திடீரென தீ பிடித்த கார்.. தண்ணீரோடு கேனை வச்சுட்டு போனதுதான் காரணமா? அதிர்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு!

தண்ணீர் நிரம்பிய பாட்டிலை காருக்குள் விட்டு சென்றதால் அந்த கார் தற்போது தீயிற்கு இரையாகி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இது எப்படி சாத்தியமாகும் என்பதே பலரின் கேள்வியாக மாறி இருக்கின்றது. தண்ணீர் உள்ள வாட்டர் பாட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் இருக்கும்படி காருக்குள் இருக்குமேயானால் இது சாத்தியம்தான். அந்த தண்ணீர் பாட்டில் ஓர் பூதக்கண்ணாடியைப் போல் செயல்பட்டு நெருப்பை உருவாக்கும். அதாவது, சூரிய ஒளியை ஓரிடத்தில் குவியமாக்கி அந்த இடத்தில் எளிதில் தீயை உருவாக்கிவிடும்.

இத்தகைய வினையாற்றமே தற்போதை கார் தீ விபத்து சம்பவத்தில் அரங்கேறி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த திறன் பாட்டிலில் தண்ணீர் இருக்கும்போதே அதற்குக் கிடைக்கின்றது. இத்தகைய ஆபத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே தண்ணீர் பாட்டிலை காருக்குள் அப்படியே விட்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.

Water bottle cause fire car

குறிப்பாக, தண்ணீர் பாட்டிலை சூரிய ஒளி விழும் இடத்தில் வைக்கவும் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. கண்ணாடி அல்லது கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களினாலேயே இத்தகைய ஆபத்தான சூழல் ஏற்படும் என்பது இங்கேக் கவனிக்கத்தகுந்தது. தண்ணீர் பாட்டில்கள் காருக்குள் இருப்பதனால் இதுபோன்று இன்னும் பல்வேறு ஆபத்தான சூழல்கள் உருவாகும் என்பதையும் நாம் இங்கே கவன்த்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, தண்ணீர் பாட்டில்கள் இதுபோன்று இன்னும் பல்வேறு ஆபத்தான சூழலை உருவாக்கக் கூடியதாக இருக்கின்றன. உருளை வடிவத்தில் இருக்கின்ற காரணத்தினால், தண்ணீர் பாட்டில்களால் எளிதில் காருக்குள் உருண்டு ஓட முடியும். அப்படியாக அவை பிரேக், ஆக்சலரேட்டர் அல்லது கிளட்ச் பெடலுக்குள் அடியில் சிக்கிக் கொள்ளும் எனில், அந்த நேரத்தில் பிரேக் அல்லது கிளட்ச் பெடல்களை பயன்படுத்துவதில் தடை ஏற்படக் கூடும்.

இதன் விளைவாக மிக மோசமான விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம். இதனால்தான் காருக்குள் தண்ணீர் பாட்டில்களை வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றது. குறிப்பாக, டிரைவர் பகுதியில் காலி பாட்டில்களை வைக்கவே வேண்டாம் என அறிவுறுத்தப்படுத்தப்படுகின்றது. இதேபோல், தண்ணீர் நிரம்பி இருக்கும் பாட்டிலையும் காருக்குள் அப்படியே விட்டுச் செல்லக் கூடாது.

இதைச் செய்ய தவறும் பட்சத்தில் என்ன மாதிரியான சூழல் ஏற்படும் என்பதற்கு சான்றாகவே தற்போதைய கார் விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்தியாவில் தற்போது வெயில் மிகக் கடுமையாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இதுபோன்று வெப்பச்சலனம் அதிகரித்து வரும் சூழலில், கார் இயக்கத்தில் இருந்தாலோ அல்லது ஓடிக் கொண்டிருந்தாலோ தீப்பிடிப்பது கட்டாயம் ஏற்படும். இதைத்தவிர்க்க சூரிய ஒளி விழும் இடத்தில் தண்ணீர் பாட்டில் மற்றும் தீயை எளிதில் ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு பொருளையும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் பாட்டில்கள் எப்படி சூரியக் கதிர்களைக் குவித்து தீயை மூட்டும் என்பதை வெளிக்காட்டும் விதமாக இணையத்தில் பல வீடியோக்கள் உள்ளன. இருப்பினும், அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இந்த நிலையிலேயே அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் விதமாக இணையத்தில் தண்ணீர் பாட்டிலால் தீயிற்கு இரையாக காரின் வீடியோ பகிரப்பட்டு இருக்கின்றது.

மேலும், அந்த காரின் உரிமையாளர், தண்ணீர் பாட்டில்களை காரில் இருந்து அப்புறப்படுத்தவும் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, காரில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அந்த பாட்டிலை சூரிய ஒளி நேரடியாக விழும் இடத்தில் வைக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட தூர பயணங்களின்போது தண்ணீர் இல்லாமல் பயணிக்க முடியாது. அந்த மாதிரியான சூழலில் தண்ணீர் பாட்டில்களை சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கலாம் அல்லது காருக்குள் சூரிய ஒளி விழுவது தடுக்கும்படி மறைப்புகளை ஏற்படுத்தலாம். இவ்வாறு செய்கையில் உங்களின் தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதோடு, வீண் அசம்பாவதிங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். இல்லையெனில் உலோக பாட்டில்களை பயன்படுத்தலாம். உலோக தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துவதனால் நம்முடைய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 16:53 [IST]
English summary
How water bottles in cars can ignite fires safety tips
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+