மனைவி இறந்த பிறகு கணவன் புதுசா கார் வாங்கி என்ன பண்ணாரு தெரியுமா?
தன் மனைவி பிரிந்து சென்ற நிலையில் தன் வாழ்வில் முக்கியமான நிலையில் அவர் இல்லாததை நினைத்து கணவன் கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற பிறகும் வாழ்வில் தன் தரத்தை கணவர் உயர்த்திய பின்பும் பிரிந்து சென்ற மனைவி நினைத்து கணவன் உருகியது. பலருக்கு கண்ணீரை வரவழைத்தது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்ஸ்டாகிராமில் ஹேரிஸ் போட்டோகிராபி என்ற பக்கத்தில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பலரை கண்ணீர் விட வைத்துள்ளது. அதில் இழந்த மனைவியை நினைத்து கதறிஅழும் கணவரை பார்த்து பலரும் பரிதாபபட்டு அழுகின்றனர். இந்த வீடியோவில் கணவர் புதிதாக ரூ18 லட்சத்திற்கு கார் வாங்கிய நிலையில் இந்த தருணத்தில் தனது மனைவி இல்லையே என வருத்தத்தில் அவர் அழுகிறார்.

இந்த வீடியோவின் படி ஒரு குடும்பத்தினர் புதிதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டூஸ் காரின் டாப் லைன் வேரியன்டை வாங்கியுள்ளனர். அந்த காருக்கு முன்னே நின்று அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் அவர் தனது மனைவியின் புகைப்படத்தை எடுத்து கொண்டு போய் காரின் முன் சீட்டில் வைத்து பின்னர் அந்த புகைப்படத்திற்கு முன்னர் பூவை வைக்கிறார். அப்பொழுது தான் நமக்கு அவரது மனைவி மறைந்துவிட்டார் என்பதே தெரிகிறது. இந்த வீடியோ நம்மையும் கண்கலங்க வைக்கிறது.
இந்த வீடியோவின்படி அவர் வாங்கியது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் கார் ஆகும். அதில் டாப் லைன் மேனுவல் வேரியன்ட் காரை வாங்கியுள்ளார். இந்த வேரியன்ட் அந்த காரின் டாப் வேரியன்ட்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ18.12 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் 1.0 லி டிஎஸ்ஐ 3 சிலிண்டர் இன்லைன் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 114 பிஎச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜை பொருத்தவரை 20.8 கி.மீ மைலேஜை தருகிறது. இந்த கார் முன்பக்க வீல் டிரைவ் அம்சத்தை கொண்டதாக இருக்கிறது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4561மிமீ நீளமும், 1752 மிமீ அகலமும், 1507 மிமீ உயரமும், 2651 மிமீ வீல் பேஸூம் கொண்டுள்ளது. இது போக இந்த காரில் 179 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இந்த கார் மொத்தமே 1208 கிலோ எடை எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராவும் நல்ல இட வசதி கொண்ட காராவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் பாதுகாப்பு சோதனையில் குளோபல் என்கேப்பில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இது போக இந்த காரில் 6 ஏர்பேக்குகள், சீட் பெல்ட் வார்னிங், சைல்டு சீட் மவுண்ட் ஆங்கர்கள், பின்பக்க சீட்டில் நடுவில் உள்ளவருக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்,எமர்ஜென்ஸி லைட் ஃபிளாஸிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இதனால் இந்த காரை பலர் விரும்பி வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத்துன் பயணிக்க இந்த காரை தான் பலர் தேர்வு செய்வார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மனைவி இறந்த பிறகு கணவன் மனைவியின் பிரிவை நினைத்து வாழ்வில் முக்கியமான தருணத்தில் அவர் இல்லாததை நினைத்து மிக வருத்தப்பட்டு அழும் வீடியோ பார்க்கும் நம்மையும் கண்கலங்க வைத்துள்ளது. உங்கள் வாழ்வில் நீங்கள் இப்படியாக மிஸ் செய்யும் நபர் யார்? இது குறித்த விபரங்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









