உக்ரைன்-ரஷ்யா போரால் இந்தியாவிற்கு இவ்வளவு பாதிப்பா? படுத்துத் தூங்கப் போகும் வாகன உற்பத்தித் துறை...
உக்ரைன் போரால் உலக அளவில் ஆட்டோமொபைல் தொழில் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இது குறித்த முழு விளக்கத்தைக் கீழே காணலாம் வாருங்கள்

இரு நாடுகளுக்கு இடையே போர் என்ற ஒன்று வந்துவிட்டால் அது பல வழிகளில் உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பாதிக்கும் என நாம் கேள்விப்பட்டிருப்போம். தற்போது நடந்து வரும் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் காரணமான இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் ஆட்டோமொபைல் துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. உக்ரைன் நாட்டிற்கும் ஆட்டோமொபைல் துறைக்கும் உள்ள சம்பந்தம் என்ன? எவ்வாறு பாதிக்கிறது பார்க்கலாம் வாருங்கள்

இந்தியா மட்டுமல்ல உலகில் பல நாடுகளைச் சேர்ந்த வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் போதுமான அளவிற்கு கார் மற்றும் பைக்குக்களை தயாரிக்க முடியாமல் கடந்த மார்ச் , ஏப்ரல் மாதம் முதல் திண்டாடி வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இந்த வாகனங்களைத் தயாரிக்கப் பயன்படும் செமி கண்டெக்டர் சிப்கள் தட்டுப்பாடு தான் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் ஹீரோ எலெக்டரிக் நிறுவனம் ஒரு பைக்கை கூட தயாரித்து தங்களது டீலர்களுக்கு அனுப்பவில்லை. அதனால் அந்நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு சரிந்தது. அதே போலப் பல நிறுவனங்கள் தாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள கார்களின் அறிமுகத்தை இந்த செம கண்டெக்ட்ர் சிப் தட்டுப்பாட்டால் தள்ளி வைத்துள்ளனர்.

செமி கண்டெக்டர் சிப் என்றால் என்ன? அது வாகனங்களில் எங்குப் பயன்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.வாகனங்களின் எலெக்ட்ரானிக் பகுதிகளில் பயன்படுத்தப்படும் சிப்கள் தான் செமி கண்டெக்டர் சிப்கள். இது கார்களில் எலெக்டரானிக் வேலைகளான லைட்களை எரிய வைப்பது, டிஜிட்டல் இன்ட்ரூமெண்ட் கிளஸ்டகளுக்கான தகவல்களைத் தருவது, உயர் ரக கார்களின் இன்ஜினின் செயல் திறனை மாற்றியமைப்பது எனப் பல இடங்களில் இது பயன்படுத்தப்படும்.

இன்றைய சூழ்நிலையில் இந்த செமி கண்டெக்டர் சிப் இல்லாமல் வாகனங்களைத் தயாரிப்பது கடினம் இந்த செமி கண்டெக்ட்ர் சிப்கள்மிகவும் சிறிய அளவில் இருக்கும். அதில் பல நுணுக்கமான வேலைப்பாடுகள் அடங்கியிருக்கும். ஒரு சிப்பில் லட்சக்கணக்கான டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும். இது முழுவதுமாக சிலிக்கானை கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

இந்த செமி கண்டெக்டர் பல நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளதால் இதைக் கையில் வடிவமைக்க முடியாது இதை வடிவமைக்க கணினி இயந்திரம் தான் தேவைப்படும். அந்த இயந்திரம் டிசைன் செய்யப்பட்டவாறு செமி கண்டெக்டர் சிப்களை தானியங்கியாக உருவாக்கும்.

இப்படியாக இந்த இயந்திரங்கள் லேசர் முறையில் இதை உருவாக்குகிறது. இந்த லேசர் சரியாக வேலை செய்ய நியான் என்ற கேஸ் தேவைப்படுகிறது. இந்த இடத்தில்தான் தற்போது சருக்கலைச் சந்தித்துள்ளது ஆட்டோமொபைல் நிறுவனம். உலகின் அதிகமாக நியான் கேஸை உற்பத்தி செய்யும் நாடு உக்ரைன் தான்.

