ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள் - வீடியோ!

ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் மிகப்பெரிய மலைப்பாம்பு நுழைந்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற சமயங்களில் என்ன செய்யவேண்டும் என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள் - வீடியோ!

பொதுவாக ஊர்ந்து செல்லும் ஜந்துக்கள் குளிரை விரும்பாத காரணத்தால், சில சமயங்களில் மக்கள் வசிக்கும் வீடுகள், காரின் எஞ்ஜின் பகுதி அல்லது மிதமான வெப்பநிலையைக் கொண்ட இடங்களில் அழையாத விருந்தளியாக புகுந்துவிடுவது வழக்கம். அந்த வகையில் இங்கு மிகப்பெரிய மலைப் பாம்பு ஒன்று ஹோண்டாவின் யூனிகார்ன் மோட்டார்சைக்கிளில் புகுந்துள்ளது. இதுகுறித்த வீடியோக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் இதேபோன்றொரு சம்பவம் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்திருந்தது. வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் எஞ்ஜின் (பேனட்) பகுதிக்குள், லங்கூர் இனத்தைச் சேர்ந்த குரங்கு ஒன்று புகுந்துக்கொண்டது. இதனை அறியாத அந்த வாகன ஓட்டி காரை எடுத்துக்கொண்டு பயணிக்க ஆரம்பித்தார். அப்போது, சக பயணி ஒருவர் கூறியதைத்தொடர்ந்து, காருக்குள் குரங்கு புகுந்திருப்பது தெரியவந்தது. பின்னர், காரின் முகப்புப் பகுதியை (கிரில்லை) உடைத்து குரங்கு வெளியேற்றப்பட்டது.

ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள் - வீடியோ!

இவ்வாறு, விலங்குகள் குளிருக்கு இதமாக வாகனங்களுக்குள் புகுந்துக் கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இந்நிலையில், டில்லியில் வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா யூனிகார்ன் மோட்டார்சைக்கிளில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று புகுந்திருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள் - வீடியோ!

இந்த வீடியோக் காட்சியில், மோட்டார்சைக்கிளின் பின்சக்கரத்தில் சுமார் 7 முதல் 8 அடிவரை உள்ள மலைப்பாம்பு சுருண்டுக்கொண்டிருப்பது தெரிகிறது. மிகவும் இருக்கமாக பற்றிக்கொண்டிருந்த அந்த பாம்பினை, வெளியேற்றும் விதமாக சிலர் பிடித்து இழுக்கின்றனர். ஆனாலும் சிறிதும் அசைவின்றி அந்த மலைப்பாம்பு பைக்கன் டயரைப் பற்றிக்கொண்டிருக்கிறது. பின்னர், நீண்ட நேர போராட்டத்தை அடுத்து பாம்பு வெளியேற்றப்படுகிறது.

பாம்புகள் பொதுவாக வெப்பநிலையை விரும்புவதால், இதுபோன்ற சம்பவங்களின் வீடியோக் காட்சிகளை நாம் அவ்வப்போது கண்டு வருகிறோம். மேலும், இவ்வாறு வாகனங்களுக்குள் புகுந்துக்கொள்ளும் பாம்புகள் பல மாதங்களுக்குள் அங்கேயே தங்கிவிடும் சம்பவமும் சில நேரங்களில் நிகழ்வது உண்டு. இதுபோன்ற சூழலை நம்மால் எளிதில் கையாள முடியாது. மேலும், இது நமக்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.

ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள் - வீடியோ!

ஆகையால், வாகனங்களுக்குள் புகுந்த பாம்பை வெளியேற்ற, பாம்புகளைப் பிடிக்கும் கைதேர்ந்த வல்லுநர்களை அழைப்பது அவசியம். அவர்கள் பாம்புகளைப் பிடிக்கும் உபகரணங்களைக் கொண்டு பாம்பினை எளிதில் வெளியேற்றிவிடுவார்கள். ஆகையால், உங்களது வாகனத்தில் பாம்பு நுழைந்துவிட்டால், உடனடியாக பாம்பை பிடிப்பவரை அழைத்து உதவி கேளுங்கள். மாறாக நீங்களாகவே செய்யும் முயற்சி செய்தால் அது தோல்வியிலும், சில நேரங்களிலும் ஆபத்திலும் முடிந்துவிடும்.

ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த மக்கள் - வீடியோ!

மேலும், வாகனங்களைப் புதர் அண்டிய இடங்களில் நிறுத்துவதைத் தவிருங்கள். ஏனென்றால், இதுபோன்ற இடங்களில் இருந்துதான் பாம்புகள் வாகனத்தில் எளிதில் நுழைந்துவிடுகின்றன. மேலும், வாகனத்தை முழுவதுமாக கவர் செய்த நிலையில் மூடி வையுங்கள். இதுவும் உங்கள் வாகனத்தில் ஜந்துக்கள் புகுவதைத் தவிர்க்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2019, 13:30 [IST]
English summary
Huge Python Got Struck In Honda Unicorn-Video. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+