ஊர் முழுக்க இவரை பற்றிய பேச்சு தான்!! மனைவி உடன் ஷோரூமுக்கு எப்படி வந்தார் தெரியுமா?
மஹிந்திரா தார் (Mahindra Thar), இந்தியர்கள் தற்சமயம் விரும்பி வாங்கக்கூடிய மஹிந்திரா வாகனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக, மலைப்பிரதேச பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் வசிப்பவர்களின் முதன்மையான சாய்ஸாக மஹிந்திரா தார் விளங்குகிறது. மஹிந்திரா தாரின் 5-டோர் வெர்சனாக தார் ராக்ஸ் (ROXX) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த வாகனத்தை இங்கு ஒரு தம்பதியினர் ஒட்டகத்தில் ஷோரூமுக்கு சென்று வாங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்தும், மஹிந்திரா தார் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதியதாக வாகனம் ஒன்று குடும்பத்தின் போக்குவரத்துக்காக வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஒரு சிலர் புதிய கார் ஒன்றை வாங்குவதையே தனது வாழ்நாள் இலட்சியமாக வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் தங்களது வாழ்நாள் கனவு வாகனத்தை வாங்கும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது.

அவ்வாறு இங்கு ஒரு கணவன்-மனைவி தம்பதியர் தங்களது விருப்பமான மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை அளவு கடந்த மகிழ்ச்சி உடன், வித்தியாசமாக யோசித்து ஒட்டகத்தில் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தம்பதியை அழைத்து செல்வதற்காகவே ஒட்டகங்கள் அலங்கரிக்கப்பட்டு உள்ளதை காணலாம். தம்பதியர் இருவரும் சிவப்பு நிற உடையில் இருக்க, அதற்கேற்ப ஒட்டகங்களும் சிவப்பு நிற துணிகளால் அலங்கரிப்பட்டு உள்ளன.
மேலும், கருப்பு நிற உடை அணிந்த பாதுகாவலர்களையும் இந்த தம்பதியினர் உடன் அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோவில், மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர் குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்றுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலின் முதல் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் இதுவென கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த நிகழ்வை காலத்திற்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் விதமாக ஒட்டகத்தில் ஷோரூமுக்கு சென்றுள்ளனர்.

இதற்காக ஒட்டகங்களை அவற்றிற்கான பாதுகாவலர்கள் உடன் வாடகைக்கு எடுத்த இந்த தம்பதியினர் இதுகுறித்து கூறுகையில், மஹிந்திரா தார் பாலைவனத்திற்கான வாகனம், ஒட்டகம் ஆனது பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் குறிப்பிடும் விதமாகவே ஒட்டகத்தில் ஷோரூமுக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர். இந்த ஒட்டக பயணம் முழுவதும் தம்பதியினர் வெறுமனே ஒட்டகத்தின் மீது அமர்ந்துள்ளனர்; ஒட்டகத்தை கட்டுப்படுவதற்கு தனியாக ஆட்கள் கொண்டுவரப்பட்டனர்.
ஒட்டகத்தில் ஷோரூமை சென்றடைந்த பின் ஷோரூமில் வாகனத்திற்கான பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின், தார் ராக்ஸ் வாகனத்தை அவர்கள் ஷோரூமில் இருந்து ஓட்டி சென்றனர். இந்த தம்பதி வாங்கியிருப்பது தார் ராக்ஸ் வாகனத்தின் டாப்-வேரியண்ட் போல் தெரியவில்லை. ஏனெனில் அவர்களது தார் ராக்ஸ் வாகனத்தில் பனோராமிக் சன்ரூஃப் இல்லை. ஆனால், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மல்டி-ஃபங்க்சன் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், தார் ராக்ஸ் வாகனத்தின் குறிப்பிட்ட எந்த வேரியண்ட்டை இந்த தம்பதியினர் வாங்கியுள்ளனர் என்பதை அறிய முடியவில்லை. மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, நிறைய நகரங்களில் இந்த வாகனத்தை புக் செய்துவிட்டு டெலிவிரி பெறுவதற்கான காத்திருப்பு காலம் ஆனது 2 மாதங்களாக உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 172 பிஎச்பி மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வரையிலும், 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் சீரிஸ் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 174 பிஎச்பி மற்றும் 380 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலைவன கப்பலான ஒட்டகத்தில் ஷோரூமுக்கு வந்து, அங்கிருந்து பாலைவனத்திற்கு ஏற்ற வாகனமான மஹிந்திரா தார் ராக்ஸில் இந்த தம்பதி சென்றுள்ளது. இந்த தம்பதியினரின் இந்த செயலுக்கு அவர்களது அளவுகடந்த மகிழ்ச்சி என்பது மட்டுமின்றி, இணைய மோகமும் ஒரு காரணம் என சொல்லலாம். ஏனெனில், இவ்வாறான செயல்களையே இணையத்தில் மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications









