'தமக்கு தாமே' பரிசு... பிறந்தநாளுக்காக ரூ.7 கோடியில் ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய ஹிருத்திக் ரோஷன்!

Written By:

பாலிவுட் நடனப்புயல் ஹிருத்திக் ரோஷன் கார் பிரியர் என்பது தெரிந்த விஷயம். அவரிடம் இருக்கும் கார்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே வழங்கியிருக்கிறது.

இந்தநிலையில், சமீபத்தில் தனது 42வது பிறந்தநாளை மும்பையில் உள்ள ஓட்டலில் கோலாகலமாக கொண்டாடிய அவர், தனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் விதத்தில் புத்தம் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கி தமக்கு தாமே பரிசளித்துக் கொண்டிருக்கிறார். ரூ.7 கோடியில் அவர் வாங்கியிருக்கும் அந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் மாடல் விபரம்

ரோல்ஸ்ராய்ஸ் மாடல் விபரம்

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் - II காரைத்தான் ஹிருத்திக் ரோஷன் வாங்கியிருக்கிறார். ரூ.4.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட இந்த கார் கஸ்டமைஸ் செய்வதற்கான செலவு மற்றும் வரிகள் உள்பட ரூ.7 கோடி அடக்க விலையில் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2014ம் ஆண்டு நவம்பரில் இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்- II மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர், ஆர்டர் கொடுக்கப்பட்டு, சமீபத்தில் தனது பிறந்தநாளின்போது டெலிவிரி பெற்றிருக்கிறார்.

பேன்ஸி நம்பர்

பேன்ஸி நம்பர்

ஹிருத்திக் ரோஷனின் புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு MH46 AD 1001 என்ற பேன்ஸி நம்பரை கேட்டு வாங்கியிருக்கிறார். ஏனெனில், காரின் மதிப்பை கூட்டுவதில், இந்த பேன்ஸி நம்பர் பிளேட் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உரிமையாளர்கள் கருதுகின்றனர். அத்துடன், குறிப்பிட்ட எண்களை தங்களது ராசியானதாகவும் பாலிவுட் நட்சத்திரங்கள் கருதுகின்றனர்.

பாலிவுட் நட்சத்திரங்களும், அவர்களது காரின் பேன்ஸி நம்பர் நம்பிக்கைகளும்...!!

இரட்டை வண்ணக்கலவை

இரட்டை வண்ணக்கலவை

ஹிருத்திக் ரோஷன் வாங்கியிருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார் நீலம் மற்றும் அலுமினிய வண்ணக் கலவை கொண்டதாக இருக்கிறது. பிரபலங்களுக்கு எப்போதுமே நீல வண்ணக் கார்கள் மீது தனி கவனம் இருப்பதை அவ்வப்போது நாம் சுட்டிக் காட்டி வருகிறோம். இந்த காரின் பொதுவான சிறப்பம்சங்களை தொடர்ந்து கண்டு ரசிக்கலாம்.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

ஸ்டான்டர்டு வீல் பேஸ் மாடல் 5,399மிமீ நீளமும், 1,948மிமீ அகலமும், 1,550மிமீ உயரமும் கொண்டது. இது 3,295மிமீ வீல் பேஸ் கொண்ட கார் மாடல் என்பதால் தாராள இடவசதியை வழங்கும் ஆடம்பர கார். இந்த காரில் 82.5லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

2.5 டன் வெயிட்

2.5 டன் வெயிட்

நீள, அகலத்தில் மட்டுமல்லாமல் எடையிலும் மிகவும் அதிகமான கார். இது 2,360 கிலோ வெற்று எடையும், பயணிகள் அல்லாமல் எரிபொருள் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து 2,435கிலோ கெர்ப் எடையும் கொண்டது. 19 இஞ்ச் அலாய் வீல்கள் ஸ்டான்டர்டாகவும், 21 இஞ்ச் அலாய் வீல்கள் ஆப்ஷனலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

எல்இடி ரன்னிங் விளக்குகள் புடைசூழ்ந்த ஹெட்லைட், சுற்றிலும் குரோம் பூச்சு கொண்ட ஏர் இன்டேக், புதிய பம்பர், கிரில் போன்றவை ரோல்ஸ்ராய்ஸ் பாரம்பரியத்தையும், நவீன யுகத்துக்கு தக்கவாறு அதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதையும் காண்பிக்கிறது.

