற்றும் பன்னென்பெர்க் அண்ட் ரோவெல் டிசைன் நிறுவனம் ஆகியவை இந்த பிரம்மாண்ட உல்லாச படகை வடிவமைத்து, கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அப்படி என்ன சிறப்பு?

அப்படி என்ன சிறப்பு?

தற்போது கட்டப்பட்டும் உல்லாச படகுகள் பெரும்பாலும் குறைந்த தூரத்திற்கு மட்டுமே செல்லும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், இந்த உல்லாச படகு உலகையே வலம் வரும் ஆற்றல் படைத்ததாகவும், வசதிகள் கொண்டதாகவும் இருக்கும் என்பதே சிறப்பு.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

சாதாரண படகுகள் அடிப்படையில் கட்டினால், திறன் வாய்ந்ததாக இருக்காது. எனவே, சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களின் அடிப்பாகத்தை கொண்டு இந்த கப்பலை உருவாக்க இருக்கின்றன. அதேநேரத்தில், மிக சிறப்பான உட்புறங்கள், அலங்கார வேலைப்பாடுகள் உள்ளிட்டவற்றுடன் உல்லாச படகாக மாற்றப்பட உள்ளது.

பெயர்

பெயர்

VARD 1-08 kilkea என்ற பெயரில் இந்த புதிய உல்லாச படகு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பணிகள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை ஆண்டுகளில் இதனை கட்டி முடிக்கும் பணிகள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்படவில்லை.

விருந்தினர்கள்

விருந்தினர்கள்

268 அடி நீளம் கொண்ட மினி சொகுசு கப்பலாக உருவாக்கப்படும் இந்த உல்லாச படகில் 36 விருந்தினர்கள் வரை செல்ல முடியும். மேலும், 30 நாட்கள் வரை கடலில் பயணிப்பதற்கான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.

மதிப்பு

மதிப்பு

இந்த உல்லாச படகில் 62 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட உள்ளது. உல்லாச பயணம் மட்டுமின்றி, சாகசப் பயணங்களுக்கும் ஏற்ற பொருட்கள் வைப்பதற்கான இடவசதியுடன் கட்டமைக்கப்பட உள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

வெளிப்புறம் முழுவதும் வெள்ளை வண்ணம் கொண்டதாக இருக்கும். உட்புறத்தில் மிக உயர்தரம் கொண்ட அலங்கார வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.

வேகம்

வேகம்

இந்த பிரம்மாண்ட உல்லாச படகு 15.4 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். சராசரியாக 12 நாட்டிக்கல் மைல் வேகத்தில் கடலில் பயணிக்கும்.

ஹெலிபேடு

ஹெலிபேடு

இந்த உல்லாச படகின் ஒரு டெக்கில் ஹெலிபேடும் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே, அவசர சமயங்களுக்கும், விருந்தினர்களை ஹெலிகாப்டரில் அழைத்து வருவதற்கும் வசதி உள்ளது.

தாங்காது சாமி

தாங்காது சாமி

பெரும் கோடீஸ்வரர்களுக்கு கூட இந்த உல்லாச படகை வைத்து தீணி போட முடியாதாம். ஆம், ஒரு மணி நேரம் இந்த படகு இயங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு 500 லிட்டருக்கு மேல் டீசல் செலவாகுமாம். ஓர் ஆண்டுக்கு பராமரிப்பு செலவுக்காக 1 மில்லியன் டாலர் வரையிலும், பணியாளர் மற்றும் இதர செலவீனங்களுக்காக 1.4 மில்லியன் டாலர்களும் செலவிட வேண்டியிருக்குமாம். துறைமுகம் அல்லது பராமரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைப்பதற்கான செலவுகள் சில லட்சம் டாலர்கள் தேவைப்படுமாம்.

உலகின் விலையுயர்ந்த டாப்- 10 ஆடம்பர படகுகள்

உலகின் விலையுயர்ந்த டாப்- 10 ஆடம்பர படகுகள்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
How to Turn a Supply Ship Into a $62 Million Luxury Yacht.
Story first published: Saturday, April 30, 2016, 11:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark