அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

Written By:

மல்லையா போலவே அவர்களது கார்களும் மதிப்பிழந்து போயுள்ளன. ஆம், மல்லையா பயன்படுத்திய இரண்டு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம் போயுள்ளன. அதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார் சாராய அதிபர் விஜய் மல்லையா. இந்த நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட கடனை ஈடுகட்டுவதற்கு வழி தெரியாமல் அவரது சொத்துக்களை வங்கிகள் கைப்பற்றி ஏலம் விட்டு வருகின்றன.

அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

அவருக்கு சொந்தமான சொகுசு பங்களாக்கள், விமானங்கள், கார்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவர் பயன்படுத்திய இரண்டு கார்கள் அண்மையில் ஏலம் விடப்பட்டன. அவை அடிமாட்டு விலைக்கு ஏலம் போயுள்ளன.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

மல்லையா பயன்படுத்திய 2002ம் ஆண்டு மாடல் ஹூண்டாய் சொனட்டா காரும், 2003ம் ஆண்டு மாடல் ஹோண்டா அக்கார்டு காரும் ஆன்லைன் மூலமாக ஏலத்தில் விடப்பட்டன. அந்த கார்களை கர்நாடக மாநிலம், ஹூப்ளியை சேர்ந்த கார் சேகரிப்பாளர் வாங்கி இருக்கிறார்.

அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

ஹனுமந்த ரெட்டி என்ற அந்த தொழிலதிபர் கார் சேகரிப்பில் ஆர்வம் உடையவர். பழைய கார்களை வாங்கி சேகரித்து வருகிறார். இந்த நிலையில், மல்லையா பயன்படுத்திய ஹூண்டாய் சொனாட்டா காரை ரூ.40,000 விலையிலும், ஹோண்டா அக்கார்டு காரை ரூ.1 லட்சம் கொடுத்தும் வாங்கி இருக்கிறார். வரிகள் உள்பட இரண்டு கார்களையும் ரூ.1.58 லட்சம் விலையில் வாங்கி இருக்கிறார்.

அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

ஹூண்டாய் சொனாட்டா காருக்கு ரூ.13.15 லட்சம் சந்தை மதிப்பும், ஹோண்டா அக்கார்டு காருக்கு ரூ.21 லட்சம் சந்தை மதிப்பும் போடப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை வாங்க யாரும் முன் வராத நிலையில், இந்த அடிமாட்டுக்கு விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

இந்த கார்களை ஹனுமந்த ரெட்டி வாங்கிய விஷயம், ஹூப்ளி நகரில் காட்டுத் தீ போல பரவி இருக்கிறது. மேலும், மல்லையா பயன்படுத்திய இந்த இரண்டு கார்களையும் வாங்குவதற்கு ஹனுமந்தப்பாவை அணுகி வருகின்றனராம்.

அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

ஹூண்டாய் சொனட்டா காரை ரூ.2.5 லட்சம் வரையிலும், ஹோண்டா அக்கார்டு காருக்கு ரூ.4.5 லட்சம் வரையிலும் கொடுத்து வாங்குவதற்கு பலர் முன் வந்துள்ளனராம். ஆனால், இந்த கார்களை விற்பனை செய்வதற்கு இப்போது திட்டம் எதுவும் இல்லை என்று ஹனுமந்த ரெட்டி கூறி இருக்கிறார்.

அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையா கார்கள்!

இரண்டு கார்களும் நல்ல கண்டிஷனில் இருப்பதாகவும், ஒரு கார் ஹனுமந்த ரெட்டிக்கு சொந்தமான ஹூப்ளி வீட்டிலும் மற்றொரு கார் பெங்களூர் நாயண்டஹள்ளியில் உள்ள வீட்டிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Hubballi Businessman Buys Vijay Mallay Cars In Auction.
Story first published: Thursday, August 31, 2017, 10:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark