சினிமா உலகை அடுத்து ஆள போறது இந்த சின்ன பையன்தான்! விலை உயர்ந்த காரில் வந்த பிரபல மனிதரின் செல்ல மகன்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலரிடமும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் உள்ளது. இதில், ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan), பொம்மன் இரானி (Boman Irani), நேஹா சர்மா (Neha Sharma), ரிச்சா சடா (Richa Chadda) மற்றும் ஜெயதேவ் உனத்கட் (Jaydev Unadkat) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இதில், ஹிருத்திக் ரோஷனை பற்றி யாருக்கும் அறிமுகமே தேவையில்லை. இவர் இந்தியா முழுக்க பிரபலமாக உள்ள பாலிவுட் நடிகர்களில் ஒருவர் ஆவார். க்ரிஷ் (Krrish) மற்றும் தூம் (Dhoom) போன்றவை எல்லாம், ஹிருத்திக் ரோஷனின் திரையுலக பயணத்தில் குறிப்பிடத்தகுந்த படங்கள் ஆகும்.

ஹிருத்திக் ரோஷனுக்கு மொத்தம் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் ஹ்ரிஹன் ரோஷன் (Hrehaan Roshan) மற்றும் ஹ்ரிதன் ரோஷன் (Hridhaan Roshan) ஆகியோர் ஆவர். இவர்களில் ஒரு மகன், ஹிருத்திக் ரோஷனின் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ, மும்பை (Mumbai) நகரில் உள்ள ஒரு தனியார் விமான நிலையத்திற்கு, ஹிருத்திக் ரோஷனின் மகன் வந்தபோது எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஹிருத்தின் ரோஷனின் மகன் பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் ஆரம்ப விலையே 99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த விலை உயர்ந்த காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும்.இந்த 3 இன்ஜின்கள் உடனும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
அத்துடன் 3 இன்ஜின்களுடனுமே 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன சொகுசு வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை. இதில், தலா 12.3 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் முக்கியமாவை ஆகும்.
இதுதவிர 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 590 வாட் 13 ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்ந்த காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் கிடையாது.
பாதுகாப்பை பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, 9 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) ஆகிய கார்களுடன், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹிருத்திக் ரோஷனின் மகன்களை மக்கள் தற்போது பாலிவுட் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார்கள் என குறிப்பிட்டு வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில், மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரில் ஹிருத்திக் ரோஷனின் மகன் ஸ்டைலாக வந்து இறங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications








