பொண்டாட்டிய எப்படி வளச்சு போட்டு இருக்காரு பாருங்க... இவர பாத்து கத்துக்கோங்க.. இதுவே முதல் பிஇ 6 பரிசா!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக பிஇ 6 (BE 6) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த மின்சார காரையே ஓர் நபர் தன்னுடைய மனைவிக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த காரை அவங்க வாங்கினாங்க, இவங்க வாங்கினாங்க என்கிற தகவல் மட்டுமே வெளியாகி வந்த நிலையில் முதல் முறையாக பிஇ 6 காரை ஒரு நபர் பரிசாக வழங்கி இருக்கின்றார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

எனவே இதுவே நாட்டில் அரங்கேறும் முதல் பிஇ 6 கார் பரிசளிப்பு நிகழ்வாக இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். கேரளா மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர் வினயன் ஜேஎஸ். க்ரிபா ஹோம் சொல்யூசன்ஸ் எனும் எலெக்ட்ரிக்கல் ஷாப்பை இவர் நடத்தி வருகின்றார். கடையை விளம்பரம் செய்வதற்காக இன்ஸ்டாவில் வீடியோ போட்டே, அதில் அதில் ஃபாலோயர்களை பெற்றவராக வினயன் இருக்கின்றார்.

Husband gifts wife mahindra be 6 electric suv

இவரே இப்போது தன்னுடைய மனைவியின் மனதைக் கவரும் விதமாக பிஇ 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பரிசாக தந்திருக்கின்றார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டே இந்த கார் பரிசளிப்பை வினயன் செய்திருக்கின்றார். இந்த பரிசளிப்பால் அவரின் மனைவி மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார் என கூறலாம்.

இதையே வினயன் தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோவும் காட்டுகின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் காராக விரைவிலேயே பிஇ 6 மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு அது நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கி இருக்கின்றது. சொல்லப்போனால் பிரபலங்களும், பணக்காரர்களும் இந்த காரை விரும்பி வாங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

பிரபல நகைக் கடை ஜோஸ் ஆலுக்காஸ்-இன் ஓனர் ஜான் ஆலுக்கா கூட இந்த காரை சமீபத்தில் வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது. தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் ஓர் கார் மாடலே பிஇ 6 எஸ்யூவி ஆகும். தோற்றத்தில் மட்டுமல்ல பயன்பாட்டிலும் இது தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

குறிப்பாக, வேகமாகவும், ஆஃப்-ரோட் போன்ற கடினமான சாலைகளைச் சமாளிக்கும் திறன் கொண்டாதகவும் இந்த காரை மஹிந்திரா உருவாக்கி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஸ்கார்பியோ மற்றும் தார் போன்ற கார் மாடல்களுக்கு இணையான ஆஃப்-ரோடுகளை நேர்த்தியாக கையாளும் திறன் கொண்டதாக பிஇ 6-ஐ தயார் செய்திருக்கின்றனர்.

Gifted mahindra be 6 electric suv car pic

இத்தகைய திறன்மிக்க காரையே தற்போது கேரளாவின் வளர்ந்து வரும் தொழிலதிபர் தன்னுடைய மனைவிக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த மின்சார கார் ரூ. 18.90 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 26.90 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களிலேயே இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை 59 kWh மற்றும் 79 kWh ஆகும். இதில் 59 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ ரேஞ்சையும், 79 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 656 கிமீ ரேஞ்சையும் வழங்கும் திறன் கொண்டவை என்பது கவனிக்கத்தகுந்தது.

After husband gifting wife enjoys mahindra be 6 electric suv

பேட்டரி பேக்கில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டாலும், எலெக்ட்ரிக் மோட்டார் விஷயத்தில் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே மஹிந்திரா பிஇ 6 மின்சார காரில் வழங்கப்படுகின்றது. ரியர் வீல் டிரைவ் வசதிக் கொண்ட வாகனமாக மட்டுமே பிஇ 6 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

விரைவிலேயே அனைத்து வீல் இயக்கம் வசதிக் கொண்ட ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல கூடுதலாக சில பேட்டரி பேக் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இந்த காருக்கு மட்டுமல்ல மஹிந்திராவின் எக்ஸ்இவி 9இ மின்சார காருக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Husband gives car key to wife

மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ இரண்டையும் ஒன்றாக வைத்தே அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. ரூ. 21.9 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இரண்டிற்கும் ஒரே நாளிலேயே அது புக்கிங்கை தொடங்கியது.

அப்போது பிஇ 6 மாடலைக் காட்டிலும் எக்ஸ்இவி 9இ மாடலுக்கே அதிக எண்ணிக்கையில் புக்கிங் கிடைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அன்றே இந்த கார்களுக்கு நாட்டில் புக்கிங் தொடங்கியது. முதல் நாளிலேயே இரண்டு மாடல்களுக்கும் சேர்த்து 30 ஆயிரத்து 179 புக்கிங்குகள் கிடைத்தன.

இதில் 56 சதவீதம் எக்ஸ்இவி 9இ மாடலுக்கும், 44 சதவீதம் பிஇ 6 மாடலுக்கும் கிடைத்தவை ஆகும். இத்தகைய வரவேற்பையே நாட்டு மக்கள் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்இ 9இ மற்றும் பிஇ 6 கார் மாடல்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது ஏற்கனவே களத்தில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் எம்ஜி (MG) ஆகிய நிறுவனங்களுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

மின்சார கார் பிரிவை மிகப் பெரிய அளவில் இவர்களே ஆதிக்கம் செய்து வருகின்றனர். இவர்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுகங்கள் அமைந்திருக்கின்றன. தனித்துவமான தோற்றம், அட்வான்ஸ்டு அம்சங்கள் மற்றும் உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றைத் தாங்கியதாக இந்த இரு கார் மாடல்களையும் மஹிந்திரா தயார் செய்திருக்கின்றது. இதனால்தான் பிரபலங்களும் பணக்காரர்களும் இந்த காரை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். மஹிந்திரா நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மனைவியை அன்பா பாத்துக்கிட்டா, கணவன் வாழ்க்கை ஜெகஜோதியாக இருக்கும். ஆனா அவங்கள எப்படி அன்பா பாத்துக்குறது என்பதுதான் பலருக்கு தெரியாத ஒன்றாக இருக்கின்றது. ஒன்னுமே இல்லைங்க முக்கியமான நாட்களான கல்யாணமான நாள், அவர்களின் பிறந்த நாள் போன்றவற்றை ஞாபகம் வைத்து அந்த நாளில் முடிந்த தொகையில் சிறிய ஆச்சரிய பரிசை தந்தாலே அவர்களின் மனதில் இடத்தைப் பிடித்துவிட முடியும். இதையே கேரளாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலமும் இப்போது செய்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 29, 2025, 11:00 [IST]
English summary
Husband surprises wife with a brand new mahindra be 6 electric suv in heartwarming gesture
மேலும்... #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X