வடிவம்

வடிவம்

ஸ்டான்டர்டு வீல் பேஸ் மாடல் 5,399மிமீ நீளமும், 1,948மிமீ அகலமும், 1,550மிமீ உயரமும் கொண்டது. இது 3,295மிமீ வீல் பேஸ் கொண்ட கார் மாடல் என்பதால் தாராள இடவசதியை வழங்கும் ஆடம்பர கார். இந்த காரில் 82.5லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

ஆபரணச் சின்னம்

ஆபரணச் சின்னம்

ரோல்ஸ்ராய்ஸ் பாரம்பரியத்தையும், அந்தஸ்தையும் அடையாளச் சின்னமாக உணர்த்தும் ஆபரணச் சின்னம். ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.

பளபளக்கும் இன்டீரியர்

பளபளக்கும் இன்டீரியர்

சகல வசதிகளுடன், கண்ணை கவரும் இன்டிரியர். ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் டிரேட் மார்க் கடிகாரம்.

டேஷ்போர்டு

டேஷ்போர்டு

அலங்கார மரப்பலகை மற்றும் குரோம் பூச்சினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் டேஷ்போர்டு.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

புதிய டிசைனுக்கு மாறியிருக்கும் கோஸ்ட் சீரிஸ்- 2 காரின் டயல்கள்.

ஐ- டிரைவ் கன்ட்ரோலர்

ஐ- டிரைவ் கன்ட்ரோலர்

தொழில்நுட்ப வசதிகளை எளிதாக கட்டுப்படுவதற்கான ஐடிரைவ் கன்ட்ரோலர். இது இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தின் ஆப்ஷன்களை நேரடியாகவும், எளிமையாகவும் கட்டுப்படுத்த உதவும்.

ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

பல்வேறு வசதிகளை கட்டுப்படுத்தும் சுவிட்சுகளுடன் கூடிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல்.

 உயர்தர இருக்கை

உயர்தர இருக்கை

ஓட்டுபவர், முன் இருக்கை பயணிகள் வசதியாக அமரும் வகையில், இருக்கையின் அடிப்பாகத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இது தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் தரும் என்பதால், மிக சொகுசான பயணத்தை முழுமையாக அனுபவிக்கலாம்.

பின் இருக்கை

பின் இருக்கை

பின் இருக்கையின் நடுவில் பல்வேறு வசதிகள் மற்றும் கப்ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மிக மிக சொகுசாகவும், தாராளமான இடவசதியையும் தரும் பின் இருக்கை.

 அகல விரியும் கதவுகள்

அகல விரியும் கதவுகள்

பிற கார்களை போன்று ஒரே திசையில் இல்லாமல், எதிரெதிர் திசையில் விரியும் கதவுகளால் காருக்குள் ஏறி, இறங்குவது வசதியாக இருக்கும்.

டிவி திரை

டிவி திரை

பின்புற பயணிகளுக்கான பொழுதுபோக்கு வசதிக்காக முன் இருக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் டிவி திரை.

ஆர்ம் ரெஸ்ட்

ஆர்ம் ரெஸ்ட்

பொழுதுபோக்கு வசதிகளை கட்டுப்படுத்துவதற்கான சுவிட்சுகள் மற்றும் கப் ஹோல்டர்கள் கொண்ட பின்புற ஆர்ம் ரெஸ்ட். இதுபோன்று, ஏராளமான வசதிகளை கொடுத்து வியப்பை ஏற்படுத்துகிறது ரோல்ஸ்ராய்ஸ்.

பென்ஸ் எஸ் கிளாஸ்

பென்ஸ் எஸ் கிளாஸ்

மார்க்கெட்டில் இருக்கும் மிகச்சிறந்த சொகுசு கார் பென்ஸ் எஸ் கிளாஸ். ஏராளமான வசதிகளை கொண்ட இந்த காரில் லெதர் இருக்கைகள், ஜிபிஎஸ் சிஸ்டம், 7 சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள். இதனால், அதிக பிரிமியம் கொண்டதாக இருக்கிறது இதன் இன்டிரியர். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ் என நவீன பாதுகாப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது.

