மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

தன் மனைவிக்கு ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை கணவர் பரிசாக அளித்து மெர்சலாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதற்காக இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய புதிய அம்சங்களை தனது பைக்குகளில் கொண்டுவந்த வண்ணம் உள்ளது.

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

இதன்படி புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மோட்டார்சைக்கிளாக மீட்டியோர் 350 கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்தது. முந்தைய ராயல் என்பீல்டு பைக்குகளை காட்டிலும் மாடர்ன் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த 350சிசி பைக்கிற்கு ஆரம்பத்தில் இருந்தே வாடிக்கையாளர்கள் குவிய துவங்கினர்.

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

மேலும் தற்சமயம் பலரது கனவு வாகனங்களில் ஒன்றாகவும் மீட்டியோர் 350 உள்ளது. இந்த வகையில் மீட்டியோர் 350 பைக்கை வாங்க ஆசைப்பட்ட மனைவிக்கு அவரது கணவர் சர்ப்ரைஸாக அந்த பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார்.

Image Courtesy: CrayLyf Rohit

க்ரேலிஃப் ரோஹித் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் அந்த நபர் தனது மனைவியை மேல் மாடியில் இருக்கும் வீட்டில் இருந்து அழைத்து வருகிறார். பிறகு தமது காருக்கு அருகில் புதிய பைக் (மீட்டியோர் 350) ஒன்றை யாரோ நிறுத்தி வைத்துள்ளனர் என கூற, அவரது மனைவி அந்த பைக்கை நோட்டமிடுகிறார்.

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

யாராக இருக்கும் என்று அவர் மனைவி கேட்டு கொண்டே இருக்க, தான் வாங்கியுள்ள அந்த மீட்டியோர் 350 பைக்கிற்கான சாவியினை மனைவியிடம் நீட்டுகிறார். ஒரு நிமிடம் இங்கு நடக்கிறது என்று புரியாமல் குழம்பிய அவரது மனைவி, இவர் விரிவாக கூற உணர்ச்சிவசப்பட்டு அழுதே விடுகிறார்.

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

பின்னர் தனது மனைவியை புதிய மீட்டியோர் 350 பைக்கில் ஒரு ரைடு செல்ல வற்புறுத்தும் அவர், தனது மனைவிக்கு பைக் சற்று உயரமாக உள்ளதை கண்டு கொள்கிறார். ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக்கிற்கு கூடுதல் ஆக்ஸஸரியாக பைக்கின் இருக்கையை 11 மிமீ வரையில் குறைக்கிறது.

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

இந்த வசதியை பயன்படுத்தி தனது பைக்கின் இருக்கையின் உயரத்தை குறைக்கவுள்ளதாகவும் இந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் பைக் பழுப்பு கஸ்டம் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறத்தேர்வு மீட்டியோரின் டாப் வேரியண்ட்டான சூப்பர்நோவாவிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.93 லட்சமாக உள்ளது. விலை குறைவான ஃபயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வேரியண்ட்களிலும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலைகள் ரூ.1.78 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகுகின்றன.

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

முன்பு விற்பனையில் இருந்த தண்டர்பேர்டு மற்றும் தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்குகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மீட்டியோர் 350, க்ரூஸர் மோட்டார்சைக்கிளாக வடிவமைக்கப்படுகிறது. புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தினால், இந்த பைக்கில் புதிய 349சிசி, 4-ஸ்ட்ரோக், எஸ்ஒஎச்சி, ஏர்/ஆயில் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது

மனைவிக்கு கணவர் தந்த ஆச்சிரிய பரிசு!! சர்ப்ரைஸ் என்றால் இப்படி பண்ணனும்...

அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும், 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய என்ஜின் மட்டுமின்றி புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டமும் மீட்டியோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Husband gifts wife a Royal Enfield Meteor 350 Tears of Joy. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X