சாதாரண ஆல்டோ காரில் சுற்றும் அழகு தேவதை! இவங்க இவ்ளோ பெரிய ஆளா! மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!

திரையுலக நட்சத்திரங்கள் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வரும் ஒரு சில விஷயங்களில் ஒன்று ஆடம்பரமான கார்கள். அவர்கள் பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்த கார்களில்தான் பயணம் செய்வார்கள். ஆனால் இந்த கூட்டத்தில் இருந்து ஒரு சிலர் வெளியே தனித்து தெரிகின்றனர்.

ஆடம்பரத்திற்காக அல்லாமல், தங்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் போதும் என எளிமையான கார்களில் அவர்கள் பயணம் செய்வதுதான் இதற்கு காரணம். அப்படி மிகவும் விலை குறைந்த எளிமையான கார்களில் பயணம் செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் குறித்த ஆச்சரியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Sara Ali Khan

சாரா அலி கான் (Sara Ali Khan): இவர் மாருதி சுஸுகி ஆல்டோ 800 (Maruti Suzuki Alto 800) காரை சொந்தமாக வைத்துள்ளார். இது இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான மற்றும் பிரபலமான கார் ஆகும். பல்வேறு சந்தர்ப்பங்களில், மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரை, சாரா அலி கான் ஓட்டி வந்துள்ளார்.

மாருதி ஆல்டோ 800 காரின் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) என இரண்டு வெர்ஷன்களிலும், 796 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. சாரா அலி கான் சாதாரண மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரை ஓட்டினாலும், அவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-350டி (Mercedes Benz G-350d) போன்ற விலை உயர்ந்த கார்களும் இருக்கவே செய்கின்றன.

Shraddha Kapoor

ஷர்த்தா கபூர் (Shraddha Kapoor): இவரிடம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) கார் இருக்கிறது. ஷர்த்தா கபூரின் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில், 1.3 லிட்டர் டர்போ டீசல் (Diesel) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.

இந்த காரில் டீசல் இன்ஜின் இல்லையே என்றுதானே யோசித்து கொண்டுள்ளீர்கள். ஆம், தற்போது இல்லைதான். ஆனால் இது மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கு முன்பு தயாரிக்கப்பட்டது ஆகும். தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் எந்தவொரு காரிலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை.

Kim Sharma

கிம் ஷர்மா (Kim Sharma): மிடில்-க்ளாஸ் மக்களின் சொந்த கார் கனவை நனவாக்குவதற்காக களமிறக்கப்பட்ட டாடா நானோ (Tata Nano) காரை, கிம் ஷர்மா வைத்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு கிம் ஷர்மா சாதாரண டாடா நானோ காரை ஓட்டி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஆல்டோ 800, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நானோ போன்ற கார்களை சாதாரண மனிதர்கள் ஓட்டுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் நிலையிலும், இந்த பிரபலமான பாலிவுட் நடிகைகள் (Bollywood Actresses) சாதாரண கார்களை ஓட்டுவது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 27, 2023, 16:54 [IST]
English summary
Humble cars of bollywood actresses sara ali khan maruti suzuki alto 800 kim sharma tata nano
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X