மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு கணவர் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

பரிசுகள் எப்போதும் நமக்கு ஸ்பெஷலானதுதான். சிறியதோ அல்லது பெரியதோ, விலை குறைவானதோ அல்லது விலை உயர்ந்ததோ, எப்படி இருந்தாலும் பரிசாக கிடைக்கும் ஒரு பொருள் நமது மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும். அதிலும் விலை உயர்ந்த வாகனங்கள் பரிசாக கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

மகன், மகள்கள் தங்கள் பெற்றோர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசாக வழங்கியது அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசாக வழங்கியது தொடர்பான பல்வேறு செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடந்த காலங்களில் வாசகர்களுக்கு நிறைய முறை வழங்கியுள்ளது.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இந்த சூழலில் துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தற்போது தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் பிளாக் பேட்ஜ் (Roll Royce Wraith Black Badge) காரை பரிசாக வழங்கியுள்ளார். பிசிசி காண்ட்ராக்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் அம்ஜத். இவரது மனைவி மர்ஜனா.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

மர்ஜனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அம்ஜத் இந்த விலை உயர்ந்த பரிசை வழங்கி அசத்தியுள்ளார். தனது கணவரின் அலுவலகத்தில், சிஓஓ-வாக (COO - Chief Operating Officer) மர்ஜனா பணியாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி மர்ஜனாவிற்கு பிறந்த நாள். இதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்தது.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இதனை கொண்டாடும் விதமாக தனது மனைவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் பிளாக் பேட்ஜ் காரை அம்ஜத் பரிசளித்துள்ளார். பளபளப்பான சிகப்பு நிறத்தில் அவர் தனது மனைவிக்கு காரை பரிசாக வழங்கியுள்ளார். அத்துடன் இந்த காரின் வெளிப்புறத்தில் கருப்பு நிற ஹைலைட்களையும் நம்மால் காண முடிகிறது. ஆனால் இது அம்ஜத் குடும்பத்தின் முதல் சொகுசு கார் அல்ல.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

அம்ஜத் இதற்கு முன்னதாகவே ஏராளமான விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஃப்-வேகன், ரேஞ்ச் ரோவர், பென்ட்லீ, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மற்றும் ஜீப் உள்பட பல்வேறு விலை உயர்ந்த கார்கள் அம்ஜத்திடம் சொந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் பிளாக் பேட்ஜ் கார் மிகவும் விலை உயர்ந்த மாடல் ஆகும். இந்தியாவில் இந்த காரின் விலை சுமார் 8.5 கோடி ரூபாய் ஆகும். இது ஆன் ரோடு விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு 'கஸ்டமைசேஷன்' தேர்வுகளை வழங்கி வருகிறது.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரில் மாடிஃபிகேஷன்களை செய்து கொள்ள முடியும். ஆனால் அம்ஜத் தனது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ள காரில், மாடிஃபிகேஷன்களை செய்துள்ளாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் செய்திருக்கும்பட்சத்தில், இந்த காரின் விலை இன்னும் அதிகமாக இருக்கும்.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் காரின் ரெகுலர் வெர்ஷனும் கிடைக்கிறது. ஆனால் அம்ஜத் தனது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளது பிளாக் பேட்ஜ் வெர்ஷன் ஆகும். பரிமாணங்கள் அடிப்படையில் பார்த்தால், இது பெரிய கார் ஆகும். இந்த காரின் நீளம் 5,457 மிமீ, அகலம் 1,948 மிமீ, உயரம் 1,550 மிமீ ஆகும். இந்த காரில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஏராளமான சொகுசு வசதிகளை வழங்கியுள்ளது.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் பிளாக் பேட்ஜ் காரில், 6,592 சிசி, 12 சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 591 பிஹெச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் அனைத்து சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி செலுத்தப்படுகிறது.

மனைவியின் பிறந்த நாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

நாங்கள் ஏற்கனவே கூறியது போல், இது பெரிய கார் ஆகும். இருந்தாலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.6 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Husband gifts rolls royce wraith black badge to wife check details here
Story first published: Tuesday, October 5, 2021, 17:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X