3000 கி.மீ ரேஞ்ச், 5 நிமிடத்தில் 100% சார்ஜ் இவியை புரட்டி போடும் பேட்டரி ரெடியாகுது!
சீனாவை சேர்ந்த டெக் நிறுவனம் ஹவாய் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தும் புதிய சாலிட் ஸ்டேட் எலெக்ட்ரிக் பேட்டரியை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த தயாரிப்பில் தற்போது புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சீனாவை சேர்ந்த டெக் நிறுவனம் ஹவாய் என்ற நிறுவனம் செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் நிலையில், தற்போது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வரும் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தற்போது இந்திய மையான் பேட்டரிகள் அதிகபட்சமாக பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தாண்டிய அடுத்த ஸ்டேஜாக சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த சாலையில் ஸ்டேட் பேட்டரிகளை கமர்சியல் ரீதியாக தயாரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளில் உள்ள சிக்கல்களை எல்லாம் இந்த சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் போக்கிவிடும் என்பதால் இந்த ரக பேட்டரிகளை தயாரிக்க பல நிறுவனங்கள் ஆர்வமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஹவாய் நிறுவனம் கடந்த ஜூலை மாதமே இப்படியான பேட்டரி தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த பேட்டரிகள் வரும் 2027ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த சார்லி ஸ்டேட் பேட்டரிகளில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை அதன் விலை தான். 1 கிலோ வாட் ஹவர் கொண்ட பேட்டரியை தயாரிக்க ரூ1.20 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கான காப்புரிமையை அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன்படி இந்த பேட்டரியில் நைட்ரஜன் டோப்புடு சல்பைட் எலெக்ட்ரோலைட் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது ஒரு பேட்டரியின் அடர்த்தியை 400 முதல் 500wh வரை ஒரு கிலோவிற்கு உயர்த்தும் என தெரிகிறது.

அதாவது லித்தியம் அயன் பேட்டரிகளை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக திறன் இந்த பேட்டரிக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த பேட்டரியை அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் ஏற்ற முடியும் அதாவது 100% சார்ஜை வெறும் ஐந்து நிமிடத்தில் சார்ஜ் ஏற்றி விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலிட் ஸ்டேட் பேட்டரிகளை தயாரிக்க தற்போது இருக்கும் மிகப்பெரிய சவால் என்றால் அது லித்தியத்தை அதனுடன் சேர்ப்பது தான். இதனால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆனால் அதை செய்வது சவாலான விஷயமாக இருக்கிறது. இந்த சவாலை எதிர்கொள்வதற்காக நைட்ரஜன் டோப்பிங்கை எலெக்ட்ரோலைட் உடன் சேர்க்க ஹவாய் நிறுவனம் முடிவு செய்து அதற்கான காப்புரிமைக்காக தற்போது விண்ணப்பித்துள்ளது.
இதை பேப்பரில் உள்ள தகவல்கள் ரீதியாக படிக்க ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இதை தயாரிப்புக்கு கொண்டு வருவது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும். பல்வேறு சோதனைகளுக்கு இது உட்படுத்தப்பட வேண்டும். ரியல் பெரியதாக பேட்டரி ஆக தயாரிக்க செலவுகள் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை நாம் பொறுத்து பார்க்க வேண்டும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் கார்கள் சுமார் 3000 கிலோமீட்டர் மேலாக பயணிக்கும் என ஹவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிக்கும் போது இதைவிட ஆயிரம் கிலோமீட்டர் குறைவாக கொடுத்தாலும் 2000 கிலோமீட்டர் என்பதை மிக அதிகமான ரேஞ்ச் தான் என்பதால் இது நடைமுறையில் நல்ல பலன்களை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி தயாரிப்பில் இல்லை இப்போது பேட்டரி குறித்த ஆய்வு மற்றும் அதற்கான மெட்டீரியல் குறித்த தேடல் ஆகியவற்றில் அதிக முதலீடுகளை நிறுவனம் செய்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பேட்டரிகளை தயாரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களாக டொயோட்டா, சாம்சங், எஸ் டி ஐ, சி ஏ டி எல் ,ஆகிய நிறுவனங்கள் இருக்கிறது. அவர்களும் சாலிட் ஸ்டேட் பேட்டரிகளை தயாரிக்க ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஹவாய் நிறுவனமும் இதில் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 2027 முதல் 2030 ஆம் ஆண்டுக்குள் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வந்தால் நிச்சயம் இவி உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழிற்நுட்பம் இந்த பேட்டரியில் மிகப்பெரிய மைல் கல்லை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









