பிறந்த நாளுக்கு கணவர் சர்ப்ரைஸாக வழங்கிய பரிசால் ஆச்சரியத்தில் ஆழ்ந்த மனைவி... வைரலாகும் வீடியோ...
பிறந்த நாளை முன்னிட்டு கணவர் சர்ப்ரைஸாக வழங்கிய பரிசால் மனைவி ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விப்ட். இது ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விப்ட்தான் பிடித்தது.

இப்படி ஒரு சாதனை மகுடத்தை மாருதி சுஸுகி ஸ்விப்ட் பல முறை சூடியிருக்கிறது. இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருப்பதற்கு பல்வேறு முக்கியமான காரணங்கள் உள்ளன.

மலிவான விலை, நல்ல மைலேஜ், ஸ்டைலான தோற்றம் மற்றும் சிறப்பான இன்டீரியர் என இதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் இது.

இந்த சூழலில் கணவர் ஒருவர் தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு, மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரை அவருக்கு பரிசாக வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பாக Prateek Rathee
வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மாருதி சுஸுகி ஸ்விப்ட் மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் ஆகிய இரண்டு கார்களை இந்த தம்பதியினர் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துள்ளனர். அதன்பின்தான் மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரை தேர்ந்து எடுத்துள்ளனர்.

இந்த தம்பதியிடம் ஏற்கனவே கார் ஒன்று உள்ளது. ஆனால் தனது தினசரி பயணங்களுக்கு சிறிய கார் ஒன்று தேவை என மனைவி நினைத்துள்ளார். எனவே தன் மனைவிக்கு ஸ்விப்ட் காரின் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வேரியண்ட்டை கணவர் பரிசாக வழங்கியுள்ளார்.

இது ஓட்டுவதற்கும் சௌகரியமாக இருக்கும். தற்போது சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இத்தகைய சூழல்களில், மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை காட்டிலும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டுவது எளிது.

எனவே மக்கள் தற்போது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதன் காரணமாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்கள் உலகம் முழுக்க வெகு வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார், ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தனது ரகத்தில் மாருதி சுஸுகி ஸ்விப்ட் இலகுவானதாக உள்ளது. எனவே இதனை கையாள்வதும் மிகவும் எளிமையான ஒரு விஷயம்தான்.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார், பெட்ரோல் மற்றும் டர்போசார்ஜ்டு டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. அத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் என இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரில், 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதுதவிர 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷனும் ஸ்விப்ட் காரில் உள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, இரண்டு இன்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளன. அதே நேரத்தில் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ.4.99 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டீசல் வேரியண்ட்களின் விலை 5.99 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) இருந்து தொடங்குகிறது.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும், ட்யூயல் ஏர் பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. முன்னதாக யூ-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