பென்ஸ் எஸ் கிளாஸ் எஞ்சின்

பென்ஸ் எஸ் கிளாஸ் எஞ்சின்

210 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சின் கொண்ட இந்த காரில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. மொத்ததில் சொகுசும், ஆற்றலும் கலந்த சிறந்த மாடல்தான் ஹிருத்திக் கேரேஜை அலங்கரிக்கிறது. ரூ.1.25 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

போர்ஷே கேயென்

போர்ஷே கேயென்

பாலிவுட் நட்சத்திரங்களின் இல்லங்களின் போர்டிகோவில் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக மாறி வருகிறது போர்ஷே கேயென் எஸ்யூவி. நீண்ட தூர பயணங்களுக்கு ஹிருத்திக் இந்த காரைத்தான் பயன்படுத்துகிறார். சிறந்த இன்டிரியர் கொண்ட கார் மாடல்களின் ஒன்று. டிரைவர் காக்பிட், பின் இருக்கை தாராள இடவசதி மற்றும் வசதிகளை கொண்டிருக்கிறது. லெதர் இருக்கைகள், டிஎஃப்டி டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய முக்கிய அம்சங்களோடு மிடுக்கான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போர்ஷே கேயென்னி எஞ்சின்

போர்ஷே கேயென்னி எஞ்சின்

240 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரில் 7 டிரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 7.8 வினாடிகளில் தொட்டு விடும் ஆற்றல் கொண்ட இந்த எஸ்யூவி மணிக்கு அதிகபட்சமாக 180 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.80 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.2123

ஜாகுவார் எக்ஸ்ஜே

ஜாகுவார் எக்ஸ்ஜே

சிறந்த பிரிமியம் கார்களில் ஒன்றான ஜாகுவார் எக்ஸ்ஜே ஹிருத்திக்கின் ஆல்டைம் ஃபேவரிட் கார். தாராள இடவசதி, மிகச்சிறந்த சொகுசு இருக்கைகள், நவீன வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் ஹிருத்திக்குக்கு நிறைவை கொடுத்து வருகிறதாம் ஜாகுவார் எக்ஸ்ஜே. 385 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இசட்எஃப் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஒரு கோடி ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரேஞ்ச்ரோவர் எவோக்

ரேஞ்ச்ரோவர் எவோக்

பார்ட்டி, புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ரேஞ்ச்ரோவர் எவோக்தான் ஹிருத்திக்கின் ஃபர்ஸ்ட் சாய்ஸ். கையால் தைக்கப்பட்ட லெதர் இருக்கைகள், தரமான பாகங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள் என இன்டிரியர் பட்டியல் நீள்கிறது. எல்சிடி திரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் குறிப்பிடத்தக்க அம்சம். 187 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 205 கிமீ வேகம் வரை செல்லும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.80 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 இதர ரோல்ஸ்ராய்ஸ் செய்திகள்

இதர ரோல்ஸ்ராய்ஸ் செய்திகள்

01. தங்கைக்கு திருமண பரிசாக ரோல்ஸ்ராய்ஸ் கார் வழங்கிய சல்மான்கான்.

02. வியக்க வைக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் கஸ்டமைஸ் வசதிகள்.

03.ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் மறுபக்கம்... எல்லா விஷயங்களுமே ஆச்சரியங்கள்தான்...!!

நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ்

நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ்

01. நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் காரின் சிறப்பம்சங்கள்.

02. ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இந்திய பிரபலங்கள்!

03.இந்திய பணமதிப்பு ஒரு ரூபாய் சரிந்தால் ரோல்ஸ்ராய்ஸ் கார் விலை ரூ.7 லட்சம் அதிகரிக்கிறதாம்!!

 
English summary
Hrithik Roshan gets new Rolls-Royce Ghost Series II car.
Story first published: Thursday, January 14, 2016, 14:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark