உலகையே அடக்கி ஆளப்போகும் சீனா! இந்த ஒரு பேட்டரி வந்துடுச்சுன்னா எல்லாம் சீனா கிட்ட அடிமையாக வேண்டியது தான்!
சீன தொழிற்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உலகில் புதிய கண்டு பிடிப்பு ஒன்றை செய்துள்ளுது. இதன்படி இந்நிறுவனம் சாலிட் ஸ்டேட் பேட்டரி என்ற புதிய வகை பேட்டரியை எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்துவதற்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் காரில் 3000 கி.மீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்திய மார்கெட்டில் கடந்த சில மாிங்களாக மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி குவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இவி வாகனங்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதற்கு முக்கியமான காரணம் பேட்டரியில் வாகனம் இயங்கும் தூரம் மற்றும் பேட்டரியை சார்ஜ் ஏற்ற ஆகும் நேரம் ஆகிய இரண்டும் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பெட்ரோல் கார் போல தேவையான இடங்களில் சில நிமிடங்களில் சார்ஜ் போட்டு நீண்ட தூரம் பயணிக்க முடியாது.
இந்நிலையில் சீனாவில் உள்ள தொழிற்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனம் சமீபத்தில் சாலிட் ஸ்டேட் பேட்டரிக்கான காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ளது. தற்போது நாம் எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயான் ரக பேட்டரிகளை தான் பயன்படுத்துகிறோம். இதில் தான் அதிக சக்தியை சேரிக்க முடியும் என்பதால் இதை பயன்படுத்துகிறோம். சாலிட் ஸ்டேட் பேட்டரி என்பது லித்தியம் அயானை விட பல மடங்கு அதிக பவரை சேமித்து வைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

இது மட்டுமல்ல லித்தியம் அயான் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் மிக விரைவாகவே சார்ஜ் ஏறிவிடும். தற்போது காப்புரிமைக்காக இந்நிறுவனம் பதிவு செய்துள்ள பேட்டரியில் நைட்ரஜன்-டோப்புடு சல்ஃபைல்டு எலெக்ரோலைட் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது பேட்டரியை அடர்த்தி தன்மையை கிலோவிற்கு 400-500 Wh வரை அதிகரிக்பபதாகவும் தெரிவித்துள்ளது.
இது தற்போது பயன்பாட்டில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியில் உள்ள அடர்த்தி தன்மையை விட 2-3 அதிகம் ஆகும். இந்த பேட்டரிகள் அதிக வேகத்தில் சார்ஜ் ஏறும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 0-100 சதவீத சார்ஜை வெறும் 5 நிமிடத்தில் ஏற்றி விடும். தற்போது சாலிட் ஸ்டேட் பேட்டரியை தயாரிப்பதில் இருக்கும் மிகப்பெரிய சவால் ஸ்டெபிளைசேஷன், இதை சமாளிக்கவே நைட்ரஜன் டோப்பிங் சல்ஃபைடு எலெக்ட்ரோலைட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை இப்படியான பேட்டரிகளை தியரியாக படிக்க நன்றாக இருக்கும் ஆனால் இதை தயாரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்றும்,இதை தயாரிக்க அதிக செலவாகும் என்றும் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலயின் படி ஒரு கிலோ வாட் ஹவர் பவர் கொண்ட பேட்டரியை தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ1.2 லட்சம் செலவாகும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹவாய் நிறுவனம் தற்போது தான் பேட்டரிய தயாரிப்பில் கவனம் செலுத்துவதால் புதிய தயாரிப்பிற்காக அதிக முதலீட்டை செய்து இதை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் குறைந்த செலவில் இந்த பேட்டரிகள் தயாரிக்கப்பட்டால் நிச்சயம் இது எலெக்ட்ரிக் வாகன உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி ஹவாய் நிறுவனம் எதிர்காலத்தில் ஒரு முக்கியமான நிறுவனமாக கூட மாற வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு ஆரம்ப நிலையில் மட்டுமே இருக்கிறது. இந்தியாவிலும் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டால் நிச்சயம் பேட்டரி தயாரிப்பில் இந்திய நிறுவனங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கலாம். ஆனால் சீனா தற்போது நடத்தி வரும்ஆய்வை பார்த்தால் எதிர்காலத்தில் உலக நாடுகள் எல்லாம் சீனாவிடம் மண்டி போட்டு கேட்டால் தான் இவி வாகனங்களை தயாரிக்க முடியும் போல


Click it and Unblock the Notifications