உலகின் ஓட்டு மொத்த தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நியான் கேஸ்களை உக்ரைன் நாடு தான் உற்பத்தி செய்கிறது. இந்நாட்டில் தயாராகும் இந்த கேஸ்கள்தான் மைக்ரோ சிப் அதாவது செமி கண்டெக்டர் சிப்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது உக்ரைன் நாட்டில் போர் சூழல் நிலவுவதால் அந்நாட்டிலிருந்து வரக்கூடிய நியாஸ் கேஸ் வரவில்லை.

இதனால் செமி கண்டெக்டர் சிப்கள் உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளது. பல நிறுவனங்களுக்குச் செமி கண்டெக்டர் சிப்களே செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. நியான் கேஸ் இல்லாமல் இந்த செமி கண்டெக்டர் சிப்பை உற்பத்தி செய்ய முடியாததால் நல நிறுவனங்கள் வாகனத்தைத் தயாரிக்க முடியாமல் திண்டாடுவதால் ஒரு நாட்டின் பொருளாதாரமே பெரிய பாதிப்பைச் சந்திக்கிறது.

நியான் கேஸ் என்றால் என்ன? அது ஏன் உக்ரைன் நாட்டில் மட்டும் அதிகமாக இருக்கிறது என்பதைக் காணலாம். நியான் கேஸ் என்பது ஒரு வாயு வடிவிலான ஒன்று. இது சாதாரண ஒரு வாயு தான், நாம் சுவாசிக்கும் காற்றில் கூட நியாஸ் வாயு இருக்கும். ஆனால் அதைப் பிரித்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. காற்றில் குறைவான அளவே நியான் வாயு இருக்கும். அதனால் நமக்குத் தேவையான அளவு நியான் வாயுவை எடுக்க அதிக காற்று தேவைப்படும். அதைச் செய்யப் பல நாட்கள் வேறு ஆகும் அதனால் காற்றிலிருந்து நியானை பிரித்தெடுத்து தேவையை நிறைவு செய்வது என்பது நடக்காத காரியம்

உக்ரைன் நாட்டில் இருப்பு உற்பத்தி என்பது மிக அதிக அளவில் இருக்கிறது. இரும்பு உற்பத்தியின் போது கிடைக்கும் ஒரு வாயு தான் நியான் வாயு. இந்த இரும்பை உற்பத்தி செய்யும் நிறுவனம் நியான் வாயுவைத் தனியாகப் பிரித்து அடைத்த அதையும் விற்பனை செய்கின்றனர். இரும்பு உற்பத்தியில் உக்ரைன் உச்சத்தில் இருப்பதால் நியான் வாயு உற்பத்தியிலும் உக்ரைன் தான் உச்சத்தில் இருக்கிறது.

உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு மாதமும் மொத்தம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் m^3 அளவிலான கேஸ் உற்பத்தியாகிறது. இந்த நியாஸ் வாயுதான் செமி கண்டெக்டர் சிப்களில் சிலிகான் சிப்களை சிறிய சர்க்யூட்களாக மாற்றும் வேலையைச் செய்கிறது. இந்த நியான் வாயுவிற்கு ஏற்பட்டதட்டுபாடு தான் இன்று உலகின் ஆட்டோமொபைல் துறையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது பல நாடுகள் தாங்களே சொந்தமாக நியான் வாயுவை உற்பத்தி செய்யும் வேலையைத் துவங்கிவிட்டனர். ஒரு விஷயத்திற்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதால் அந்நாட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பல நாடுகள் உணர துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் விரைவில் எல்லா நாடுகளும் தங்களுக்கான நியாஸ் வாயுவை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் திறனைப் பெற்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நடந்துவிட்டால் இனி உக்ரைன் மீண்டு வரும் போது அந்நாட்டிலிருந்து நியான் வாயுவை வாங்க ஆட்கள் இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

இன்று உக்ரைன் ரஷ்யா போரால் இந்தியா உட்படப் பல நாடுகளில் ஆட்டோமொபைல் துறை பெரும் சோதனையைச் சந்தித்து வருகிறது. இதிலிருந்து எப்படி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் வருகின்றன எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்


Click it and Unblock the Notifications








