சும்மா ஷோரூம் போலாம்னு கூட்டீட்டு போயிட்டு கணவன் செய்த காரியம்! இந்த வீடியோ உங்க மனைவி கண்ல படாம பாத்துக்கங்க!

புதிய கார் வாங்கும்போது, நிறைய ஷோரூம் படிகளில் ஏறி, இறங்கி, விலை மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட தகவல்களை எல்லாம் விசாரித்து விட்டு வருவதே மனதிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கும். இதற்கு அடுத்தபடியாக டெஸ்ட் டிரைவ் செய்ய செல்லும்போது, அந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகும்.

ஆனால் டெஸ்ட் டிரைவ் செய்ய சென்ற உங்களுக்கு, திடீரென உங்கள் கணவரோ அல்லது மனைவியோ, புதிய காரை பரிசாக அளித்தால் எப்படி இருக்கும்? அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சி பெண் ஒருவருக்கு, அவரது கணவரால் தற்போது கிடைத்துள்ளது.

Husband Surprises Wife With Land Rover Defender

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. rashi_shah_sharma என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில், இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், லேண்ட் ரோவர் (Land Rover) ஷோரூம் ஒன்றுக்கு, ஒரு பெண்ணும், அவரது கணவரும், குழந்தையுடன் சென்றிருந்ததை நம்மால் பார்க்க முடிகிறது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் எனக்கூறி, அந்த பெண்ணை, அவரது கணவர் ஷோரூமிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு கவர் போர்த்தப்பட்டு ஒரு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை டெலிவரிக்கு தயாராக நின்று கொண்டிருந்தது.

Land Rover Defender

இதை பார்த்த அந்த பெண், இந்த காரை டெலிவரி எடுக்க போகும் நபர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார் என்று நினைத்துள்ளார். ஆனால் அது அவருக்கு பரிசாக வழங்கப்படுவதற்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த கார் என்பது பின்னர்தான் அவருக்கு தெரியவந்தது. ஆம், அந்த பெண்ணின் பிறந்த நாள் நெருங்கும் நிலையில், அதற்கு பரிசாக அவரது கணவர், மிகவும் விலை உயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வழங்கியுள்ளார்.

எனினும் அவருக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என்பதற்காக, டெஸ்ட் டிரைவ் செய்ய செல்லலாம் எனக்கூறி, தனது மனைவியை அவர் ஷோரூமிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு, இது பிறந்த நாள் பரிசு என கூறியதும், அந்த பெண் சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டார். இந்த நிகழ்வுகளை எல்லாம் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நம்மால் காண முடிகிறது.

இதற்கு பிறகு, தங்கள் குழந்தையுடன் சேர்ந்து, அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை டெலிவரி எடுத்துள்ளனர். இது புத்தம் புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஆகும். கடந்த ஜூலை 28ம் தேதிதான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 110 ஹெச்எஸ்இ (110 HSE) வேரியண்ட் ஆகும்.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 110 ஹெச்எஸ்இ வேரியண்ட்டில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 5.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் பரிசாக வழங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஒருவேளை இது 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக இருந்தால், எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 1.05 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.30 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு கார் பரிசாக கிடைத்திருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது வைரலாக பரவி வரும் இந்த கார் டெலிவரி வீடியோ, சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து, நாமும் இந்த நேரத்தில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை டெலிவரி எடுத்துள்ள இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளலாம்.

இதற்கிடையே ''இந்த வீடியோ என் மனைவி கண்ணில் சிக்கி விட கூடாது'' என நெட்டிசன் ஒருவர் இந்த வைரல் வீடியோவிற்கு நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார். அதே சமயம் மற்றொரு நெட்டிசனோ, ''நானும் இதே போல் என் மனைவிக்கு ஆல்டோ காரை பரிசளிக்க விரும்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 2, 2025, 14:02 [IST]
English summary
Husband surprises wife with land rover defender worth rs 1 30 crore viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+