இப்படி ஒரு புருஷன் கிடைக்க குடுத்து வச்சிருக்கனும்! கல்யாண நாளுக்கு இவ்வளவு காஸ்ட்லி கார் பரிசா?
பெரிய பணக்கார தொழிலதிபர்கள் தங்கள் குடும்பத்தின் சிறந்த தினங்களின் போது காஸ்ட்லியான காரை வாங்கி அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கு பரிசளிப்பது வழக்கமான ஒன்று தான்.கேரள மாநிலத்தில் இப்படியாக ஒரு தொழிலதிபர் தனது திருமணநாள் அன்று அவரது மனைவிக்கு காஸ்ட்லியான கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஏகே ஷாஜி, இவர் MyG நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இந்நிறுவனம் ஸ்மார்ட் போன்களை சில்லறை வணிகம் செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கேரள மாநிலம் கேலிகட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு திருமண நாள் வந்துள்ளது. இதன் நினைவாக மனைவிக்கு காஸ்ட்லியான கார் ஒன்றை பரிசளிக்க விரும்பினார்.

இந்நிலையில் இவர் தனது மனைவிக்கு பிடித்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த காரை அவர் டெலிவரி எடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இவர்களது வீட்டின் முன்பு கார் பார்க் செய்யப்பட்டுள்ளது. இது முழுவதும் கவர் செய்யப்பட்டுள்ளது.
இந்த காரின் கவரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் லோகோ இருக்கிறது. ஷாஜியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியே வருகின்றனர். வெளியே வந்து கவர் செய்யப்பட்ட காரை திறக்கின்றனர். இந்த கார் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இதன் பின்னர் டீலர்களிடமிருந்து இவரது மனைவி காரின் சாவியை வாங்குகிறது. பின்னர் குடும்பத்தினர் கார் வாங்கிய சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடினர்.

பின்னர் ஷாஜியின் மனைவி காரின் கதவை திறந்து உள்ளே சென்றார். காரின் இன்ஜினையும், ஸ்டார்ட் பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்தார். அப்பொழுது வந்த சத்ததத்தை கேட்டு அவர் ஆச்சரியப்பட்டார். பின்னர் இவர் இந்த காரை ஓட்டி பார்த்தார். இந்த சம்பவங்கள் எல்லாம் இந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த காரின் விலையை பொருத்தவரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ரூ53 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்ப்டடுள்ளது. முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தனை கார்களும் விற்ற தீர்ந்தவிட்டன. இந்த கார் 8.5 தலைமுறை கோல்ஃப் ஜிடிஐ கார் ஆகும்.

இந்த கார் 5 டோர் கொண்ட ஃபெர்பார்மென்ஸ் ஹேட்ச்பேக் காராகும். இந்த காரின் டிசைன் ஸ்போர்ட்டியாக இருகு்கிறது. இந்த கார் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதில் 18 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் ரூஃப் பகுதியில் பொருத்தப்பட்ட ஸ்பாயிலர்கள் மற்றும் டுயல் எக்ஸாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறம் 12.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிறா்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 7 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டப்பி கியர் செலக்டர், மல்டிபிள் டிரைவிங் மோடு, ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜர், 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 கலர் ஆம்பியன்ஸ் லைட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பின்பக்க பார்க்கிங் கேமரா, ஆடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்ஸி பிரேக்கிங் அசிஸ்ட், முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார்கள், அடாஸ் தொழிற்நுட்பம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 265 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க் திறனையும், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேதகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்துவிடும்.இந்த கார் அதிகபட்சம் 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவில் இந்த காரை தொழிலதிபர் ஒருவர் தனது மனைவிக்கு வாங்கி பரிசளித்துள்ளது. பலரை ஆச்சரியபட வைத்துள்ளது. அதிக விலை கொண்ட இந்த காரை அவர் வாங்கியுள்ளார். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









