காரை பெட்ரூமாக மாற்றிய இளம் ஜோடி! வீடியோவ பாக்கும்போதே ஒரு மாதிரி ஆகுது! இங்கிலீஷ் படம்லாம் ஓரமாதான் நிக்கணும்
இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். அதே நேரத்தில் இங்கு ஒரு சிலர் முட்டாள்தனமான வேலைகளையும் செய்து கொண்டுதான் உள்ளனர். இதற்கு காதல், நட்பு போன்ற பெயர்களை அவர்கள் சூட்டி கொள்கின்றனர். இந்த வரிசையில் காதல் என்ற பெயரில் முட்டாள்தனமான காரியம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது.
யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது உலா வருகிறது. இதில் இளம் வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண்ணை நம்மால் காண முடிகிறது. அனேகமாக அவர்கள் கணவன்-மனைவியாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவரும் காரில் பயணம் செய்து கொண்டுள்ளனர். அது ஜீப் (Jeep) நிறுவனத்தின் கார் போல் தெரிகிறது. இது அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். எஸ்யூவி (SUV) ரக கார்களை தயாரிப்பதில், ஜீப் நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) போன்ற கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதில், ஏதேனும் ஒரு காரில், இந்த தம்பதி பயணம் செய்திருக்கலாம். ஆனால் வழக்கத்திற்கு மாறான ஒரு பயணம்தான், நாம் இங்கே அவர்களை பற்றி பேசி கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.

ஆம், கணவன் காரை ஓட்டி கொண்டிருக்க, மனைவி அவரது மடியில் படுத்து கொண்டு பயணம் செய்கிறார். கணவனின் ஒரு கை, மனைவி மீது இருக்கிறது. எனவே ஒரு கையில்தான் அவர் ஸ்டியரிங்கை கண்ட்ரோல் செய்கிறார். கூடவே வீடியோவின் இறுதியில், அவர் சாலையில் இருந்து கண்களை எடுத்து விட்டு, மனைவியை முத்தமிடுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
இவர்கள் படுக்கை அறையில் செய்ய வேண்டியதை எல்லாம் காரில், அதுவும் பயணித்து கொண்டே செய்வதாக, இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மையில் இதையெல்லாம் அன்பு, காதல் என குழப்பி கொள்ள கூடாது. இது மிகவும் முட்டாள்தனமான செயல் ஆகும். டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால், கவனம் சாலையில் மட்டும்தான் இருக்க வேண்டும்.
ஒரு கையில் ஸ்டியரிங்கை கண்ட்ரோல் செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்திய சாலைகளில் எப்போது எது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. திடீரென ஆடு, மாடு போன்ற கால்நடைகள் குறுக்கே வரலாம். மனிதர்களும்தான். இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், இரு கைகளும் ஸ்டியரிங் மீது இருந்தால் மட்டுமே, பாதுகாப்பாக கண்ட்ரோல் செய்ய முடியும்.
இல்லாவிட்டால் விபத்துக்கள் நேரலாம். இந்த வீடியோவில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இருவருமே சீட் பெல்ட் அணியவில்லை. திடீரென சாலை விபத்துக்கள் நிகழும்போது, சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் படுகாயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படலாம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
அத்துடன் இதுபோன்ற பயணங்கள், ஏர்பேக்குகள் விரிவடைவதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே அன்பு, காதல் என்ற பெயரில் இதுபோன்ற முட்டாள்தனங்களை இனிமேல் யாரும் செய்ய வேண்டும். அதையும் மீறி செய்தால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சிலர் திரைப்படங்களை பார்த்து, இதுபோன்ற விபரீத காரியங்களில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலரோ வைரல் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக 'ரிஸ்க்' எடுக்கின்றனர். இவை இரண்டுமே தவறான எண்ணங்கள். வாகனங்களில் பயணம் செய்யும்போது, எக்காரணத்தை கொண்டும் விதிமுறைகளை மீறி, வித்தியாசமான காரியங்களை செய்ய முயற்சி செய்ய வேண்டும். நேரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.


Click it and Unblock the Notifications








