அமெரிக்கா உள்ளே புகுந்து இஸ்ரேல்- ஈரான் போரை மட்டும் நிறுத்தலனா... கச்சா எண்ணெய் உலக அரசியலையே தீர்மானிக்குது!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 1 வாரத்தில் மட்டும் 12% குறைந்துள்ளது. ஆனால், சில வாரங்களுக்கு மும்பு வரையில் கச்சா எண்ணெய்யின் விலை எந்த அளவிற்கு அதிகரிக்க போகிறதோ என இந்தியா உள்பட மொத்த உலக நாடுகளும் பயத்தில் இருந்தன. இதற்கு காரணம், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற தொடர்ச்சியான போர்கள் ஆகும். கச்சா எண்ணெய்களை உலக நாடுகளுக்கு வழங்குவதில் மத்திய கிழக்கு நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இதனால், அத்தகைய பகுதிகளில் போர் உருவானதும், கச்சா எண்ணெய் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுமோ என பல நாட்டு அரசாங்கங்கள் பயந்தன.

கடந்த 1 வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் அரசாங்கத்திற்கும், பாலஸ்தீனர் ஆட்சியாளர்களுக்கும் இடையே நீண்ட வருடங்களாக சுமூக உறவு இல்லாததினால் இந்த போர் வெடித்தது என்றாலும், இது உள்நாட்டு போராக பார்க்கப்பட்டது. ஆனால், எப்போது இதற்குள் அமெரிக்கா வந்ததோ அப்போதே பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.

international oil market

இஸ்ரேல்- பாலஸ்தீனர் போர் கடந்த 1 வருடத்தில் பல்வேறு விதமாக மாற்றம் கண்டு கடைசியில், இஸ்ரேல் vs ஈரான் என வந்து நின்றது. இஸ்ரேலுக்கு எந்த விதத்திலும் ஈரான் சளைத்த நாடு கிடையாது என்பதால், இந்த இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான இந்த போர் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

முக்கியமாக, எரிபொருள் துறை பெரிய அளவில் சரிவை சந்திக்க கூடும் என உலக நாடுகள் பயந்தன. கச்சா எண்ணெய் வழங்குவதில் இஸ்ரேலின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லையென்றாலும், ஈரான் நாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளதால், அந்த நாடு போரில் ஈடுப்படுகிறது என்றவுடன் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் தட்டுப்பாடு உருவானது.

இஸ்ரேல்- ஈரான் இடையேயான போரினால் கச்சா எண்ணெய் மட்டுமின்றி, பல துறைகளில் பற்றாக்குறை உருவாகும் சூழல் ஏற்பட்டதால், அமெரிக்கா இடையில் புகுந்து பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தியது. போர் எப்போது நின்றதோ அப்போதில் இருந்து கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக குறைந்துக் கொண்டே வருகிறது.

international oil market

ஏற்கனவே கூறியதுபோல், கடந்த 1 வாரத்தில் மட்டும் கச்சா எண்ணெய்யின் விலை 12% குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை ஏறக்குறைய 60 டாலர்களுக்கு வந்துவிடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் 23ஆம் தேதி ஈரானின் அணு ஆயுத தொழிற்சாலைகளை நோக்கி அமெரிக்கா நடத்திய தாக்குதலின்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 77.81 டாலர்களாக இருந்தது.

கடந்த 5 மாதங்களில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகப்பட்சமாக பதிவாகியது இதுவே ஆகும். ஆனால், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அடுத்த நாளே கத்தார் நாட்டுக்கு அருகில் உள்ள அமெரிக்க தரைத்தளத்தை நோக்கி ஈரான் நடத்திய தாக்குதலினால், கச்சா எண்ணெய்யின் விலை 8.5% குறைந்து பீப்பாய்க்கு 69.48 டாலர்கள் ஆகியது. அதன்பின் இஸ்ரேல்- ஈரான் போர் நிறுத்தப்பட்டதை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை 12% வரை குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பொருட்கள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்கான பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) தான் கச்சா எண்ணெய்யில் இருந்து அதிகமாக எடுக்கப்படுகின்றன. ஆதலால், பெட்ரோல், டீசலின் விலைகள் நேரடியாக ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனையை சார்ந்தவை ஆக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2025, 17:09 [IST]
English summary
How well oil market will be stabilize as israel iran ceasefire check all details here
மேலும்... #gulf oil #oil plant #petrol #diesel
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+