வாழ்ந்தா இந்த நடிகர போல வாழனும்.. இப்படி ஒரு காரு அவரு கையில இருக்கா! ஜீப் நிறுவனமே தேடி போயி கொடுத்திருக்கு!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் (Luxury Car) உற்பத்தி நிறுவனத்தின் முகமாக ஓர் முன்னணி பாலிவுட் நட்சத்திரம் மாறி இருக்கின்றார். ஹிரித்திக் ரோஷன்தான் அவர் ஆவார். ஜீப் (Jeep) நிறுவனமே தனது பிராண்டின் பார்ட்னராக இந்த நடிகரை தேர்ந்தெடுத்து இருக்கின்றது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஓர் சூப்பரான சொகுசு காரையும் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் அனைத்தையும் ஜீப் இந்தியா அதன் சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. நடிகருக்கு நிறுவனம் விராங்க்ளர் ரூபிகான் (Wrangler Rubicon) சொகுசு காரையே வழங்கி இருக்கின்றது.
இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் நடிகருடைய கராஜில் இணைந்திருப்பதனால் அந்த காருக்கும் சரி, அவருடைய கராஜுக்கும் சரி இரண்டிற்கும் பெருமைச் சேர்ந்திருக்கின்றது. இந்த கார் தன்னுடைய கராஜில் இணைந்திருப்பதை ஹிரித்திக் ரோஷனும் உறுதிச் செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அவருடைய பதிவில் இந்த காரின் விளம்பரத்தில் நடித்தபோதே அது தன்னுடைய மனதை பறித்துக் கொண்டதாகவும், தற்போது என்னுடைய ஜீப் விராங்களர் காரை சந்திக்கவும் என அவர் தெரிவித்து இருக்கின்றார். ஜான் ஆபிரகாம் இடமிருப்பது சமீபத்திய வெளியீடான 2024 ஜீப் விராங்க்ளர் ஆகும்.
இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனுக்கு சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தன்னுடைய முகமாக ஹிரித்திக் ரோஷனை ஜீப் மாற்றி இருக்கின்றது. இந்த காரை உள் மற்றும் வெளி என அனைத்திலும் மாற்றம் செய்தே ஜீப் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
மிக அதிக தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கிய வாகனமாகவும் விராங்க்ளர் ரூபிகான் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஜீப் விராங்க்ளர் ரூபிகான் இந்தியாவில் ரூ. 67.65 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 71.65 லட்சம் ஆகும்.
இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், பழைய வெர்ஷனைக் காட்டிலும் ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே அதிக விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஜீப் நிறுவனம் இந்த காரை சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டருக்கு போட்டியாகவே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த கார் மாடல் இந்திய சந்தையில் ரூ. 97 லட்சம் என்கிற விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைவிட மலிவு விலைக் கொண்ட கார் மாடலே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 ஆகும். ஜீப் விராங்க்ளர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஃபியட் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இந்த எஞ்சினுடன் வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 270 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஆறு ஏர் பேக்குகள் போன்ற அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், டயரில் உள்ள காற்றைக் கண்கானிக்கும் கருவி மற்றும் முன்-பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமிராக்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் ஃபேஸ்லிஃப்ட் ஜீப் விராங்க்ளர் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு முன்பைக் காட்டிலும் தற்போது பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர்களை தன் பக்கம் வளைத்துப் போடும் நோக்கிலேயே ஜீப் அதன் விராங்க்ளர் ரூபிகானை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








