தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

மெஜண்டா பவர்-ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து புதுமையான சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகம் செய்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

மும்பை சேர்ந்த நிறுவனங்களில் ஒன்று மெஜண்டா பவர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளில் மெஜண்டா பவர் ஈடுபட்டு வருகிறது. மெஜண்டா பவர் நிறுவனமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து தற்போது புதுமையான சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளன.

தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

இதற்கு சார்ஜ்க்ரிட் ஃப்ளேர் என பெயரிடப்பட்டுள்ளது. இது தெரு விளக்குடன் ஒருங்கிணைந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர் ஆகும். தற்போது மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இந்த புதுமையான சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெரு விளக்கு கம்பத்துடன் ஒருங்கிணைந்த திறன்மிக்க எல்இடி விளக்கை சார்ஜ்க்ரிட் ஃப்ளேர் உள்ளடக்கியுள்ளது.

தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

எலெக்ட்ரிக் சார்ஜருக்கான உபகரணமும் தெரு விளக்கு கம்பத்திலேயே இணைக்கப்பட்டிருக்கும். சார்ஜ்க்ரிட் செயலியை பயன்படுத்தி பயனர்கள் கட்டணம் செலுத்த முடியும். அதே சமயம் சார்ஜர்களை தொலைவில் இருந்து கண்காணிக்க முடியும். எனவே அவற்றை கண்காணிப்பதற்கோ, இயக்குவதற்கோ, பராமரிப்பதற்கோ பாதுகாவலர்கள் தேவையில்லை.

தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

2021ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட சார்ஜ்க்ரிட் ஃப்ளேர் சார்ஜர்களை அமைப்பதற்கு மெஜண்டா பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.

தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வும் பொதுமக்களின் கவனத்தை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பி வருகிறது.

தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை காரணமாகவே பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த புதுமையான சார்ஜிங் ஸ்டேஷன், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் உதவும்.

தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

இந்தியாவில் தற்போது மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாது, சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனத்தை உதாரணமாக கூறலாம்.

தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வரும் எம்ஜி மோட்டார் நிறுவனம், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து, இந்தியா முழுக்க தற்போது சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில், சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
HPCL & Magenta Install Street-lamp Electric Vehicle Charger - Here Are All The Details. Read in Tamil
Story first published: Friday, March 5, 2021, 20:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X